Monday, June 06, 2016

வசதி தேவி VS வசந்தி தேவி

கட்சிகாரர்களை முதலில் தலை நிமிரச் செய்யுங்கள், ஜெ குறித்து விஜயகாந்த் விமர்சனம்..# கூன் போட்டிருந்தாதான் சீட்டே!


=============

2 மக்களைச் சந்திக்காத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தண்டிப்போம்: ஸ்டாலின் # உங்களுக்கு ஏன் அவ்ளோ சிரமம்.எம்.எல் ஏ ஆக்காமயே விட்டுட்டா வேலை கம்மி

==============

3 தமிழகத்தை நாடே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறேன்.. ஜெ. பெருமிதம் # ஆமா.வெள்ளம் வந்தப்போ ஸ்டிக்கர் ஒட்னதை நாடே திரும்பிப்பார்த்துது


============


4 அதிமுக, திமுகவிடம் பணத்தை கொள்ளை அடிக்கும் தகுதி மட்டுமே இருக்கிறது - விஜயகாந்த் # கறுப்புப்பணத்தை வெள்ளை ஆக்கும் திறமையும் இருக்கு

===============

5 வெளிநாட்டு ஆண்களின் காதல் வலையில் விழ வேண்டாம் : சீன அரசு # அந்தந்த நாட்டு பெண்கள் அவரவர் நாட்டு ஆண்களிடமே ஏமாறவும்

=============

6 ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!-ஸ்டாலின் (சிம்ம ராசி) வாய் ல இருந்து தப்பி முதலை வாய்ல விழுந்த கதை தான்


=============

7 அப்பா வழியில்... பழங்கதைகளைப் பேசி தொண்டர்களைக் கவரும் ஸ்டாலின் # அப்டியே அப்பா எதிர்பார்த்த பழம் கனியாமல் போன கதையையும் சொன்னா தேவலை,அதுவும் “பழங்” கதை தானே?


===============

8 சென்னை வெள்ளம்.. “இலைச் சோற்றில் இமயமலையை மறைக்கிறார் ஜெ”... ஸ்டாலின் தாக்கு # ”அண்ணாமலை”யையே அவரால மறைக்க முடியலை

==============

9 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை: சீமான் வாக்குறுதி # எல்லா தனியார் துறையையும் அரசே ஏற்று நடத்தனும் அதுக்கு


==============

10 சிங்கம் போல் ‘சிங்கிளா’ வந்து ஜெயலலிதா ஜெயிப்பார்: நடிகை விந்தியா பஞ்ச் # நட்சத்திர பங்களா , நிக்காதே நீ சிங்கிளா-ன்னு கவிஞர் பாடி இருக்காரே?

========================


11

இந்தியாவுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்பட வேண்டும்-ஃபரூக் அப்துல்லா # அதுக்கு அச்சாரமாத்தானே சானியா மிர்சாவை பொண்ணு குடுத்திருக்கோம்?==================


12 

நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு தொல்லை: கோவை  ரியல் எஸ்டேட் அதிபர் கைது # ரியல் எஸ்”டேட்டிங்” கூப்பிட்டிருக்கார்


================


13 

தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய நிலையில் திமுக இல்லை- கனிமொழி  # அப்போ அப்படி ஒரு நிலைமை வந்தா பணம் கொடுப்பீங்க?====================


14 எதிரிகளை மன்னித்தாலும், துரோகிகளை நான் மன்னிக்கவே மாட்டேன். - விஜயகாந்த் #  தமிழ் ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புன்னீங்க, இப்போ எதிரியை மட்டும் மன்னிக்கலாமா?

===================


15 

  ஜெ ஏன் ஹெலிகாப்டரில் வந்து மக்களைப்பார்க்கிறார்? - விஜய்காந்த் # மேல இருந்து பார்த்தா தான் மக்களும், அவங்க பிரச்சனையும் சிறுசா தெரியும்

=====================

16  நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் -சிம்பு # சார், அப்புறம் எந்த நடிகை கூடவும் டேட்டிங்க் போகவோ கடலை போடவோ முடியாது, பரவால்லியா?


=====================


17 ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் களமிறங்கும் முனைவர் வசந்திதேவி # வசதி தேவி VS வசந்தி தேவி , ஜெயிக்கப்போவது யாரு?

===============

18 கிரிக்கெட் நடத்தி நடிகர்களை ஜோக்கர் ஆக்கிய நடிகர் சங்கத்தில் இருக்க மாட்டேன்: சிம்பு ஆவேசம் # சங்கமே அபராதத்துல (ஜோக்கரா) தான் ஓடிட்டு இருக்கு

============

19

தமிழக முதல்வராக எனக்கு தகுதி இல்லையா?- வாழப்பாடியில் விஜயகாந்த் ஆவேசம் # இப்ப்டி அடிக்கடி ஆவேசப்பட்டுட்டே இருந்தா மக்களே ஓட்டுப்போட பயந்துக்குவாங்================

20 

விடியல் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம்: ராம்விலாஸ் பஸ்வான் தமிழகம் வருகை - நா.ம.க. தலைவர் கார்த்திக்# மக்களுக்கு இந்தக்கட்சியோட விலாசமே தெரியாதுன்னு ராம் விலாஸ்க்கு தெரியுமா?


=================

0 comments: