Wednesday, June 01, 2016

அஜித் VS ஜெ VS ராமதாஸ்

எந்த பதவியும் எனக்கு வேண்டாம்- ஸ்டாலின் # வேண்டாம் என்பது அரசியல்வாதி அகராதியில் வேண்டும் என பொருள்,ஆனா கலைஞர் கண்டுக்க மாட்டேன்றாரு=================


சேலத்தில், வீரபாண்டியார் திராவிட முன்னேற்ற கழகம் (வீ.தி.மு.க) என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது # இந்த கட்சிக்கும் கலைஞர் 1 சீட் ஒதுக்குவார்

==============

3 அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் அதிரடி மாற்றம்; 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு # மாற்றம் ,முன்னேற்றம்கற பாமக ஸ்லோகனை இவங்க தான் கரெக்டா ஃபாலோ பண்றாங்க


==============

இதுவரைஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்காதவர், மீண்டும் ஆட்சிக்குவந்தால் மீட்பாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதிகேள்வி # அதே கேள்வியை அவர் திருப்பிக்கேட்டா நம்ம நிலைமை?

===============

5 அறிவாலயத்தை பிடிக்கலாம்; ஆட்சியை பிடிக்க முடியாது - விஜயகாந்த் # இப்போ மேடைல பேசறவங்க பெரும்பாலும் சாபம் தான் விடறாங்க. மக்கள் வேண்டும் வரம் கிடைக்காது போல


======================

6 சேலத்தில், வீரபாண்டியார் திராவிட முன்னேற்ற கழகம் (வீ.தி.மு.க) என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது # வீதி , மு.க எதுனா குறியீடா?

============

7 இந்திராகாந்தியின் காலில் சரணாகதியாக கிடந்தார் கருணாநிதி- நாஞ்சில் சம்பத் தாக்கு!# ஜெ வின் காலில் விழுந்த வாக்கில் இதை வழங்குவது உங்கள் சம்பத்


==============

8 சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி காவல்துறை ஆய்வாளர் பல கோடி ரூபாய் மோசடி!# இதை விசாரிக்க ஒரு ஆய்வாளரை நியமிக்கனும்.போலி போலீஸ்

================

9 தேமுதிகவை எந்த கட்சியாலும் பிளவு படுத்த முடியாது-பிரேமலதா! # அப்போ சந்திரகுமார் அண்ட் கோ பேக் டூ பெவிலியனா?

================


10 நாற்காலி இல்லாமலே உட்காரும் அமைச்சர்கள்...

நடித்து காட்டி வேதனைப்பட்ட ஸ்டாலின்.# அப்பாவைப்போலவே நடிப்பும் நல்லா வருதே மகனுக்கும்

==================


11 தேர்தலில் 234 தொகுதியில் போட்டி.CM வேட்பாளர் அர்ஜூன் சம்பத். - இந்துமக்கள் கட்சி # ஆக்சன் கிங் அர்ஜூன் நின்னாலே 1 % ஓட்டு கூட வராது,இவரு யாரு புதுசா?

=============

12 இது தான் என் கடைசி தேர்தல்; இனிமேல் எந்த
தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம்  சி எம் தருண் கோகோய், # இது கலைஞர் டயலாக் ஆச்சே?


====================

13 தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்:  # எல்லா கட்சிகளும் இதே டயலாக்கைத்தானுங்க அடிச்சு விட்டுட்டு இருக்கு


=================


14 அ.தி.மு.க.,வை எதிர்த்து நிற்பது சாதாரண கட்சி தானே என, எதிரியின் பலத்தை அறியாமல் இருக்கக் கூடாது.-தமிழக அமைச்சர் தங்கமணி: # அப்போ எதிரியே எனக்கு இல்லைனு ஜெ சொன்னது பொய்யா?


===================


15  பா.ம.க., தேர்தல் அறிக்கையை, தி.மு.க., காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.-கனிமொழி # அப்போ மதுவிலக்கு என்பது மட்டும் விதிவிலக்கு? என்பதை நீவிர் விளக்கு


=========================


16  '2ஜி' ஊழல் செய்த ராசா, தி.மு.க.,வில் இன்னும் கொள்கை பரப்பு செயலராக உள்ளார்.-விஜயகாந்த்  # 4 ஜி வேற வருதாம்,டபுள் தமாக்கா தான் திமுக வுக்கு 


===================

17  என்னிடம் தவறாக நடக்கப்பார்த்தார் சந்திர குமார் - பிரேமலதா # அதை ஏன் அப்பவே சொல்லலை? நோ வே?


=================


18 

பிரசாரத்தின்போது விஜயகாந்த் படத்தைப் பயன்படுத்தமாட்டோம்: வி.சி.சந்திரகுமார்  # அப்டி செஞ்சா திமுக ஓட்டும் தேமுதிக வுக்குப்போய்டும் இல்ல?=================


19 

ஆர்.கே.நகரில் ஜெவை எதிர்த்து திறமையான வேட்பாளரை நிறுத்துவோம்- இல ,கணேசன் # மோடியை நிறுத்துனாத்தான் உண்டு=================

20 ராமதாஸுக்கு முகவரி கொடுத்தவர் ஜெ.- பு.தா. இளங்கோவன் # அஜித் நடிச்ச முகவரி பட டிவிடி யை அவர் எதுக்கு இவருக்கு தரனும்?


=============


0 comments: