Thursday, June 16, 2016

மது விளக்கைக்கொண்டுவருவோம்

தமிழகத்தில் காட்டாட்சி   நடக்கிறது - கலைஞர் #  வீட்டுக்கு ஒரு கட்டில் கொடுத்துட்டு இதுதான் COT ஆட்சின்னு சமாளிக்கப்போறாங்க


=================
எங்கெங்கு போட்டியிடுவது? - ஆம் ஆத்மி ஆலோசனை # FAIL மார்க் எடுக்கப்போறோம்.எங்கே உக்காந்து எக்சாம் எழுதுனா என்ன?ஈசானி மூலையேதான் வேணுமா?


=============


3 கூட்டணி தர்மத்தை குழித்தோண்டி புதைத்தவர் ரங்கசாமி-ஜெ # நாம மட்டும் தர்ம தேவதையாவா நடந்துக்கிட்டோம்.வைகோ ,கேப்டன் ,சரத் என நீளும் பட்டியல்கள்


==============
4 லோக்சபா தேர்தலில் பாஜக 19% வாக்கு வாங்கியதால் இத்தேர்தலில் 10% வாக்கு வாங்கும்- இல கணேசன் # மோடி அலைக்காக விழுந்தவை அவை. இப்போ 2% கூட தேறாது==============5 திராவிடன் உயர்ந்தால் தான் திராவிட நாடு உயரும்,  திராவிட மக்கள் உயர, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.-கலைஞர் # யார்?ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி போன்ற திராவிடர்களா?=====================


6   முதல்வரின், ஆர்.கே.நகர் தொகுதியில் தான், 90 %மக்கள், தினக்கூலிகளாக இருக்கின்றனர்-வசந்திதேவி பேச்சு: # அது தெரிஞ்சிதான் ஜெ தன் தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கார் போல


==================

எங்கள்  கூட்டணி தமிழகத்தில், 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்-.எல்.கே.சுதீஷ் # அன்பு மணி 200 ல் ஜெயிப்போம்னாரே?மொத்தம்  350 வருதே?


==============


ஜெ., சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில்...இரட்டிப்பு! 2011ல் 64 கோடி - 2016ல் 113 கோடி ரூபாய் # சசிகலா சிட்பெண்ட்ஸ் ல டெபாசிட் பண்ணி இருப்பார் போல, செம வட்டியா இருக்கு

=================


நடு ரோட்டில் கீழே விழுந்து ஜெ வை வணங்கிய தமிழக அமைச்சர்கள்.-ஜெ அன்பழகன் # ஓரமா வணங்கினா ஓரங்கட்டப்படுவார்களாம்============

10 கருணாநிதியின் குடும்பம் கொள்ளை குடும்பம்: நாஞ்சில் சம்பத் # குடும்பப்பாங்கான கொள்ளைக்காரர்னு சொல்றீங்களா?==============11 அம்மாவுக்காக வெயிலில் வெந்து மடிய தயார்: நாஞ்சில் சம்பத்! # சரி, மேடையை விட்டுக்கீழே இறங்கி இங்க வந்து பேசுங்க.மேடைல வெய்யில் வராது
===========
12 அன்புமணிக்கு சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் மட்டுமே# பேர்லயே மணி இருக்கு, ஆனா சொத்துல MONEY இல்லையா? சரி நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை============13 தாயார் நினைவிடத்தில்  வணங்கி திருவாரூர் தொகுதியில் கலைஞர் வேட்பு மனு -செய்தி # கலைஞர் அம்மாவை  வணங்கினார்-னு நமது எம்ஜிஆர்ல ஹெட்டிங் நியூஸ் போடுவாங்களோ?=================


14 சொத்து மதிப்பு
கலைஞர் : 63 கோடி
ஜெ: 113 கோடி - செய்தி #தமிழக அரசியல்வாதிகளிலேயே  கலைஞர்தான் ரொம்ப தன்னடக்கம்.


==================


15 தாயார் நினைவிடத்தில்  வணங்கி திருவாரூர் தொகுதியில் கலைஞர் வேட்பு மனு -செய்தி  # கலைஞரே அம்மா செண்ட்டிமெண்ட் பார்க்கறப்ப பாமர ஜனங்க அம்மா செண்ட்டிமெண்ட்ஸ்ல நம்பிக்கை வைக்கமாட்டாங்களா?


=================


16 உதவியாளர்க்கு வியர்த்துக்கொட்டியதால் விஜய்காந்த் அவருக்கு விசிறி விட்டார்-செய்தி # இதனாலதான் கேப்டனுக்கு ஏகப்பட்ட விசிறிங்க தமிழ்நாட்டில்


=======================

17  

திமுக சாதி மோதலை தூண்டுவதாக வைகோ சொல்வது அபாண்ட பொய்: ஸ்டாலின் # அ”பாண்டவர்” பொய் பேசலாம், பாண்டவர் எப்டி பொய்  பேசுவார்?=================


18 மதுவிலக்குதான் முதல் கையெழுத்து: மு.க.ஸ்டாலின் உறுதி # ஒருவேளை ஆட்சிக்கு வந்தா நாங்க சொன்னது மது விளக்கைக்கொண்டுவருவோம்னு பிளேட்டை திருப்பிப்போடப்போறாங்க


==================


19 

3டி வேகத்தடையை பயன்படுத்த மத்திய அரசு முடிவு # அழகா இருக்கேன்னு திருடி எடுத்துட்டுப்போய்டப்போறாங்க ஜனங்க==================

20 

வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு # அங்கேயும் கடன் தான் இருக்குனு குண்டைப்போடப்போறாரு=====================

0 comments: