Thursday, November 15, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 16.11.2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.localfiles.com/production/usergraphics/79/main_Photo_117379.jpg 

1. துப்பாக்கி -  தீபாவளி ரிலீஸ் ரேசில் நெம்பர் ஒன் இடத்தை பிடிச்சுஇருக்கு. பிளாக்ல டிக்கெட் அள்ளுது. ட்விட்டர்ல பலர் ஏ ஆர் முருக தாஸ்க்கு துப்பாக்கி பார்ட் 2 எடுங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க.. நல்ல விஷயம்,. இந்த வருஷம் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் நல்ல லாபம் சம்பாதிச்சுத்தர்லைங்கற கெட்ட பேரை இது நீக்கிடுச்சு


 பொதுவா ஒரு ப்டம் ஹிட் ஆனா இந்தக்கதை என்னுதுன்னு ஒரு குரூப் கிளம்பும். ஆனா இந்த டைம் பிரச்சனை வேற மாதிரி . அந்த நியூஸ் 

விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'துப்பாக்கி' படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளதை தொடர்ந்து, விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'துப்பாக்கி' தீபாவளியன்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலிலும் பல படங்களை இப்படம் மிச்சும் என்று திரையுலகினர் கூறுகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தைப் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் பயங்கர சதி திட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராணுவத்தில் பணிபுரியும் விஜய் விடுமுறைக்காக மும்பை வரும்போது இதை அறிந்துகொண்டு, தீவிரவாதிகளின் சதி திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

இப்படம் முஸ்லீம்களை விமர்சிப்பதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படத்தில் இடம்பெறும் சில சர்ச்சைக்குடிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் முஸ்லிம் அமைப்புகள் நடிகர் விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவருடைய பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)


 படத்தின் விமர்சனம் -

துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

   http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

ஈரோடு  ராயல் , சண்டிகா, சீனிவாசா வில் ரிலீஸ் 

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters/images/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters06.jpg

2. போடா போடி  - சிம்பு - வரலட்சுமி சரத் ஜோடியா நடிச்ச இந்தப்படம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே  லவ் பண்ணலாமா? வேணாமா? பாட்டின் செம ஹிட்டால் பேசப்பட்டது.  தமிழ் நாடு பூரா இந்தப்படத்துக்கு கிடைச்சிருக்கும் நல்ல நல்ல தியேட்டர்ஸ் துப்பாக்கியை கிராஸ் பண்ணிடுமோன்னு எண்ண வெச்சுது. 


 ஈரோடு அபிராமி, அன்னபூரணி , ஆனூர் , சங்கீதா ஆகிய 4 தியேட்டரில் ரிலீஸ்

போடா போடி - சினிமா விமர்சனம்http://www.adrasaka.com/2012/11/blog-post_5706.html

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6o5SUz4KNwe8uY22yZY7xfSub2j72T31-4DEag5OmsQXhD9JWfABw0icV5EQmvmZ_0K4lY9_7BXMWytCEaXS9HZ0iDcoFX-H-pmUzoYTanuOzwdIK1Hap3Dbf4XXOXoupupNsNqanaE4/s1600/Ammavin+kaipesi.jpg
3. அம்மாவின் கைப்பேசி -திரைப்பட இயக்குநராகவும், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் புகழ் பெற்றவரான தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளராகவும் ஏற்கனவே அறியப்பட்டவர்தான். அவரது ஒன்பது ரூபாய் நோட்டுநாவல் மூலம் சிறந்த நாவலாசியராகவும் அறியப்பட்டவர்அம்மாவின் கைபேசி’ என்ற இந்த நூல், ஒரு குறுநாவலும், நான்கு சிறுகதைகளையும் உள்ளடக்கியிருக்கிறது


அம்மாவின் கைபேசி என்ற குறுநாவல் ஒரு தாயின் இறுதிக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. ஒன்பது பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஆறு பிள்ளைகளுக்குக் கல்யாணமும் பண்ணிவைத்து, பின் கணவனை இழந்து என்று எல்லாக் காரியங்களையும் பார்த்த பழைய வீட்டில்தான் இன்னும் குடியிருக்கிறாள்


 கடைசிப் பையனைச் செல்லமாக வளர்த்து, கெட்டு குட்டிச் சுவராகவிட்டாள் எனச் சண்டையிட்டு அலுத்துப்போய் எல்லாப் பிள்ளைகளும் தனிக்குடித்தனம் போய்விடுகின்றனர். கடைசி மகனும் "இனி நல்ல நிலைமைக்கு நான் வந்தபிறகு உன்னை வந்து கூட்டிப்போகிறேன்" என்று போனவன்தான். பல வருடங்களாகியும் செய்தி இல்லை. அதன்பின் ஒரு உறவுப்பெண் மூலம் அவனிடமிருந்து கைப்பேசி வருகிறது. அவ்வப்போது பேசுகிறான். ஆனால் இருக்கும் இடத்தைச் சொல்வதில்லை. இடையில் இந்த வீட்டைக் கேட்டு மற்றப் பிள்ளைகளின் தொல்லை. தன் கடைசி மகன் நல்ல நிலைக்கு வந்து தன்னைக் கூட்டிச் செல்லும் வரை நகரமாட்டேன் என்று இந்த வீட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறாள்.  


