Monday, November 05, 2012

வின்னிங்க் பாயிண்ட்டில் ஒபாமா

அதிபர் தேர்தல் இறுதி நிலவரம்: திணறும் ராம்னி... வெற்றியின் விளிம்பில் ஒபாமா!


 Mitt Romney Heckled End Climate Silence

வர்ஜினியா பீச்(யு.எஸ்): ஒருவார காலமாக சான்டி புயல், அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களை மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்னியின் வெற்றி வாய்ப்புகளையும் முடக்கிப் போட்டுவிட்டது.



சான்டி புயலின் அறிவிப்பு வந்த நிலையிலிருந்தே அதிபர் ஒபாமா பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஒருநாள் முன்னதாகவே பிரச்சார பயணத்திலிருந்து, வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்ட அவர், நகர மேயர்கள், மாநில கவர்னர்களிடம் நள்ளிரவு தாண்டியும் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.



FEMA என்றழைக்கப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஆங்காங்கே மீட்புக்குழுவினரை தயார் நிலையில் வைக்கச் செய்தார்.



FEMA வேண்டுமா வேண்டாமா?
ஒபாமா தேர்தல் பணிகளிலிருந்து முற்றிலும் விலகி, அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ராம்னி. சான்டி புயல் சேத்த்திற்கு பிறகு, ஒஹயோவில் உதவிப்பொருட்களை சேகரிப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஐயாயிரம் டாலர்களுக்கு வால்மார்ட்டில் பொருட்கள் வாங்கி செஞ்சிலுவை அமைப்பிடம் கொடுத்தார்.




அவசரகால நேரத்தில் பொருடகள் வேண்டாம் பணமாகக் கொடுங்கள் என்று கூறி, செஞ்சிலுவைச் சங்கம் ராம்னியின் செயல்களை மூக்குடைத்துவிட்டது. அந்த் பொருட்களை தூக்கி செல்லுவதற்கு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவரிடம், 'தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்/ தேவையில்லை என்று முன்னர் கூறினீர்களே, இப்போதும் அதே நிலைதானா?' என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.



எந்த பதிலும் சொல்ல முடியாமல், அவரது ஆதரவாளார்களை நோக்கி எல்லோரும் உதவி செய்வோம் என்று சம்மந்தம் இல்லாமல் பதில் சொன்னார். ராம்னியின் FEMA குறித்த நிலை என்ன என்ற கேள்விகளுடன் இரண்டு நாட்கள் தேசிய தொலைக்காட்சிகளில் அதிகமாக விவாதத்திற்குள்ளானது.




கைவிரித்த நண்பர்
அதே சான்டி புயல் தாக்கிய நியூ ஜெர்ஸி மாநில குடியரசுக்கட்சி கவர்னரும், ராம்னியின் ஆத்ரவாளருமான கிறிஸ் கிறிஸ்டி, ஒபாமாவின் கட்சி சாராத அணுகு முறைக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒபாமா புராணம் பாடிவிட்டார். மேலும் ஒபாமாவுடன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ், ராம்னி நியூஜெர்ஸிக்கு வரத்தேவையில்லை என்றும் கூறிவிட்டார். எதிரணியினருடன் இணைந்து செயல்படாதவர் ஒபாமா என்று குறை சொல்லிக்கொண்டிருந்த ராம்னிக்கு, அவரது நண்பரே பதில் கொடுத்து மூக்குடைத்துள்ளார்.




சுற்றுச்சூழலை பாதுகாப்பாரா ராம்னி?



இந்நிலையில் சான்டி புயலால் பாதிப்படைந்த, கடும் போட்டி நிலவும் மாநிலமான வர்ஜினியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற ராம்னியை சான்டி மேலும் துரத்தியது. சுற்றுச்சூழலை பாதுகாத்து புவி வெப்பமயமாதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுத்து வருகிறார்.



ராம்னியோ சுற்றுச்சூழல் பற்றி கவலை இல்லை என்ற ரீதியில் ‘உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தான் கவலை' என்று கூறியிருந்தார். சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும், புவி வெப்பமயமாகிதாலும் தான் சான்டி புயல் வந்ததாக நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் கூறியிருந்தார்.



மேலும் சுற்றுச்சுழல் மேம்பாட்டிற்காக ஒபாமா செயல் திட்டம் நிறைவேற்றுவதால் தான் அவரை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.



வர்ஜினியா பீச்சில் ராம்னியின் பிரச்சாரத்தில், இதே கருத்தை வலியுறுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ‘ சுற்றுச்சூழல் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவும்' என்று பேனர் காட்டி, முழக்கமிட்டார்.



நேருக்கு நேராக நின்று இப்படி ஒருத்தர் கேள்வி கேட்பார் என்று ராம்னி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதால், செய்வதறியாது திகைத்தார்.. ராம்னியின் பாதுகாவலர்கள் அந்த சுற்றுச்சூழல் ஆர்வலரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகே வழக்கமான பிரச்சார பேச்சை ஆரம்பித்தார். முன்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவரது பேச்சில் சுவாராஸ்யம் குறைந்தே காணப்பட்டது.



'எதிரி நாட்டில்' ராம்னியின் மகன்!


இதற்கிடையே, ராம்னியின் மகன் மேட் ராம்னி கடந்தவாரம் தொழில் ரீதியாக ரஷ்யா சென்று வந்துள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள தனது ரியல் எஸ்டே நிறுவனத்திற்கு முதலீடு திரட்டுவதற்க்காக இந்த பயணம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்கிறீர்களா? சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் மிக்ப்பெரிய எதிரி யார் என்று ராம்னியிடம் கேட்ட போது ‘ரஷ்யா' என்று பதில் சொல்லியிருந்தார்.



ராம்னியின் கூற்றுப்படி எதிரியாக கருதப்படும் நாட்டில் தொழில் ரீதியாக நட்பு தேடுகிறார் அவரது சொந்த மகன்.



ராம்னி முன்பு சொன்ன வார்த்தைகளே, தேர்தலின் கடைசிக் கட்ட நேரத்தில் அவருக்கு எதிராக திரும்புவதால், செய்வதறியாது திகைக்கிறார் ராம்னி என்றே சொல்லலாம்!



புதிய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு வெற்றி!



இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர்நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து ஒஹயோவில் நடத்திய கருத்து கணிப்பில் ராம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீதமும், ராம்னிக்கு 47 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.



தேர்தல் நாளன்று இந்த வித்தியாசம் 10 சதவீத அளவுக்கு ஒபாமாவுக்கு சாதகமாக அமையும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.



நன்றி -தமிழ்.ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

0 comments: