Thursday, June 30, 2016

கரண்ட் இல்லாததால கரண்ட் பாலிடிக்ஸ்ல எதிர்க்கட்சியாக்கூட முடிய;ல

தேர்தல் நடத்த  தேர்தல் கமிஷனுக்கே 200 கோடி ரூ தான் செலவு,ஆனா ஜெ வுக்கு 4000 கோடி செலவு-நக்கீரன் # நாட்டுமக்களின் நன்மைக்காக தன் சேமிப்பை எல்லாம் கரைக்கும் தாய் உள்ளம் 


============

திமுக 3வது அணியாகப் போகிறது என்பது கருணாநிதிக்கே தெரியாது: வைகோ # 6 பேரும்  6வது அணி ஆகப்போறீங்க. 6 சீட் தான் கிடைக்கும் போல==============


அதர்மம்-சந்தர்ப்பவாதம் தோற்க வேண்டும்: ஆர்.கே.நகரில் ஜெ # கலைஞர் - வை.கோ 2 பேரும் தோற்கனும்னு பூடகமா சொல்றாங்க போல============

4  அவர்' பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே முன்னேற்ற ஒன்னும் செய்யவில்லை: ராமதாஸ் # எத்தனையோ செஞ்சிருக்காரு.ஆனா ஊருக்காக செய்யலை

=============

5 ஹெலிகாப்டர் ஊழல்: சோனியாவை கைது செய்யும் தைரியம் மோடிக்கு இல்லை: கேஜ்ரிவால் # தைரியம் இருக்கு, ஆதாரம் ஸ்ட்ராங்கா வேணுமில்ல

=============


6

சாமி சத்தியமா எனக்கு தான் ஓட்டு போடணும், போடுவீங்களா?: கேட்கும் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் # குமாரசாமி மேல சத்தியமா இவரு ஜெயிக்க மாட்டாரு


-==========

7
  • திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்த ம ந கூ ஏன் விஜயகாந்த் பின்னால் சென்றது? தமிழருவி மணியன் கேள்வி # 2 % வாக்கு வெச்சுக்கிட்டு என்ன பண்ண? இத்தனை பேர் சேர்ந்தே 8 % தான் இருக்கு

=================


8  

இந்திராவின் பேரனே வருக, இளம் தலைவரே வெல்க.. மதுரையில் ராகுலுக்கு, ஸ்டாலின் வெல்கம் # கூடா நட்பின் குலக்கொழுந்தே,பாரா முகத்தின் வேந்தே வருக================


9

தான் மட்டும்தான் அறிவாளி என நினைக்கிறார் ஜெ- ராகுல் காந்தி # எல்லா குற்ற”வாளி”களும் அறி”வாளி”களே==============

10

மநகூவுக்கு 35% வாக்குகள் 'கன்பார்ம்'... மத்திய உளவுத்துறை அதிகாரியே கூறியதாக வைகோ # தேர்தல் அறிக்கை வந்த பின் 3.5 % தான்னு சொல்லி இருப்பாரே?====================


11 . டீ விற்பவர் மகன் என்பதால் உ.பி. பள்ளியில் இருந்து மாணவன் நீக்கம் # நம்ம நாட்டோட பிரதமரே முன்னாள் டீகடை பார்ட்டிதானே


================

12   அதிமுக அரசை தெறிக்க விடப்போவதாக  கடலூர் விஜய் ரசிகர்கள் சபதம் - சன் நியூஸ்  # , சனி பகவான் சன் டி வி மூலமா விஜய்க்கு தூது விட்டிருக்காரு அய்யோ பாவம்


=============

13 உங்களிடம் பிச்சைகேட்கிறேன் யாசகம்கேட்கிறேன்-நாஞ்சில் சம்பத் #காரியம் ஆகும் வரை காலைப்பிடி,ஆன பின் கழுத்தைப்பிடி மொமெண்ட்


==============


14 திமுக தேர்தல் அறிக்கையிலADMKஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டார் ஜெ.-ஸ்டாலின் # நாமஎன்னசெஞ்சோம்? பாமக அறிக்கைல சூரியன் ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டோம்===============15

4 சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு- ராகுல்  # சுவர் இல்லாத சித்திரங்கள் அரிது.4 சுவருக்குள் இருந்தால் பத்திரம்னு நினைச்சிருப்பாரு=================

16  93 வயது ஆகியும் மக்களுக்காக உழைக்கிறார் கலைஞர் - ராகுல் # தமிழ் நாட்டு மக்களுக்காகவா? தன் வீட்டு மக்களுக்காகவா? 


=================


17   

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது,'' -ஸ்டாலின் # அப்போ அடையாளமே தெரியாம மாறப்போறீங்கன்னு சொல்லுங்க
===================


18  

அம்மா  எல்லாம் சும்மா - விஜயகாந்த் # இலவசம் எல்லாம் இலைவசம் என்பதை சூசகமா சொல்றாரோ?=================


19  

விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இருப்பதற்கு உதாரணமாக உள்ளது, தி.மு.க., - காங்., கூட்டணி-'' கருணாநிதி: # அவங்க 60 சீட் கேட்ப்ப, ஜோதிமணிக்கு அரவக்குறிச்சி கேட்டப்ப விட்டுக்கொடுத்தீங்களா?================


20   

தமிழ் நாட்டின் இருள் அகல வாக்களிப்பீர் உதய சூரியன் -கலைஞர் # நம்ம ஆட்சி போனதுக்குக்காரணமே பகலிலும் இருள் சூழந்ததால்தானே? கரண்ட் இல்லாததால கரண்ட் பாலிடிக்ஸ்ல எதிர்க்கட்சியாக்கூட முடிய;ல======================

0 comments: