Monday, November 26, 2012

ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர் , பாதாம் கீர்


Photo: காலியாகி கொண்டிருக்கும் என் பர்ஸ் ..கவலையின்றி பசங்க!இடையே இடையே விடுமுறைகள் வந்தாலும் ,இந்த வருட கடைசி விடுமுறைதான் அதுகளுக்கும் புடிச்சிருக்கு.ஹோம்வெர்க் எல்லாம் செய்ய வேண்டாம், .அடுத்த வருசம் புத்தகங்கள் இன்னும் வாங்கலையே?
1. டியர் ! டெய்லி பஜ்ஜி சாப்பிட்டா முகத்துல பிம்பிள்ஸ் வந்துடுமா? 
அது தெரில , ஆனா உனக்கு தொப்பை வரும், எனக்கு காசு பற்றாக்குறை வரும் ---------------------------


2. உங்க வீட்ல எப்பவும் சண்டையும் , சச்சரவுமா இருக்கே, ஏன்? எங்கம்மா அஜித் ரசிகை , என் மனைவி விஜய் ரசிகை 
---------------------3. பல் துலக்கும்போது எல்லாரும்  வீதில நின்னு துலக்கறாங்க , ஆனா நீ மட்டும் பாத்ரூம்லயே துலக்கி முடிச்சுடறியே?  யார் கிட்டேயும் பல்லை காட்டி நின்னா என் கணவருக்கு பிடிக்காது 
-------------------4. மேடம், ஜப்பான் அழகி பட்டம் குடுத்தது சந்தோஷமா? 

 ம் ம் , ஆனா அதுக்கு செலவு தான் 20 லட்சம் ஆகிடுச்சு ----------5.  125 கோடிக்கு சரக்கு வித்தே ஆகனும், இதான் டாஸ்மாக் டார்கெட்  விக்க முடியலைன்னா  டாஸ்மாக் ஊழியர்களே குடிச்சு அக்கவுண்ட்ல எழுதிக்குங்கன்னு சொல்ல ப்போறீங்களா? -------------------Photo: தமிழ்நாட்டு மின்சாரம் போல என் லாப்டாப்பும் விட்டு விட்டு கனெக்சன் ஆகுது??எல்லாம் யாருடைய வயித்தெரிச்சலோ??மீ பாவம்!ஆஅனாலும் மொக்கைகள் தொடரும்.மின்சாரம் இல்லாமல் வாழும்போது..விட்டுவிட்டு வரும் நெட் கனெக்சன் என்ன பெரிய தைடையா
பூச்சோங்கில் அடை மழை.
இனிய மாலை வணக்கம் .


6 . ஒரு கோடிக்கு எத்தனை சைபர்னு கூட எனக்குத்தெரியாது 


 இந்த காரணத்துக்காக எல்லாம் ஊழல் வழக்குல இருந்து உங்களை ரிலீஸ் பண்ணிட முடியாது -------------------------


7. என்னது? கடைசில இவதான் உன்னோட சம்சாரமா? 


 நோ நோ ஆரம்பத்துல இருந்தே அவ தான் என் சம்சாரம் ---------------


8. டாக்டர், என் மனைவி என்னை மதிப்பதே இல்லை 


 விடுங்க, எந்த வீட்ல எந்த பொண்டாட்டி தன் புருஷனை மதிச்சிருக்கா? 

-----------------


9.  காதலின் மையப்புள்ளி நட்புன்னு எப்படி சொல்றே?


 புள்ளி வெச்சுக்கோலம் போடும் பொண்ணு எனக்கு நட்பாச்சு , இப்போ காதல் ஆகிடுச்சு 
----------------10. டியர் ! நீங்க என்னை மட்டும் தானே லவ் பண்றீங்க 

 உன்னையும் 
-----------------Photo: தவறியது தந்தையோ தனயனோ தமக்கையோ??தப்பு தப்புதான்..தரணியை ஆளும் தயாபரனாக  இருந்தாலும்,த்ண்டனை பொதுதான்? பேசியதுக்கு ...வெயிட் பண்ணியே ஆகனும்???ஒட்டா இருந்தால் என்ன உறவா இருந்தால் என்ன??wait for your turn ?


