Sunday, June 05, 2016

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மட்டுமல்ல கோஹினூர் வைரத்தையும்

 தலைவரே! நம்ம கட்சிக்காரங்க  வாக்காளர்கள் கால்ல  விழுந்து  வாக்கு சேகரிக்கறாங்களாமே?

 கழக கொள்கையே காரியம் ஆகும் வரை காலைப்பிடி தானே?


===================

2 2011 முதல் 2016 ஏப்ரல் வரை நாங்க தப்பே பண்ணலை, எங்களுக்கே உங்கள் ஓட்டு

 தலைவரே! நாம தான் ஜெயிக்கவே இல்லையே? எப்டி தப்பு செய்வோம்?===================


கருப்பு - கறுப்பு விளக்குக

டீச்சர். ஃபிகரு கருப்பா இருக்கு. ஃபிகர் போட்டிருக்கும் சேலை, ஜாக்கெட் கறுப்புக்கலர். எப்பூடி?=====================


4 தலைவரே! இவ்ளோ பாவம், ஊழல் பண்ணியும் இதுவரை  பாவ மன்னிப்பே கேட்கலையே?

 நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒட்டு மொத்தமாக பாவ மன்னிப்புக்கேட்பொம்================


5   சார், உங்க படத்துக்கு குருதிப்பூக்கள் -னு டைட்டில் வெச்சிருக்கீங்களே? ஏன்?

 சிம்ப்பிள். குருதிப்புனல் + பூக்கள் விடும் தூது = குருதிப்பூக்கள்

================


DR.கணுக்காலுக்கு கொஞ்சம் மேல டாட்டு குத்திக்கலாம்னு இருக்கேன்.ரொம்ப வலிக்குமோ?


மேடம்.கணு கணுவா அணு அணுவா வலிக்கும்.ஏன் இந்த விஷப்பரீட்சை?


===================

7 தலைவரே! காமராஜர் ஓட்டுக்கு காசு கொடுத்தார் னு சொன்னீங்களா?


ஆமா.காமராஜர் ஆட்சி அமைப்போம்னு நம்ம பசங்க மேடைல உளறிட்டாங்க.அதை சரி செய்ய


================

8 டியர்.என் கனவுல நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.


நீ தூங்கிட்டு இருந்தப்ப கனவில் நான் வந்தேன்னு சொல்லு.நீ பக்கத்துல இருக்குமபோது தூங்கமாட்டேனே


=============

9 டியர், நான் கோவிச்ட்டு  எங்க அம்மா வீட்டுக்குப்போறேன்

 போ போ குளிர் காலம் வந்தபின் வந்தா போதும்.


==================

10 சார், ஜங்கிள் புக் படம் சிறுவர்களுக்கான காமிக்ஸ் கதை அதுக்கு ஏன் யு/ஏ  சர்ட்டிஃபிகேட்?

அதுல வர்ற விலங்குகள் எல்லாம் டிரஸ்ஸே போடலை. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு

================


1 அந்தமான் நிக்கோபார்த்தீவுகள் ல என் படம் 46 கோடி கலெக்ட் பண்ணிடுச்சு

அங்கே தியேட்டர் இருக்கா?ரிலீசாச்சா?

  சும்மா எதுனா அடிச்சு விடறதுதான்


====================

12  ஜட்ஜ் = வாங்குன 7000 கோடியை எப்போ கட்டுவீங்க?

மல்லய்யா = தாணு சார் முதல் தவணையா 100 கோடி கட்டுவார். ஏகப்பட்ட வசூலாமே?


=====================


13  தலைவரே! மக்கள் பிரச்சனைக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கனும்

 நான் தானைத்தலைவரின் மகன்., ஆகாரம் இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க மாட்டேன்


=================


14  மினிமம் கேரண்டி பணம் கட்ட மாட்டேன்னு சொன்னதால தான் செங்கல்பட்டில் ரிலீஸ் ஆகலை

 சார். நம்ம படம் மேல தான் நம்பிக்கை இருக்கில்ல? எதுக்கு மினிமம் கேரண்டி கேட்டீங்க?

====================


15  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம்’


 தலைவரே! நம்ம கட்சியையே பழையபடி உங்களால மீட்க முடியலையே? 

=====================


16  சார். கந்த சாமி படம்  ரிலீஸ் ஆகி முதல் வாரம் என்ன சொன்னீங்க?

 படம் செம ஹிட்டுன்னேன்

 2 வது வாரம் என்ன சொன்னீங்க

 அட்டர் ஃபிளாப். செம லாஸ்னேன் ,ஹிஹி

அப்போ  15 நாள் ஆகுமா உண்மை பேச?


=================

17  சார். சக்சஸ் பார்ட்டி பொதுவா எப்போ வைக்கனும்?

100 வது நாள் ல

உங்க படம் 100  நாள் ஓடும்னு நம்பிக்கை இருக்கில்ல? ஏன் 5 வது நாளே  அவசரம்?


=====================

18    சார். விஜய் கேரியர்லயே பெஸ்ட் படம் தெறின்னு சொன்னீங்களே, எவ்ளோ ரேட்டிங்?

3.8 /5


 சரி. தலைவாக்கு?

4 /5

 இப்போ  உங்க ஸ்டேட்டஸ்ல  எது பொய்? எது உண்மை?


=================

19 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மட்டுமல்ல கோஹினூர் வைரத்தையும்  தூம் 3 படத்தில் வருவது போல் மீட்போம்.எங்கள் பர்சனல் லாக்கரில் பத்திரப்படுத்துவோம்===================20  தலைவரே! மேடை ல ஏன் பேச மாட்டேங்கறீங்க?


எனக்கு பேச வராதுன்னு ஓப்பனா சொல்ல முடியுமா? செயலில் தான் ஆர்வம் காட்டுவேன்னு அடிச்சு விடவேண்டியதுதான்


=======================

0 comments: