Sunday, June 12, 2016

குஷ்பூ இட்லி vs நமீதா இட்லி

டியர், லவ் பண்றப்போ மணிரத்னம் போல் சுருக் பேச்சு, மேரேஜ்க்குப்பின் கிருபானந்தவாரியார் போல்  நீட்டி முழக்கின பேச்சு ஏன்?

 ஏன்னா அப்போ நீ பியூட்டி, இப்போ பாட்டி

=================

சார், இந்த சீன்ல ஒரே பாட்டில் ஹீரோ லட்சாதிபதி ஆகறார் , நம்ப முடியலயே?

6 நாள் ல ஒரு படம் 100 கோடி வசூல்ங்கறதை நம்புவ, 6 நிமிச பாட்டில் சம்பாதிச்சா நம்ப மாட்டே?

================

3 டியர், "நான் அதிகம் பேச மாட்டேன்

இப்டித்தான் எல்லாப்பொண்டாட்டிகளும் சொல்றாக, ஆனா பேசுறது பூரா பொண்ணுங்க தான்


=========================


4 சார், பேப்பர்லயே 100 கோடி வசூல்னு போட்டாச்சு, ஏன் நம்ப மாட்டேங்கறீங்க?

தினத்தந்தில 50,000 ரூபா குடுத்து விளம்பரம் போடச்சொன்னா நீங்க என்ன தர்றீங்களோ அதை அப்டியே போடுவாங்க


===================


5  தலைவரே! 48% பேரு குடிகாரங்க இருக்கும் தமிழகத்தில் மதுவிலக்கு பேசி எப்டி ஓட்டு கேட்கறீங்க?

   எப்படியும் மதுவிலக்கு வராதுனு குடிகாரனுங்களுக்கு தெரியும்


======================


6   தலைவரே! குடும்ப ஆட்சி, குடும்ப அரசியலை ஆதரிப்பீங்களா? எதிர்ப்பீங்களா?

 ஆதரிப்பேன், ஏன்னா எனக்கு ஏகப்பட்ட குடும்பம் இருக்கு, வாரிசுகள் இருக்காங்க


=====================


7  மிஸ்! நீங்க ஃபேஸ்புக்ல யார் யாரை பாலோ பன்றீங்க?


ஏன்?

எனக்குத்தெரிஞ்சவங்களை நீங்க பாலோ பண்ணி இருந்தா நான் உங்களை பாலோ பண்றது ஆபத்து


================

8 தலைவரே! ஆதிபராசக்தி யை பாத்துட்டு வந்தீங்களா?


ஆ! அது வந்து ஆங்.விஜய் தோன்றிய ஆதி ,கலைஞர் வசனம் ஊன்றிய பராசக்தி 2 படமும் பார்த்தேன்


===============

9 டியர்.சின்ன வீட்டுக்குப்போறதை நிறுத்தனும்.


சாரி.படிப்படியா தான் போறதை குறைக்க முடியும்==============

10 டியர்.இன்னைக்கு உலக புத்தக தினமாம்.


அப்டியா?சரோஜாதேவி புக் வேணுமா?

நோ.உங்க சைன் பண்ணுன செக் புக் வேணும்==============

11 டியர்.நான் ஒரு மர மண்டைன்னு தெரிஞ்சும் எப்டி லவ் பண்ணே?


வெய்யில் காலத்துல குளுகுளுனு இருக்கும்னுதான்===============

12 மகளிர் காவல் நிலையத்துல நம்ம தலைவர் சேட்டை பிடிச்சு வெச்சிருக்காங்களாம்


அய்யய்யோ அங்கே இருக்கும் லேடி போலீஸை எல்லாம் யார் காப்பாத்துவா?


===============

13 டீச்சர், இப்போ BAD TIMES FOR INDIA, BAD TIMES OF INDIA   எது சரி?


BAD ”TIMES OF INDIA ” என்பது கரெக்ட்


================

14  காதலிச்சவனையே கட்டிக்கிட்டா உன் எதிர்காலம் பிரகாசமா அமையும்.

ஓ, இல்லின்னா?

 ஜி வி பிரகாஷ் மாதிரி எல்லார் கிட்டயும் திட்டு வாங்குவே


=================

15 தலைவரே! மேல் மருவத்தூர்க்கு ஏன் போனீங்க? ‘’


சாரி,அது மருவத்தூரா? மருத்துவர் ஊர்னு நினைச்சு போய்ட்டேன்


===============


16  தலைவரே! பல மாசமா சிரமப்பட்டு நமக்கு நாமே திட்டப்படி மக்களை சந்திச்சோம் , கடைசில அவங்க ஒரே ஒரு நமீதா வை இறக்கி விட்டு நம்மை சாய்ச்சுப்புட்டாங்களே?==================
17     சர்வர் , குஷ்பூ இட்லி இருக்கா?


 அது ஆறிப்போய்டுச்சு, நமீதா இட்லி இருக்கு வேணுமா?----------------------18   மேடம், டிவி சீரியல்ல வில்லியா நடிக்க வேண்டியவங்க எதுக்கு அரசியலுக்கு வரனும்னு சிலர் கேட்கறாங்களே?

 நிஜமான வில்லனுங்களே அரசியல்ல இருக்கும்போது நான் வந்தா என்ன?


=================

19  மேடம், எதிர்க்கட்சில   சேராம ஆளுங்கட்சில ஏன் சேர்ந்தீங்க?

 நமீதா = இங்கே மட்டும் தான் ஆம்பளைங்க எல்லாரும் குனிஞ்ச தலை நிமிராம அடக்கமா இருக்காங்க======================


20      மேடையில்  முக்கியப்பேச்சாளர்கள் இன்னும் வர வில்லை. அதுவரை  நமீதா பார்வையாளர்களுக்கு கவர்ச்சி நடனம் ஒன்றை ஆடிக்காட்டுவார்


====================

0 comments: