Monday, November 12, 2012

தீபாவளி ஸ்பெசல் ஜோக்ஸ் பாகம் 1

1. லட்சுமி வெடி 1 தானே கேட்டேன், எதுக்கு 8 தர்றீங்க?


 இது அஷ்ட லட்சுமி வெடிங்க------------------


2. எங்கப்பா விஜய் ரசிகர்ங்கறதால பட்டாசு எதும் வாங்கித்தர்லை

 அப்புறம்?வெறும் துப்பாக்கி மட்டும் தான் வாங்கித்தந்தாரு---------------------3. பட்டாசுக்கடைக்காரர் கிராமத்தான்ன்னு எப்படி சொல்றே?


 ஓலை பட்டாசு ஒரு பாக்கெட் குடுங்கன்னு கேட்டா பனை ஓலையா? தென்னை ஓலையா?ன்னு கேட்கறாரே?--------------------


4. புலி மார்க் பட்டாசு , சிங்கம் மார்க் பட்டாசு எதும் வேணாமா? ஏன்?


 அதைப்பார்த்ததும் எங்கப்பாவுக்கு மார்க் ஞாபகம் வந்துடும் , என் மார்க் என்ன?னு கேட்டு அடிப்பாரு---------------


5. சஹானா வெடியா? இதுல என்ன விசேசம்?


 ஒரு டைம் பத்த வெச்சா 50 டைம் வெடிக்கும்-----------------


6. அந்த சாமியார் ரஜினி ரசிகர்னு எப்படி சொல்றே?


 கோச்சடை”யான்”  பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்கறாரே?-------------------


7.  லட்சுமி வெடி தீர்ந்திடுச்சா? அடடா? இப்போ என்ன பண்ண?


அவங்க பொண்ணு ஐஸ்வர்யா வெடி இருக்கு  தரவா?------------------


8.விஸ்வரூப வெடின்னு சொன்னீங்க, சின்னதாத்தானே இருக்கு?


இங்கே பத்தவெச்சா ஃபாரீன்ல போய் வெடிக்கும்------------------


9. கோச்சடையான் பட்டாசுகள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்கீங்க, ஆனா பட்டாசே இல்லையே?எல்லாம் அனிமேஷன் தான். திரி பற்ற வைக்க தேவை இல்லை , மவுஸ் ஆன் பண்ணா பட்டாசு வெடிச்ச மாதிரி அனிமேஷன்ல காட்டும்
----------------------


10. பாம்பு மாத்திரை பாக்கெட்க்குள்ளே ஏதோ பிரிஷ்கிரிப்ஷன் ஷீட் இருக்கே? சாப்பிடுவதற்கு முன் பற்ற வைக்க வேண்டியது எது?  சாப்பிட்ட பின் பற்ற வைக்க வேண்டிய மாத்திரை எது?ன்னு அதுல நோட்ஸ் இருக்கும்----------------------


11. தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுத்து குடுத்தும் உன் சம்சாஎஅம் அதை வாங்கிக்கலையா? ஏன்/

 ஆல்ரெடி அவ பீரோவுல வெச்சிருந்த புடவையை எடுத்து கொடுத்தேன்---------------------


12. சுருள் கேப் வெடி வேணாம்னு சொல்றானே உன் பையன் ஏன்? அவனுக்கு கேப் டன்ன்னா அலர்ஜி---------------------------


13. பட்டாசுக்கடைக்காரர்  ஏன் கடுப்பா இருக்கார்? துப்பாக்கி வாங்க வந்த ஆள் அதுக்கு லைசன்ஸும் கேட்டானாம்--------------------


14. எலக்ட்ரிக் பட்டாசு ஸ்டாக் இல்லையா? ஏன்? கரண்ட்டே இல்லை , . எலக்ட்ரிக் பட்டாசு இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?-------------------


15. ரயில் வெடி தீர்ந்துடுச்சு சாரி


 அட்லீஸ்ட் தட்கல்ல கிடைக்குமா?------------------


16. ஓலை பட்டாசு வெடிக்க மாட்டேன்னு தலைவர் வீராவேசமா அறிக்கை விட்டிருக்காரே?பனை ஓலை பட்டாசு வெடிச்சா அது விவசாயிங்களை பாதிக்கும்கறார்---------------------


17. பொட்டு வெடி ஒரு பாக்கெட் குடுங்க குங்குமப்பொட்டு வெடியா? ஸ்டிக்கர் பொட்டு வெடியா?
-----------------


18. அணு குண்டு வெடி மட்டும் தாங்க இருக்கு,. நீங்க கேட்கற மாதிரி அனு ஒல்லி வெடி எல்லாம் இல்லை
-------------------


19.  தலைவரு திருந்த  வாய்ப்பே இல்லைனு எப்படி சொல்றே?


நரகாசுரன் கொலை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, ஆளுங்கட்சிக்கு இதில் தொடர்பு உண்டா?ன்னு கேட்கறாரு-------------------


20.விஜய் ரசிகர்கள் வாங்கிட்டுப்போக துப்பாக்கியும், கார்த்திக் ரசிகர்கள் வாங்கிட்டு போக இரட்டைக்குழல் துப்பாக்கியும் வெச்சிருக்கோம்
-----------------


21. அந்த தவுசண்ட் வாலாவில் என்ன ஸ்பெஷல்? அது கா ஜில் அகிர்ர்ர்ர் வாலா வெடி சார். வெடிச்சா கிளாமர் ஃபோட்டோக்களா வந்து விழும்-------------------


22. பட்டாசு திரியை கிள்ளும்போது கிளுகிளுப்பா இருக்கா? ஏன்? 


 த்ரிஷா இடுப்பையே கிள்ளற மாதிரி ஒரு ஃபீலிங்க்
------------------------


23. பென்சில் வெடியை ஏன் ஃபிரிட்ஜுக்குள்ளே வைக்கறே?


பென் சில் வெடின்னா ஃப்ரீசர்ல இருந்தாத்தானே சில்லுன்னு ஆகும்?---------------------


24. சீ ஃப்ரூட் வெடியா? புதுசா இருக்கே?

 சமுத்திரக்கனி வெடின்னு புது பேரு . சாட்டை வெடி தான்---------------------


25.  கம்பி மத்தாப்பு ஸ்டாக் இல்லைங்க ரானா டார் முறுக்கு கம்பி மத்தாப்பாவது இருக்கா?----------------------------
-------------------

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!