11 ரேஸ் பைக்ல வேகமாப்போன நீங்க ஏன் வேகத்தை திடீர்னு குறைச்சுட்டீங்க? 


 மித வேகம் மிக நன்றுன்னு போர்டு பார்த்தேன் 
------------------12. எதுக்காக இப்போ ஆம்புலன்ஸ்க்கு  ஃபோன் பண்றே?


 என் மாமியார்க்கு ஐம்புலன்சும் அடங்கிடுச்சு 

-----------------


13. -சார் ! உங்க நடிப்பை ஈசியா டாமினேட் பண்ணிடுச்சு 


 எது? 


 கூட நடிச்ச நாய் டாமி தான்  --------------------------


14. உன் கூந்தல் வளர கொள்ளு டெய்லி சாப்பிடறியா? ஏன்? 

 நான் போடறது குதிரை வால் கொண்டை ஆச்சே?
---------------------------


15. ஆஸ்கார் அவார்டு  ஏன் வேணாம்னு சொல்லீட்டீங்க? எனக்கு சுகர் இருக்கு , டாக்டர் அஸ்கா அவாய்ட் பண்ணனும்னு சொல்லீட்டார் 
--------------------Photo: நெல்லுக்கும் உமி உண்டு,நீருக்கும் நுரை உண்டு.புல்லுக்கும் பூவிதழ் உண்டு.
(சற்றுமுன் இதைச் சொல்லி என் மகள் ,எனக்கு அறிவுறுத்துகிறாள்)வீட்டு வேலைகள்செய்ய தெரியவில்லைன்னு பாட்டியிடம் கோல் முட்டியதால்?


16. தலைவரே! ஆண்டவனுடன் மட்டும் தான் கூட்டணின்னு எப்படி சொன்னீங்க தில்லா?  அதாவது தமிழ் நாடை ஆ;ல்ரெடி ஆண்டவருடன் ஆளூங்கட்சியுடன் கூட்டணின்னு அர்த்தம் ---------------------------17. சலூன்ல பாப் சாங்க் கேட்குதே? 


 பாப் கட்டிங்க் பண்றப்ப  பாப் சாங்க் போட்டு விடுவாராம் --------------------------


18. டாக்டர் ! ஒரே மாசத்துல 10 கிலோ வெயிட் குறைக்க ஏதாவது வழி இருக்கா?  ஒரு கையை மட்டும் கட் பண்ணி ஆபரேஷன் பண்ணிடலாமா? -----------------------------


19. புதுசா இப்போத்தான் பைக் வாங்கறீங்களா? 


 ஆமா எப்டித்தெரியும்? ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர் எப்டி போடனும்னு சொல்லிக்குடுத்துட்டு இருக்கேன், இதுல பாதாம் கீர் எதுன்னு கேட்டா எப்படி? ---------------------------------------------


20. ரவையை ஏன் விழுங்குனே? 


 வெ:ளீல வற்றப்போ அது  வைரமா வரும்னு ஒரு நம்பிக்கை தான் ----------------------------------
3 comments:

நம்பள்கி said...

இப்ப, 2012-ல், 20 லட்சம் காசு ஒரு ஜூ ஜூ பி; நான் அப்பவே, 15 வருட்ங்ளுக்கு முன்பு, ஒரு கோடி கொடுத்தேனே...!

நம்பள்கி said...

மேலே குடுத்த கமென்ட் ஜப்பான் அழகியை ஒட்டி...அதாவது, No. 4. சிபி ஜோக்குக்கு...

aavee said...

சபாஷ்.. சரியான காமெடி..!