முதுமையாலும் ஆதரவின்றியும் உடலும் மனமும் கெட்டதால் உயிர் ஊசலாடுகிறது. அந்த இளையமகனுக்கும் அங்கு பிரச்சினை. வேலை பார்த்த இடத்தில் பொறாமையால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருவரால் கொல்லப்படுகிறான். அவன் கொல்லப்படும்போது அம்மாவிடமிருந்து வந்த கைப்பேசி அழைப்பை ஒருவன் கேட்டுவிடுகிறான். செத்தவனின் அம்மா இவன் வரவை எதிர்பார்த்து அழும் கடைசி அழுகை. செத்தவனின் சட்டைப் பையில் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதம். கைப்பேசி அழைப்பைக் கேட்டவன் இந்தக் கடிதத்தையும் எடுத்துப் படிக்கிறான் தயாராக இரு உன்னைக் கூட்டிச் செல்ல, சொந்தக் காருடன் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்என்ற வரிகள். படித்தவனுக்கு மனம் கலங்கிவிடுகிறது. திரும்ப கைப்பேசி அழைப்பு. தாய் இறந்த தகவல். தன் மகன் வந்தால்தான் பிணத்தை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இறந்துபோனதால் இவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இவனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால் செத்தவனின் கிராமத்துக்குச் சென்று இறந்த அந்தத் தாயின் பக்கத்தில் அந்தக் கடிதத்தையும், கைப்பேசியையும் வைத்துவிட்டு வந்துவிடுகிறான்.திரைப்படப் பாணியில் டக்டக்கென மாறும் காட்சி அமைப்புடன் கதை விறுவிறுப்பாகப் போகிறது


ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAuyfoKrJxu4ir1IVoWD3Se1hZY1cv3pGMTKtC3hQBwTll2MwBTFpCMimNTZrQ0ogqq3EMuAjhmtay4gJDT_Qr3dJNXpe6ZdwB3_kVNDDtaKVyhRZB5N6yHJ3Ap48rqYB6qnZPBADfnaos/s1600/Neerparavai+Movie+Release+Poster.jpg


4. நீர்ப்பறவை -ஈரோட்டில் ரிலீஸ் இல்லைநல்ல சினிமாவுக்கு உண்மை மட்டுமே போதும்!"

க.நாகப்பன்

'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் கிராமத்தைக் கையாண்ட இயக்குநர் சீனுராமசாமி, கடலைக் களம் ஆக்கி இருக்கிறார் 'நீர்ப்பறவை’யாக.


 ''இது இலங்கைத் தமிழர்களின் கதையா?''


''நடுக்கடல்ல ஒரு படகில் பலர் இறந்துகிடக்கிறாங்க. அதில் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருக்கான். தென் இலங்கையைச் சேர்ந்த அவனை ஒரு மீனவன் தமிழகத்துக்கு அழைச்சிட்டு வந்து வளர்க்குறான். அவன்தான் விஷ்ணு. இதுல புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியை 14 நிமிஷங்கள் சமரசம் இல்லாமல் பதிவு செஞ்சுருக்கேன். மத்தபடி முழுக்க கிறிஸ்துவ மீனவக் கிராமத்தின் அசலான பதிவு இந்தப் படம். 'நீர்ப்பறவை’ தண்ணீரில் இரை தேடும்.''


''வசனங்கள் ரொம்பக் காட்டமா இருக்கும்போலத் தெரியுதே?''


''ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கார். அதைத் திரைமொழிக்குத் தகுந்தபடி வலுவாக்கி இருக்கேன். சினிமாவுல எல்லாரும் ஜெயிக்கணும்னு நினைக்கிற ஒரே ஆத்மா சமுத்திரக்கனிதான். 'அண்ணே, நான் உங்க படத்துல நடிக்குறேன்’னு உரிமையாக் கேட்டார். 'நம்மகிட்ட ஒத்துமை இல்லை. 30 தொகுதி மீனவனுக்கு இருந்தாத்தான் நம்ம சத்தம் கேட்கும். இல்லைன்னா, அலை மாதிரி நம்ம சத்தம் நமக்குள்ளதான் இருக்கும்’னு  சமுத்திரக்கனி பேசுற ஒவ்வொரு வசனத்துலயும் உண்மை சுடும்.''
''படத்தில் அரசியல் அதிகமா?''


''கடல் அரசியல்தான் 'நீர்ப்பறவை’. கடல்தான் இந்த உலகத்துல மூத்த உசுரு. எல்லாவித இறக்குமதி, அந்நியப் படையெடுப்பு, மதம் வந்து இறங்கிய இடம்னு சகலமும் நடக்குற இடம். இப்போ அங்கே மீனவன் வாழ்றதுக்குப் பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரே ஒரு தக்கையை எல்லையா வெச்சு இந்திய எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாதுனு சொல்றாங்க. தக்கை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கேயும் இங்கேயும் தள்ளிப்போகுது. கடலுக்கு நடுவே காம்பவுண்டு சுவரா இருக்கு?


