Monday, June 06, 2016

முதல்ல லாபக்கணக்கு காட்டுவோம்,1 மாசம் கழிச்சு நட்டக்கணக்கு காம்பன்சேசன் கணக்கு

தலைவரே! மேடைல தனியா நீங்க பேசவே மாட்டிங்களா?ஆமா. ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் அவர். நான் தாரம் இல்லாமல் பேச மாட்டேன்.

=================

2 சார்.இந்த வசூல் புள்ளி விபரம் உங்களுக்கு ஏது?50/50 மூலம்.
சார்.உங்களுக்கு யார் தந்தா?


தாணு சார்.

கிரியேட்டிவிட்டி.

சார்.உங்களுக்கு?


==============

3 ஜட்ஜ் =டிபன் பாக்சுக்குள்ளே 1000,ரூபா நோட்டு வெச்சு வாக்காளர்களுக்கு தந்தீங்களா?
கைதி =2000 தரச்சோன்னேன்.50% கமிசன் அடிச்ட்டாங்க

===============

4 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா தமிழ்ப்படங்கள.100 கோடி.வசூல் ரெக்கார்டு செய்யும் ரகசியம் கற்றுத்தருவோம்


============

5 சார்.பட பூஜை போட்டதும் ஏதோ க்ளப்ல மெம்பரா சேர்ந்தீங்களே எதுக்கு?
அது தான் 100 கோடி கிளப்.அதுல சேர்ந்துட்டா ஒரு கெத்து கிடைக்கும்


===========

6 தலைவரே! எல்லாக்கட்சிகளும் வேட்பாளரை மாத்திட்டே இருக்காங்களே ஏன்?
ஆளுங்கட்சிக்கு நாங்க.தான் சரியான போட்டி னு காட்டிக்க


=============

7 நம்ம கம்பெனில வருசம் ஒரு டைம் தான் சம்பளம் .எவ்ளோவ் எதிர் பார்க்கறீங்க?
100 கோடி போதும் சார்

============

8 தலைவரே.உங்க அரசியல் வாரிசா உங்க பையனை தாராளமா அறிவிச்சிடலாம்..
எப்டி? உங்களை மாதிரியே லோ லெவல் டபுள் மீனிங் பேச்சுக்கலை வந்துடுச்சு


==============

9

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சின்ன வீடு கட்டித்தரப்படும். அதற்கான வாடகை, மராமத்து செலவை கட்சியே ஏற்கும்


==================

10  

ஜட்ஜ் = கே ஆர் விஜயா மகளுக்கு தொந்தரவு தந்தியா?

கைதி = நானும் தனி, அவரும் தனி. சரி கூட்டணி அமைக்கலாம்னு பேச்சு வார்த்தைக்கு கூப்ட்டனுங்==================

11 

 தலைவரே! யார் மேல கை வெச்சாலும் உங்க செக்யூரிட்டி மேல கை வைக்காதீங்க?


 ஏன்?

 நாளைக்கே ஒரு கலவரம் வந்தா இதான் சாக்குன்னு உங்களை விட்டு ஓடிட்டா?

======================

12 சார், நடிகர் சங்கத்தை விட்டு ஏன் விலகுனீங்க?

வருசம் ஒரு படமாவது சொன்ன தேதிக்கு ரிலீஸ் பண்ணனுமாம், என் சவுகர்யத்துக்குதான் நடிப்பேன்


==================

13  ஜட்ஜ் - பீப் சாங்க் பாடின நடிகர் நீங்கதான்னு வழக்கு இருக்கு

கைதி = நான் நடிகர் சங்கத்துலயே மெம்பர் இல்லை, இந்த வழக்கு செல்லாது, பிம்பிளிக்கி பிளாப்பி, ஃபிகர் இருக்கும் ஊர் ஆலப்பி


===================

14  சார் நடிகர் சங்கத்தை  விட்டு ஏன் விலகீட்டீங்க?

 அங்கே ஒரே ஆம்பளைங்க கூட்டமா இருக்கு, எதுனா நடிகையர் சங்கம் இருந்தா இணைஞ்சிடலாம்னு பார்க்கேன்


====================

15  தலைவரே! வாழ்த்துகள்

 எதுக்குயா? இன்னும் எலக்சனே வர்லையே?

100 கேடி கிளப்ல நீங்க சேர்ந்துட்டீங்களாம். நீங்க தான் நெ. 1


=====================


16 சார். இந்தப்படத்துல வில்லன், ஹீரோயின், காமெடியன் யாருமே இல்லையா? ஏன்?

 படம் பார்த்தவங்க இது ஒன் மேன் ஷோ-ன்னு சொல்லனும்னு ஹீரோ ஆசைப்படறாரு 


==================

17  சார், உங்க அப்பா ஒரு புரொடியூசர் தானே?

ஆமா.

 உங்க படம் எல்லாம் 100 கோடி வசூலிச்சிடுதுதானே>

ஆமா
 அப்புறம் ஏன் நீங்க சொந்தப்படம் எடுக்காம அநியாயமா அடுத்தவங்களுக்கு சம்பாதிச்சுத்தர்றீங்க?


==================

18 சார், ஆண்டிப்பட்டில கம்மி வசூல், அமெரிக்கால பயங்கர வசூலா? எப்படி?

 லோக்கல்னா நேர்ல போய் விசாரிச்சுடுவ. ஃபாரீன்னா நம்பிதானே ஆகனும்?=================


19    சார். எனக்கு 2 கோடி ரூபா லாபம்

 எப்டி? நீங்க தான் இந்தப்படத்தை வாங்கவே இல்லையே?

 வாங்காததாலதான் என் பணம் 2 கோடி லாஸ் ஆகாம லாபம்னு சொல்றேன்


====================

20  
சார், செங்கல்பட்டில் படம் ரிலீஸ் ஆகல, நட்டக்கணக்கு வர்ல?

முதல்ல லாபக்கணக்கு காட்டுவோம்,1 மாசம் கழிச்சு நட்டக்கணக்கு காம்பன்சேசன் கணக்கு

==================

0 comments: