Wednesday, November 07, 2012

அமலா பால் இன் ஆபரேஷன் தியேட்டர் - குழப்படிகள்

1. நம்ம கபாலிக்கு மனசுக்குள்ள பெரிய சிம்புன்னு நினைப்பு...

 ஏன்?

தன்னோட பெயரை நியூமராலஜி பிரகாரம் கே.டி.ஆர்ன்னு மாத்திக்கிட்டான்...............................
.....................


2. தலைவர் குழப்பறர்ன்னு எப்படி சொல்றே?

என்னை பற்றி நானே சொன்னா அது நல்லா இருக்காது.., என்னை பத்தி மத்தவங்க சொன்னா அது சரியா இருக்காதுன்னு சொல்றாரே?!

...............................................................

3.80 ரன் தான் எடுத்திருக்காரு.., சதம் அடிச்சதா சொல்றியே?!

80வது பிறந்த நாளை சதாபிஷேகம்ன்னு கொண்டாடறது இல்லையா? அதுப்போலத்தான் இதுவும்.

........................................................
4. மன்னா! எதிர் நாட்டு மன்னன் பெரிய தாராசு ஒன்றை அனுப்பி வைக்க சொல்லி ஓலை அனுப்பி இருக்கான்.

எதற்கு?

”போரை நிறுத்த” சொன்னீர்களாம்.  நிறுத்தி எடை பார்க்கவாம்....

............................................

5. லைஃப்ல கஷ்டப்படாம முன்னுக்கு வர வாய்ப்பிருக்கா?

ம்ஹூம், கல்யாணம் பண்ணுனாத்தான் ஒரு இம்ப்ரூவ்மெண்ட் வர வாய்ப்பிருக்கு.

........................................................
n‎ and ‎Kani Oviya‎ shared ‎Rajesh Pillai‎'s ‎photo‎.
6.தலைவரே கள்ள ஓட்டு போட ”ரோபோ: வாங்கிட்டீங்களா?!

இல்லியே ஏன்?

அடுத்த தேர்தலை விஞ்ஞான ரீதியா எதிர்கொள்வோம்ன்னு அறிக்கை விட்டிருக்கிங்களே அதான்.

.........................................

7.18 புதிய சேனல்கள் ஸ்டார்ட் ஆகியிருக்காமே?!

நம்ம தலைவர் புதுசா “வெச்சிருக்குற” சேனலுக்கு கூட வயசு 18 தான்.

.....................................................

8. டாக்டர், நர்ஸ் சித்ரா அடிக்கடி என் கனவுல வர்றாங்க..

அப்படியா!?

எண்ட்ரன்ஸ் ஃபீஸ் 500ரூபாய் கட்டுங்க.

..............................................

9. பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்றங்களே! உண்மையா?!

தெரியலை சார், நான் பென்சில்தான் யூச் பண்றேன். "pen" யூஸ் பண்றதில்லை.

.............................................................................

10 ஏற்கனவே ஓவர் வெயிட் இனி கொஞ்சம் கூட சதை போட்ரவே கூடாதுன்னு Dr சொல்லிட்டாரே?!

அதுக்காக உங்க பையன் கல்யாணத்தப்ப வாழ்த்த அட்"சதை"  கூட போட மாட்டேன்னா எப்படி தலைவரே!
11. தலைவரே, கட்சிக்குப்பேர் வெச்சாச்சு, அடுத்து என்ன செய்யப்போறீங்க?


 மக்களுக்கு மொட்டை அடிச்சு காது குத்திட வேண்டியதுதான்
12. தலைவரே, உங்களூக்கு எப்போ சம்மன் அனுப்பினாலும் கையெழுத்து போட்டு வாங்காம திருப்பி அனுப்பிடறீங்களே?ஏற்பது இகழ்ச்சின்னு சொல்லி இருக்காங்களே?
13. வெட்னரி டாக்டர் ஏன் கோபமா இருக்காரு?


 பெட் அனிமல் க்ளினிக் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகியும்  ஒரு நாயும் வர்லையா,ம்14. டாக்டர் , தலை சுத்துது
 இடம் இருந்து வலமா தலை சுத்துனா இந்த மாத்திரை சாப்பிடுங்க... வலமிருந்து இடமா சுத்துனா இந்த மாத்திரை சாப்பிடுங்க15. டாக்டர்! என் புருஷன் 3 நாளா லூஸ் மாதிரி சிரிச்சுட்டே இருக்காரு வயித்தால போகுது ( டிசெண்ட்ரி)ன்னு வந்தாரு, 3 நாள் பத்தியமா இருன்னேன், பைத்தியமா இருந்துட்டார் போல,
16. நர்ஸ் - டாக்டரை இப்போ பார்க்க முடியாது ஏன்? அவருக்கும் உடம்பு சரி இல்லையா?
17. டாக்டர், ஆபரேஷன் தியேட்டர்ல எதுக்கு அமலா பால் போஸ்டர் ஒட்டி இருக்கீங்க?


 இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற தத்துவத்தை நினைவு படுத்த
18. டாக்டர், ஆபரேஷனுக்குப்பிறகு. பேஷண்ட்டுக்கு தயிர் தரலாமா?


 பால் ஊத்திடுங்க
19. ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே பேஷண்ட்டைத்தவிர யாரையும் அலோ பண்ண மாட்டோம் சாரி..


 யோவ், நான் தான்யா டாக்டரே, ஆபரேஷன் பண்ண வந்திருக்கேன்
20. ஒரே  மாசத்துல 45 கிலோ வெயிட் இல்லாம பண்ணிட்டேன்


 அடடே, எப்படி?

 என் மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டேன், அவ 45 கிலோ இருப்பா
 

1 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாத் தலைவர் ஜோக்குகளும் நல்லாயிருக்கு தலைவரே!