Thursday, November 22, 2012

மணப்பெண் = குத்து விளக்கு , மாப்ளை = விளக்கெண்ணெய் . வாட் ஈஸ் த ரிசல்ட்?

1. காலேஜ் ஃபேர்வெல் பார்ட்டிக்கு ஏன் போகலை?

நல்ல ஃபேரா(fair) அழகா இருக்குறவங்க மட்டும் கலந்துக்குற நிகழ்ச்சின்னு
நினைச்சுட்டோம்.

..............................
........................................2. அறம் செய விரும்புங்கற அவ்வையார் வர்த்தையை தலைவர் தப்பா
புரிஞ்சுக்கிட்டாருன்னு எப்படி சொல்றே?!

அடிக்கடி ஏகப்பட்ட ”இல்லறம்” செய்யறார்.

.....................................................

3. தலைவர் எப்பவும் மப்புலதான் இருப்பார்.

அதுக்காக ”மப்புல இருக்கும் பேதையே”னு பேனர் வைக்கனுமா?

..................................................................

4.டாக்டர் எனக்கு பகல், நைட் எப்பவும் தூக்கமே வர மாட்டேங்குது.

ரொம்ப சவுகர்யமா போச்சு.டபுள் டியூட்டி வேலை பார்த்து சம்பாதிக்கலாம்.

...................................................

5.நடிகை: நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான்.

நிரூபர்: ஆனா, அதனால ஏற்படற காயமும், வலியும் மட்டும்ரசிகனுக்குதான்.


...................................................

6. கட்சி ஆஃபீஸுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கச் சொல்றிங்களே, ஏன் தலைவரே!?

“வெள்ளை மாளிகையில் வசிப்பவர்ன்னு ஒபாமாவுக்கு நிகரா பேர் எடுக்கத்தான்.


.........................................................

7. எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ்கிட்டயே திருடுவே?!

தொழில்ன்னு வந்துட்டா நான் பாரபட்சம் பார்க்குறதில்லை ஏட்டைய்யா.

...................................................................

8.தொகுதிப் பிரச்சனை பற்றி ஒரு கடிதம் எழுதி மகளிர் அணித்தலைவி
தலைவர்கிட்ட குடுத்திருக்காங்க.

“ஓஹ்ஹோ..., கண்மணி கழகத்திற்கு எழுதிய கடிதம்ன்னு பில்டப் குடுத்தாரே? இதானா?

.....................................................................

9. என் மனைவியை  டைவர்ஸ் பண்ணிட்டேன்

அதுக்காக,இல்லறத்துறவின்னு பட்ட பெயர் வெச்சுக்கனுமா?!

.........................................................................

10. யுவர் ஆனர், என் மனைவிக்கு பதவி குடுத்தது என் தப்பா?

ஆமா, அமரர் பதவி குடுத்திட்டு அதிகமா பேசறியே?

.........................................................................

11. என் கணவர் எப்பவும் என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் மாதிரிதான் பழகுவார்.

அடடே! அப்போ கணவர் மாதிரி பழகவே மாட்டாரா?!

...................................

12, மன்னர் வேட்டையாட அந்தப்புரம் போய் இருக்கிறார்.

காட்டுக்குத்தானே போவார்கள்?!

இப்போ இவர் போனது கன்னி வேட்டைக்கு ..

..........................................

13. தலைவரோட பையன் கில்லி விளையாடுறதுலயும் கோலிக்குண்டு
விளையாடுறதுலயும் வல்லவனாம்.

அதுக்காக் கேல் ரத்ணா விருது வேணும்னு கேட்குறது ஓவர்.

....................................................

14. தலைவருக்கு பிடிச்ச ஆசனம் எது?

சிம்மாசனம்தான்.

............................................................

15.தலைவரே! விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு காரணமில்லைன்னு சொல்றீங்களே?!

ஆமா... ஓட்டு போட்ட ஜனங்கதான் காரணாம்.

.....................................................

16. மீனவனோட கல்யணம் இது.

இருக்கட்டுமே. அதுக்காக வாசல்ல வாழைமரத்துக்கு பதில் கட்டுமரத்தை
கட்டுறது சரியில்லை.

.......................................................

17. தலைவர் இன்னும் அந்த காலத்துலயே இருக்காருனு எப்படி சொல்றே?!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கி
தருவோம்ன்னு சொல்ராரே?!

.......................................................

18.அந்த ஜோசியர் ஒரு கோள் மூட்டின்னு சொல்றியே எப்படி?

எந்த கிரகமும் சரியில்லை. எல்லா கொள்களும் உங்களுக்கு எதிராவே இருக்குன்னாரே?!

.................................................................

19. இளைஞரா இருந்தப்ப தலைவருக்கு பொழுது எப்படி போச்சாம்?

பாதிநேரம் குயின்மேரீஸ் காலேஜ் வாசல்ல. மீதி நேரம் ஒயின் ஷாப் பார்ல.

.....................................................................

20.மனைவி இறந்துட்டான்னு சொல்லி அனுதாப ஓட்டு வாங்க முடியுமா?

ம்ஹூம் சான்ஸே இல்லை தலைவரே.

அடப்பாவமே! அப்போ நான் கொலை செஞ்சது வேஸ்டா?!-------------------------


21. குத்து விளக்கு மாதிரி பொண்ணு இருந்தாலும் மாப்ளை விளக்கெண்ணெய் மாதிரி இருந்தா நோ யூஸ் ;-))---------------------------


22. தூக்கு க்கு எதிரா குரல் கொடுப்பவர்கள் மீது தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும்னு அரசு அறிவிச்சுட்டா எத்தனை வீரர்கள் இருக்காங்கன்னு தெரியும்----------------------


23. டேமேஜர் - ஒழுங்கா வேலை செய். கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திகிட்டு பார்ப்போம். #அதெப்பிடி? கண் கூசுமே?------------------------


24. ஆபீஸ் ல நைட் டைம் ல டீ குடிச்சு நைட் டீ செலவுன்னு எழுதி வெச்சா ஆபீஸ் காசுல எதுக்கு நைட்டி வாங்குனே?னு கேட்பாரோ டேமேஜர்?-------------------------25. மேத்ஸ் மிஸ் - 'துப்பாக்கி' ஒருவார வசூல் 65 கோடி.அப்போ 10 வாரம் கழிச்சு என்ன வரும் ? லொள் மாணவன் - இன் கம் டாக்ஸ் ரெயிடு வரும்
---------------------------

1 comments:

Thozhirkalam Channel said...

மனப்பெண் குத்துவிளக்கு மாதிரியும் மாப்பிள்ளை விளக்கெண்ணெய் மாதிரியும் இருந்தா வாழ்வு சுவாரஸ்யமாக இருக்குமா.