Saturday, June 11, 2016

நேர்ல வந்து வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சாத்தான்

வாக்களர்களிடம் பிச்சை கேட்பது போல, வாக்கு கேட்கிறேன் - நாஞ்சில் சம்பத் # அரசியல்வாதின்னா பெக் அடிக்கற பாயாவோ பெக்கர் பாயாவோதான் இருக்காங்க


===============

2 அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்: ஜெ வுுக்கு ' நமீதா கடிதம் # மேடைல ஏறி என் ஆசை மச்சான் னு கூப்பிடுவார்.கேப்டன் கோபமா வரப்போறார்


===============

3 திமுக முன்னாள் அமைச்சர் மீது செருப்பு வீச்சு: # ஊழல் ,ஏய்ப்பு கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு

=============

4 மனிதர்களை போலவே பேசி பழகும் பெண் ரோபோவை உருவாக்கிய சீனா# கிட்டே போனா "ச்சீய் போங்க.அதெல்லாம் மேரேஜ்க்குப்பின்தான்னு சொல்லுமோ?

=============

5 விமானப் பணிப் பெண்ணை அருகில் அமருமாறு கட்டாயப்படுத்திய பைலட் பணிநீக்கம் # ரூட் தெரில.சொல்லிக்குடுன்னு ரூட் போட்டிருக்காரு.கட் பண்ணிட்டாக


============


6 அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கொள்ளை சம்பவங்கள்: கனிமொழி
# நம்ம ஆட்சில ஒரே கொள்ளை தான்.1 3/4 லட்சம் கோடி. 2 ஜி கொள்ளை


===========

7 காமராஜர் படி படி என்றார்
கருணாநிதியும் ஜெ வும் குடி குடி என்கிறார்கள் -கேப்டன் # நீங்க அடி அடி அப்டிங்கறீங்க


================


8 விஜயகாந்த் மனதில் பட்டதை பட்டிக்காட்டான் மாதிரி பேசுகிறார் - வைகோ # கொஞ்சம் பட்டி டிங்கரிங்க் பார்த்துப்பேசுனாத்தேவலை=================

9 தமாகாவில் இருந்து விலகிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஜெமுன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.# மணி ( MONEY)  கை மாறிடுச்சுன்னு  பேசுவாங்களே இனி


====================


10 தேமுதிக தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம்: பிரேமலதா விஜயகாந்த் மீது கூட்டணி கட்சியினர் அதிருப்தி # முதல்ல சொந்தக்கட்சி, பின் கூட்டணிக்கட்சி வரிசைப்படி, படிப்படியாதானே வர முடியும்?

======================


11 விஜயகாந்த் 234 தொகுதியிலும் பிரச்சாரம் செய்வார்- பிரேமலதா # இதுக்கு பரிகாரம், ஆல்டர்நேட்டிவே கிடையாதா?மேடம்


=====================

12  

ஆறுமுக" கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் - திருச்செந்தூரில் பிரேமலதா # சீட் கிடைச்ச வேட்பாளர்கள் விழிப்பதெல்லாம் நரி முகம் தான்


====================

13 அதிமுகவும் திமுகவும் விஷச்செடிகள்- பிரேமலதா # கருவேல மரங்கள்னு சொல்லுங்க, பல வருச பாரம்பரியம் இருக்கில்ல?


================


14 இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். கருணாநிதி, ஜெ வை நிராகரியுங்கள்- பிரேமலதா # களத்தில் இருப்பவ்ர்களில் இளைஞர்  சீமான், அன்புமணி தான்,மக்கள் மாத்தி குத்திடப்போறாங்க


===================

15 திருச்சி  கூட்டத்தில்  ஜெ கட்சியில்  நமீதா இணைகிறார் # பிரம்மாண்டமான திருச்சி திருப்பம்தான், இனி மச்சான்ஸ் ஓட்டெல்லாம் அள்ளிடலாம்

==========================
16 திருப்பதி கோவிலில் 25–ந்தேதி முதல் இலவச திருமணம் நடத்த ஏற்பாடு # காதலர்களுக்குக்கொண்டாட்டம்லட்டிங், வெட்டிங்

=============


17 பிரியங்கா, தீவிர அரசியலில் ஈடுபடுவதை விரும்புகிறேன்: ராகுல் காந்தி# காங்கிரசின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம்


=================

18 அதிமுகவில் சீட் கிடைக்காத மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு # நம்ம தலைவர் அவங்களுக்கும் 3 சீட் கொடுக்கலாம்னிருப்பாரே?


=================

19 மோடி செல்ஃபோன் மூலம் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார் -செய்தி # நேர்ல வந்து வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சாத்தான் வீட்டு விசேஷத்துக்கே போவான் தமிழன்


==================


20 கரூரில் அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்கள் வீட்டில் சோதனை : பலகோடி பணம் பதுக்கல் # இன்னைக்கு பேங்க் லீவ்னு சமாளிச்சு இருப்பாங்களே?

=================

0 comments: