Tuesday, June 07, 2016

நக்மா vs குஷ்பு

காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது-சீமான் # உண்மைதான், ஆனா நாம மட்டும் 10 தொகுதிலயா ஜெயிச்சுடப்போறோம்? நமக்கும் அதே கதைதான் அதோகதி

==============

2 BJPகூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள் தேர்தலுக்குப்பின் வருந்தும்! பொன்.ராதா # பாஜக வுக்கு கிடைக்கும் வாக்கு % பார்த்து பாஜக திருந்தும்

===============


3 டேய்... நான் முதலமைச்சர் தொகுதிடா, வேலைய கொடுடானு உரிமையோட கேளுங்க!' அன்புமணி # எனக்கு ஏனோ எச்சரிக்கை மணி அடிக்குது


=============

4 துளசி வாசம் மாறினாலும் மாறும்.ஆனால் இந்த தவசி வார்த்தை மாறாது!' பிரேமலதா # கிட்டே போனா கோபத்தில் துவைச்சு அலசிப்போட்ருவாரே தவசி

===============


5 நமது வெற்றி ஜெ.,க்கு புரிந்து விட்டது:
கருணாநிதி # எப்போ விஜய்காந்த்துக்காக காத்துக்கிடந்தீங்களோ அப்பவே கட்சியோட பலவீனம் புரிஞ்சிடுச்சு

=========================


ஜெ.,வை எதிர்க்கஆர்.கே.நகரில் எல்லா கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள்.
வியூகம்!# பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?


==================

7 கேள்வி கேட்ட நிருபர்களைஅடிக்க பாய்ந்த விஜயகாந்த்  # தமிழ் ல அவருக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை கேள்வி தான் போல


==================


8  உலகம் முழுவதும் தெறியின் 7 நாள் வசூல் 45 கோடி - செய்தி # என்னய்யா, இப்போதான் ஒரு குமாரசாமி 6 நாள்ல 100 கோடின்னு அளந்து ஊத்திட்டுப்போனாரு?


================


9  மாணவியருக்கு இலவச சைக்கிள்: தமிழகத்தை பின்பற்றும் கேரள  அரசு # மது விலக்கில்  கேரளாவை தமிழக அரசு பின்பற்றினால் தேவலை.படிப்படியான்னு அளந்துட்டு இருக்காங்க===================


10  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டு மக்கள் பட்ட துன்பங்கள் விலகும்: கனிமொழி # கலைஞரோட மகன், மகள் , மக்கள் பட்ட துன்பங்கள் தானே?

==================


11 ஜெ பிரச்சார கூட்டத்தில் தொடரும் உயிரிழப்பு: இளங்கோவன் - ராமதாஸ் கண்டனம் # பிரச்சார நேரம் காலை 6 டூ 10 மாலை 5 டூ 10 என சட்டம் வரவேண்டும்

===============

12 பணத்தை கொடுத்து அ.தி.மு.க.வும்-தி.மு.க.வும் ஓட்டுக்களை பறிக்க முயற்சி: சீமான் # சத்தியம் வேற பண்ணச்சொல்றாங்க

===============

13

திறந்தவெளியில் பகலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்: ஆம் ஆத்மி # தலைவர்களுக்கு மட்டும் ஏ சி, ஏர்கூலர், ஃபேன்

================


14

திமுக -அதிமுக இடையே நடப்பது குருஷேத்திர யுத்தம்:-அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் # அதான் ஜெ பேசும் மேடைகளில் உயிர்ப்பலிகள் தொடருதா?===================


===================

15 

அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல.. பாஜகதான் : தமிழிசை # ஓரமா போய் விளையாடாம குறுக்கே குறுக்கே வந்துட்டு========================16  

மதுவுக்கு மக்கள் நலக் கூட்டணியே முற்றுப்புள்ளி வைக்கும்: ஜி.கே. வாசன் # மது விலக்குக்கு “ஃபுல்” சப்போர்ட் உண்டுன்றீங்க


=================


17 

விஜயகாந்த் நாமக்கல் வந்தபோது அதிமுகவில் இணைந்த தேமுதிக பிரமுகர் # நாமம் போடுவதை இடம் பார்த்து போட்டிருக்கார்

===================

18 தேர்தலில் போட்டி இல்லை- குஷ்பு # ராகுல் ஒரு புத்திசாலி. பிரச்சார அசைன்மெண்ட் மட்டும் தானா?இவருக்குத்தந்தா நக்மாக்கும் தரனும்னு நினைச்ட்டாரா?


===================


19 

விஜயகாந்த் ஆட்சியில் அனைத்து நதிகளும் இணைக்கப்படும்- பிரேமலதா # ஆறு பேர் கொண்ட கூட்டணி என்பதால் ஆறுகளை இணைக்க முடியுமா?===================

20 

சூட்கேஸ் கொடுத்து அதிமுக என்னை இழுக்க அவசியம் இல்லை: பொன்னுப்பாண்டியன் # வா-ன்னு சும்மா கூப்ட்டாலே போதும்கறீங்களா?


=====================

0 comments: