Sunday, November 04, 2012

வாலிப வயோதிக அன்பர்களே!


1. ஹலோ சதீஷா? எங்கேப்பா இருக்கே?

நெட்ல...,

நீ மாணவனா? மீனவனா?

..............................
.........................................

2. இரண்டாம் கட்ட தலைவர்களை நீங்க மதிக்கிறதில்லையாமே?! ஏன் தலைவரே?

முதல் கட்டத்துலயே ஃபுல்லா சரக்கை அடிச்சுடனும், 2வது, 3வது ரவுண்டுன்னு இழுக்க கூடாது.

...............................................

3. நான் காந்தி கிடையாது. ஆனா, காந்தியவாதின்னு தலைவர் குழப்பறரே?

13 வயசுலயே கல்யாணம் கட்டிக்கிட்டாராம்.

.................................................................................


4. தலைவர் டாஸ்மாக்ல தில்லாலங்கடி வேலை பண்ணிட்டாராமே ஏன்?!

எல்லாம் ஒரு கிக்குக்காகத்தான்.

....................................................................................

5. பச்சை தமிழந்தான் நீ! ஒத்துக்கொள்கிறோம்.

அதுக்காக சிக்னலில் எந்த விளக்கு எரிந்தாலும் அதை பச்சை என்று நினைத்து நிற்காமல் பறக்கிறாயே உனக்கு நிறக்குருடா?!

.......................................................................

எங்கண்ணன் படிக்காத மேதை..., ஆனா, கலர் கலரா டிரெஸ் போடுவார்..,

ஓஹோ ராமராஜன் மாதிரின்னு சொல்லு..

........................................................

7.  அந்த டாக்டருக்கு மனசுக்குள்ள பெரிய ஜவுளிக்கடை ஓனர்ன்னு நினைப்பு...,

ஏன்?

போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சுது. அள்ளிட்டு போக ஆர் யூ ரெடின்னு கேட்குறாரு...

..................................................................

8. தலைவருக்கு புதுசு புதுசா சந்தேகம் வருது..

என்னனு?

ஜீன்ஸ் ஐஸ்வர்யா ராய்க்கு இருந்த மாதிரியே எந்திரன் ஐஸ்வர்யா ராய்க்கு எடை 50 கேஜிதானா?ன்னு

.......................................

9. தலைவர் அரசியலை விட்டு விலகி பிஸினெஸ் பண்ணப் போறாராமே?

ஆமா, சுருட்டு வியாபாரம்.
................................................................

10. தலைவருக்கு மகளிர் அணி தலைவி மேல வெறி வந்துடுச்சாம்.

அதுக்கா, வரி விளம்பரம் போல வெறி விளம்பரம் தரனுமா?
----------------------------


11. என்னடா? எல்லா சப்ஜெக்ட்லயும் சிங்கிள் டிஜிட்ல மார்க் எடுத்திருக்கே?


 ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம், இதுதான் சார் என் பாலிசி
12. நேர்மா, நிரைமா , புளிமா அடுத்து என்னடா?

 அரிமா சார்13. டீச்சர், காஞ்சனா 65 % மார்க் வாங்கி இருக்கா, புவனா 87 % மார்க் வாங்கி இருக்கா, இதுல ஏதோ ஊழல் இருக்கு


 எப்படி சொல்றே?


 பெண்களுக்கு 33% தானே ஒதுக்கி இருக்காங்க?14. மகாபாரதக்கத்கதைல இருந்து  நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்ன?


சூதாட க்ளப்புக்கு போறப்ப கூட நம்ம சம்சாரத்தை கூட்டிட்டு போகக்கூடாதுன்னு தெரியுது சார்.
15. ராமன் ராவனனை கொன்றான், இது செய் வினையா? செயப்பாட்டு வினையா?

 2ம் இல்லை, சார், இது ராமன் செஞ்ச தீ வினை16. த்லைவர் - எங்க ஊர்ல ரோஸி ரோஸினு ஒரு குட்டி இருந்தது..


 தலைவரே, குட்டிக்கதைதான் சொல்லனும், குட்டிங்க கதை எல்லாம் சொல்லக்கூடாது
17. தலைவர் குழந்தைக்கு - கல் வீசம்மா கல் வீசு , மேடையை கலைக்கலாம் கல் வீசு
18. தலைவரோட சொந்த ஊரு பழநி அல்லது சேலம்னு எப்படி கெஸ் பண்றே?


 வாலிப வயோதிக அன்பர்களே!  அப்டினு மேடைல பேச ஆரம்பிக்கறாரே?19. தலைவர் எதுக்காக 2 கைலயும் லேடீஸ் மாதிரி மருதாணி வெச்சிருக்காரு?


 கொடுத்து கொடுத்து சிவந்த கரம்னு பேர் எடுக்க20. ஆட்சிக்கு வந்தா என்ன செய்வீங்க?


 ஆட்சிக்கு வர என்ன வேணும்னாலும் செய்வோம், ஆனா  ஆட்சிக்கு வந்துட்டா ஊழல் மட்டும் தான் செய்வோம்

1 comments:

Unknown said...

அனைத்து நகைச்சுவையும் அருமை !