நாட்டுப் படகில் மீன் பிடிக்கப்போகும் சட்டை இல்லாத மீனவனை ஒரு அந்நிய நாடு சுடுறதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய வன்முறை. முப்படைகளும் கொண்ட இந்திய நாட்டின் கடலோரப் பிள்ளைகளை இன்னொரு நாடு சுட்டுக் கொல்றதை எப்படிப் பொறுத்துக்க முடியும்?  இதை எல்லாம் என் படம் கேட்கும்.''''படம் முழுக்கப் பிரச்னைகள் மட்டும்தானா?''''இரானில் இருக்கும் இயக்குநர்கள் இரான் பிரச்னைகளைத்தான் படமா எடுக்குறாங்க.  நான் தமிழ்நாட்டு மீனவர்களின் கதையை எடுக்குறேன். எதிரிகள்கூட இந்தப் படத்தைப் பார்த்தா இரக்கப்படுவாங்க. மற்றபடி விஷ்ணுவுக்கும் சுனைனாவுக்கும் இடையிலான சுவாரஸ் யமான, நெகிழ்வான காதல் கதை இருக்கு.''


''கதைக்கு நந்திதாதாஸ் எப்படித் தேவைப்பட்டாங்க?''


''நம்ம மீனவர்களின் அபயக் குரல் நாடு முழுக்க ஒலிக்கணும்னு ஆசைப்பட்டேன். உடனே, நந்திதாதான் எனக்கு நினைவுக்கு வந்தாங்க. நான் இதுவரை நேரில் பார்த்திராத நண்பர் ரவி.கே.சந்திரன்,அவங்க கிட்ட 'தைரியமா சீனுராமசாமி படத்துல நடிக்கலாம்’னு சொல்லி இருக்கார். கதையைக் கேட்ட நந்திதா, 'படத்துல நிறைய உண்மைகள் இருக்கு. ஆனால், சினிமாவுக்கு உண்மை போதுமா?’னு கேட்டாங்க. நான் நல்ல சினிமா வுக்கு உண்மை மட்டுமே போதும்னு சொன்னேன். நம்பிக்கையா நடிச்சுக் கொடுத் தாங்க.''

 ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
 http://wallpapers.oneindia.in/d/364585-2/06.jpg

 5. Jab Tak Hai Jaan (2012)-காதல் மன்னன் 14 ரீலை 7 ரீலாய் சுருக்கி முதல் பாதி ,உன்னைக்கொடு என்னைத்தருவேன் 14 ரீலை சுருக்கி 7 ரீல் = ஷாரூக் ஜப் தக் ஹே  ஜான்.Shah Rukh Khan, Katrina Kaif and Anushka Sharma |


 ஈரோட்டில் ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ் 


 http://www.telugunow.com/wp-content/uploads/2012/09/Son-of-Sardar-Wallpapers.jpg?5c1bd2

6. Son of Sardaar - Jassi (Ajay Devgn) falls in love-at-first-sight, in a train with Sukhmeet (Sonakshi), call her Sukh please (she's quite a 'peace' of work); and ends up as a guest in her mad-house full of comical sardaars - The Sandhus. There's the head-of-the-house Billu paaji (Sanjay Dutt), bros Tony (Mukul Dev) and Tito (Vindoo Dara Singh), who've sworn to never have ice-cream and cold-drinks (rum-on-the-rocks is all he's ever had, poor liver, sigh!) until they avenge their father's death; and a kid sardaar who talks about 'pegs' (Patiala types).


Adding solid femme power to this macho sardaar story is Pammi (Juhi Chawla, delightful) Billu's mooh-boli-biwi, Bebe (Tanuja) suffering from part-time memory lapses; and lastly Rajpreet the loved buffalo (who mooed this cheez?) The problem? The Sandhus have been vengefully thirsting for Jassi's head, but can't lay a sword on him because he's their (unwanted) house-guest (mehmaan equals bhagwan, remember?), he even feigns 'paira-te-laces' (paralyses) to stay 'home' to save his life.
 ஈரோட்டில் ஸ்ரீகிருஷ்ணா வில் ரிலிஸ்


7. Anna Karenina (2012 film) -டால்ஸ்டாய் எழுதுன உலகப்புகழ் பெற்ற  நாவல். 900 பக்கம் வரும். அதை பலர் பல முறை படம் ஆக்கி இருக்காங்க.. இப்போ லேட்டஸ்ட்டா .

கதை என்ன? மேரேஜ் ஆன லேடி  தன் கணவனை விட்டுட்டு வேற ஒருத்தனை லவ் பண்றா. அவளோட உணர்வுகள் திரைக்கதையா விரியும்.. ஈரோட்டில் ரிலிஸ் இல்லை 


http://cdn01.cdn.justjared.com/wp-content/uploads/headlines/2012/09/keira-knightley-anna-karenina-character-poster.jpg

0 comments: