Monday, November 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 20



இனிய காலை வணக்கம் நண்பர்களே..


2012/10/22 சசி மோகன் குமார்

1.திரைப்படம் இயக்கும் எண்ணம் உண்டா ?  அட்லீஸ்ட் ஒரு குறும்படமாவது 


கண்டிப்பா. ஆனா அதுக்கான முன் அனுபவம் இல்லை. எந்த இயக்குநரிடமாவது உதவி இயக்குநரா பணி ஆற்றி தொழில் கத்துக்க குடும்ப சூழல் இடம் தர்லை. குறும்படம் இயக்குவது உறுதி. ஆனாலும் எப்பவும் என் கண் , மூளை எல்லாம் சினிமாப்படம் பற்றிய தாகத்தில் இருக்கும். வாய்ப்பு வரட்டும் ஐ ஆம் வெயிட்டிங்க் ;-)) 







2.உங்கள் வாசிப்பு பழக்கம் எப்போது இருந்து ஆரம்பித்தது ? யாருடைய எழுத்துகளுக்கு நீங்கள் ரசிகன் 


நான் அஞ்சாங்கிளாஸ் படிச்சப்பவே காமிக்ஸ் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சுட்டேன். லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , ராணி காமிக்ஸ் அப்டினு. அம்புலிமாமா , பாலமித்ரா, பூந்தளிர் முதல் கொண்டு சரோஜா தேவி , சினிமித்ரன், இந்து நேசன் வரை எல்லா வகை புக்ஸும் படிச்சேன்.

 சுஜாதா ,கு அழகிரிசாமி , புதுமைப்பித்தன், பி கேபி , சுபா , ராஜேஷ் குமார்ல இருந்து எல்லா எழுத்தும் ரசிச்சு படிச்சாலும் ஆல் டைம் ஃபேவரைட் அமரர் சுஜாதா 



3.கேபிள் சங்கரை போல்  புத்தகம் போடும் எண்ணம் இருக்கிறதா ?




கண்டிப்பா , என் முதல் திரைப்பட முயற்சி “ கோவை ப்ரீதி கொலை வழக்கு” , சின்மயி சைபர் க்ரைம் கேஸ்  ஆகிய 2 புத்தகங்கள் போடும்  ஐடியா உண்டு. டாப் டென் சினிமா விமர்சனங்கள் , பெஸ்ட் திரைக்கதை , ஆகிய தலைப்பில் மேட்டர் ரெடி . ஆனா அதுக்காக பணம் செலவளிக்கும் எண்ணம் இல்லை. ஏதாவது பதிப்பகம் என் எழுத்தின் மேல் நம்பிக்கை வைத்து  வாய்ப்பு கொடுத்தால் புக் வெளியிடத்தயார்



4.உங்கள் மனதை மிகவும் மனதை பாதித்த விஷயம் ஒன்று




என் அப்பாவின் மரணம் தான். அப்போது எங்க வீட்டில் தொலை பேசி , அலைபேசி வசதி இல்லை. அம்மா, அப்பா சென்னிமலையில். நான் ஈரோட்டில். என்னிடம் அலை பேசி வசதி இருந்தது. அப்பாவுக்கு திடீர் என ஹார்ட் அட்டாக் ஏற்பட்டபோது அம்மா தகவல் தொடர்புக்கு மிகவும் சிரமப்பட்டார்கள்..


 என் நண்பர்கள் 2 பேர் சென்னிமலையில் டாக்டர்களாக, மெடிக்கல் ஷாப் ஓனர்களாக இருக்காங்க.. அம்மாவுக்கு ஒரு செல் ஃபோன் வாங்கிக்கொடுத்திருந்தா , அவசரத்துக்கு இவங்க ஃபோன் நெம்பர்  வெச்சுக்கோன்னு குடுத்திருந்தா ஒரு வேளை அப்பாவின் மரணத்தை தள்ளிப்போட்டிருக்கலாம். இது என் மனதில் ரொம்ப நாளாக குற்ற உணர்ச்சியாக தங்கி இருக்கு.


என் வாழ்வின் படிப்பினை - அனைவரும் அவரவர் பெற்றோருக்கு செல் ஃபோன் வாங்கிக்குடுத்து அதை உபயோகிக்கும் முறை கற்றுக்கொடுப்பது அவசியம் ;(((




..?சந்தோஷமான விஷயம் ஒன்று ? கூறவும்


2000 ஆம் ஆண்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்‌ஷனில் குமுதம் வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது, மீண்டும் 2012 ஆம் ஆண்டின் தீபாவளி டைமில் அதே ரேங்க்கில் செலக்ட் ஆனது 






5.சந்திக்க விரும்பும் பிரபலம் யார் ?




யாரும் இல்லை. என் வாழ்வில் நடந்த பல கசப்பான அனுபவங்கள் அறிவுறுத்தும் விஷயம் 1 தான் . பிரபலங்களை தூர நின்று ரசி . அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டால் நம் மனதில் அவர்கள் பற்றிய பிம்பம் கலைந்து விடும்

 
6.அரசியல் பிடிக்குமா ? ஏன் அரசியல்  பதிவுகளை போடுவதில்லை அரசியல்வாதிகளை விமர்சிப்பது இல்லை   பயமா? 



அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்களாக இருக்காங்க. கக்கன் , காமராஜர் காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அரசியல்வாதிகளை தாக்கி பல பதிவுகள் , ட்வீட்கள் போட்ட்டுட்டுதான் இருக்கேன் 




7.நெகிழவைத்த திரைப்படம் எது, பிடித்த நடிகர், நடிகை  இயக்குனர் யார் ?



 உதிரிப்பூக்கள். நான் பார்த்த செயற்கைத்தனமே இல்லாத படம் .


ரஜினி, கமல் , அஜித், விஜய்  உட்பட எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ராமராஜன் , பவர் ஸ்டார் பிடிக்காம இருந்தது. விஜய் டி வி சர்ச்சையில் அவர் அணுகுமுறை என்னை மாற்றி விட்டது

 நடிகைகள் 18 டூ 25 எல்லாரையும் பிடிக்கும். யாரையும் ரிஜக்ட் பண்ற பழக்கம் எனக்கு இல்லை

 இயக்குநர் மணி ரத்னம்



8.ஒரு நாள் முழுக்க உங்களால் மொபைல் , கம்ப்யூட்டர் , புத்தகம் , இல்லாமல் இருக்க முடியுமா ?


 பல நாள் இருந்திருக்கேனே? பதிவுகள் போடுவது பெரும்பாலும் என் நண்பர்கள்தான். சனி, ஞாயிறு மட்டும் ஒரு வாரத்துக்கான பதிவுகள் தயாராக வைத்துக்கொள்வேன். பணி நாட்களில் அவங்க தான் போஸ்ட் போடுவாங்க. என் பிளாக் பாஸ்வோர்டு 32 பேர்ட்ட இருக்கு 




9.ஜோக்ஸ் , எழுதுவது போல் ஏன் உங்களால் பத்திரிக்கைகளுக்கு  கட்டுரைகள் எழுத முடிவதில்லை ?


 சோம்பேறித்தனம் தான். ஜோக் ஜஸ்ட் எ செகண்ட்ல எழுதிடலாம். கட்டுரை, கதை எழுத 1 மணி நேரம் ஆகுது. இனி முயற்சிக்கனும். 2013ல ட்ரை பண்றேன்




10.சினிமாத்துறையில் இருந்து அழைப்புகள் ஏதும் வந்ததா ? வசனம் எழுத சொல்லி .....



பல வருடங்களுக்கு  முன் உன்னை நினைத்து எடுத்த பட க்ரூப் சகியே சகியே படம் பண்ண காமெடி டிராக்  எழுத அழைத்தார்கள். விவேக்கிற்கான காமெடி ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி குடுத்தேன் அட்வான்ஸ் ரூ 5000 குடுத்தாங்க. சம்பளம் ரூ 25,000 பேச்சு அப்புறம் என்னாச்சுன்னு  தெரியலை. அட்ரஸ் காணோம்/./



11.எப்போ கல்யாணம் நடந்தது ? கல்யாண கலாட்டா ஏதும் இருந்த கூறவும் (பர்சனல் என்று தவிர்க்க வேண்டாம் )




2002 ஆம் வருடம் டிசம்பர் 9 ஆம்  தேதி ஈரோட்டில் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது.மேரேஜ்க்கு காலேஜ் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் வந்திருந்தாங்க. எனக்கான கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட்டத்தைப்பார்த்து பெண் வீட்டில் அரண்டுட்டாங்க.. மாப்ளை ஏகப்ப்ட்ட லேடீஸ் சகவாசம் உள்ளவன் போல என./..


 மேரேஜ் ஆனதும் ஹோம் மினிஸ்டரிடம் வந்த முதல் உத்தரவு கட் ஆல் கேர்ள் ஃபிரண்ட்ஸ் 





12. ஒருவரை விமர்சித்து விட்டு வருந்தியதுண்டா ?


 பொதுவா அப்படி யாரையும் விமர்சித்ததில்லை. ஆனா ட்விட்டர்களை கலாட்டா பண்ணி போட்ட 2 பதிவுகளில்  ஒரு பதிவு சம்பந்தப்பட பெண் ட்வீட்டரை மனம் வருந்தச்செய்ததை அறிந்தேன். பதிவு போட்டு ஒரு வாரம் கழித்து பர்சனல் மெயிலில் அவர் தொடர்பு கொண்டு அந்தப்பதிவை நீக்கசொன்னார். உடனே வருத்தம் தெரிவித்து நீக்கி விட்டேன் .

 பின் சென்னை ட்வீட்டப் பற்றிய பதிவில் பெண் ட்வீடர்களை கிண்டல் பண்ணி எழுதப்பட்ட சில வரிகள் பின் நீக்கி விட்டேன்.


 பொதுவா நான் எதுக்கும் வருந்துவதில்லை. ஆனா அதே சமயம் யாராவது மனம் வருத்தப்பட்டா, அதுக்குக்காரணமா என் பதிவு இருந்தா அதை நீக்க என்றும் தயங்கியதில்லை.


 மத்தவங்களை சந்தோஷப்படுத்தவே எழுதறோம். எதுக்கு மன வருத்தம் ?





13.வேலையில் எப்படி புலியா ? பூனையா ?


 வேலையில் ரொம்பவே ஷார்ப் . கட் அடிச்சுட்டு படம் பார்த்துட்டு இருந்தாக்கூட லேப்டாப்பில் ஆஃபீஸ் ஒர்க் பண்ணிட்டு தான் இருப்பேன். பொதுவா எல்லாப்படமும் (பெரும்பாலும்) இடைவேளை வரைதான் பார்ப்பேன். போர் அடிச்சா ஆஃபீஸ் வேலை பார்ப்பேன்





14.ஒரு நாள் மட்டும் இன்னாராக நீங்கள் மாறலாம் என்று வாய்ப்பு கிடைத்தால் யாராக மாறுவீர்கள் ?




ஹாலிவுட் பட  இன்வி”சிபி”ள் மேன் - காரணம் - ஹி ஹி ஹி


 
15. நமீதாவுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் ?.ரஜினிக்கு அப்பாவாக நடிக்க கூப்பிட்டால் ? இரண்டில் எதை  தேர்வு செய்வீர்கள் ?




இதுல என்ன சந்தேகம் ? ஆறடி உயர ஆல்ஹஹால் நமீதாவுக்குத்தான் ஜோடி. இதுதான் சாக்குன்னு டச் பண்ணி பார்த்துக்கலாம். ஐ மீன் ஜஸ்ட் டச்சிங்க் ஒன்லி..



16.டிவி காம்பியரிங் செய்ய வாய்ப்பு வந்தால் ?


 முயற்சித்துக்கொண்டு இருக்கேன், வாய்ப்பு கிடைத்தால் பயன் படுத்திக்கொள்வேன் . என் குரல் கொஞ்சம் கர கரப்ரியா. அதனாலதான் யோசிக்கறேன். ஆனா  சினிமா விமர்சனம் செய்யும் வாய்ப்புக்கு சிலரை அணுகி இருக்கேன். விரைவில் வெற்றிச்செய்தி வரும் // 

 அப்படி வாய்ப்பு வந்தால் சினிமா விமர்சனத்தில் ஒரு புதுமையான பாணியை புகுத்திய ஆள் என பெயர் பெறுவேன் என்ற நம்பிக்கை உண்டு







இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

இதன் 19 ஆம் பாகம் படிக்காதவர்கள்   http://www.adrasaka.com/2012/10/19.html





2 comments:

Unknown said...

''பொதுவா எல்லாப் படத்தையும் இன்டர்வெல் வரைதான் பார்ப்பேன்'' இப்படி பார்த்துதான் விமர்சனம் எழுதுறீங்களா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உ(ங்கள் உ)ள்ளக் கருத்துக்களை பேட்டியின் வாயிலாக அறிய முடிந்தது.