Tuesday, November 06, 2012

நயன் தாரா வின் மாஸ்டர் பிளான்

டாக்டர்! இந்தாங்க வெற்றி மாலை ஆபரேஷனை வெற்றிகரமா முடிச்சுட்டீங்களே!

ஆபரேஷன் சக்சஸ்தான் பேஷண்ட்தான் அவுட் ஆகிட்டார். மாலையை அங்கே போடுங்க.

..............................
....................................................2. தலைவர் அநியாயத்துக்கு திமுக விசுவாசியா இருக்கார்.

ஏன்?

ஓவியர் ஜெ(யராஜ்)க்கு நடந்த பாராட்டு கூட்டத்துக்கு கூட போகலை.


..........................................................................3. ஓவியர் ஜெயராஜ்ஜை பாராட்டி மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன்?

ஜெக்கு ஆதரவா பேசுனதா சொல்லி கட்சியை விட்டு விலக்கிட்டாங்க.

............................................................................................
4. கலா மாஸ்டர்,  பிருந்தா மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டர் இவங்களைலாம் கூப்பிட்டு நயன் தாரா பார்ட்டி வைக்குறாங்களே ஏன்?!

ஏதோ மாஸ்டர் பிளான்னு நினைக்குறேன்.

...............................................................
5. கட்சி ஆஃபீஸ்கூ வெள்ளை பெயிண்ட் அடிச்சு இருக்கிங்களே ஏன் தலைவரே?!

“வெள்ளை மாளிகையில் வசிப்பவர்னு ஒபாமாவுக்கு நிகரா பேர் எடுக்கத்தான்.

.................................................................
6.வேண்டிக்கிட்டப்படி நேர்த்திக் கடன் செலுத்த மனைவியை தலைவர் அனுமதிக்கமாட்டேங்குறாரே?!

எந்த கடனையும் திருப்பி கட்ட அவருக்கு பிடிக்காது.

.........................................................................
7. மன்னர் வர்றவங்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்குறாரே என்ன அது?

பொரி தான்.

.......................................................................
8. தலைவர் ஒரு பிளக்ஸ்பாட் ஆரம்பிச்சுட்டாரு

ஓஹோ பிளாக் மார்க் விழுந்ததா?!

...................................................................
9.தலைவரே! கூட்டத்துக்கு 2 லட்சம் பேர் எப்படி வந்தாங்க?

200 பேர்தான் வந்தாங்க. மீதி எல்லாம் கிராஃபிக்ஸ்.

...................................................................
10. என் மனைவிக்கு படிப்பறிவு இல்லை. ஆனா, பட்டறிவு ஜாஸ்தி.

ஓஹோ அனுபவ அறிவு ஜாஸ்தியா?!

ம்ஹூம் பட்டுப்புடவை எந்தெந்த ஊர்ல என்ன விலைன்னு அப்டேட்டா தெரிஞ்சு வெச்சுக்குவா.

...................................................................
11. டியர் நீ எனக்கு லைஃப் டைம் சிம் கார்டு மாதிரி.

ஏன்? 13 வருசத்துல காலாவாதி ஆகிடுவாயா?

.................................................................

12. தலைவருக்கு வயசாயிடுச்சுன்னு எப்படி சொல்றே?!

மத்திய அமைச்சரே வருகனு போஸ்டர் ஒட்டறதுக்கு பதிலா வேணும்னே முத்திய அமைச்சரே வருகன்னு போட்டுட்டார்.

...........................................................

13 ரெஜிஸ்டர் பண்ணாத பைக்ல ஏன் போறே?

சார் எனக்கு இப்போ ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்குது. அது போதாது.

....................................................................

14. இந்த கல்யாணத்துல ஜோடி பொருத்தம் அருமைன்னு எப்படி சொல்றே?

மாப்ளை பேரு ஆறுமுகம் பொண்ணு பேரு பஞ்சமுகி.

.......................................................................

15.வீட்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டா பழைய காதலன் குப்பை.நிச்சயம் ஆகிட்டா குட்பை.

.............................................................

16. அவர் எப்பவும் எதையுமே சட்டை பண்ணிக்கவே மாட்டாராமே?

ஆமா, அவரு பேண்ட் ஸ்பெஷல் டெய்லர். பேண்ட் மட்டும்தான் தைப்பாரு.

.................................................................
17. டாக்டரோட எழுத்து புரியவே இல்லையே

ஒரு வேளை கவிதையா இருக்குமோ?!

..........................................................................

18. தலைவர் தமன்னா ரசிகர்ன்னு எப்படி சொல்றே?!

அரசியல்ல எனக்கு தண்ணி பட்ட பாடுன்ன்8 சொல்றதுக்கு பதிலா தமன்னா பட்ட பாடுன்னு சொல்லிட்டாரே?!

....................................................................

19. கூடா நட்புன்னா என்ன?

லவ்வர்ஸா இருந்தாலும் கூடாம இருக்கறது.

.....................................................

20. தலைவர் அப்பாவின்னு எப்படி சொல்றே?

பியூட்டி பார்லர்ல (BAR) இருக்குமான்னு கேட்டார்.

1 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

ரொம்ப நாளாச்சு ணா நீங்க இது மாதிரி பதிவு போட்டு
செம செம