Saturday, June 04, 2016

கவர்னர் ஆட்சி @ தமிழகம்?

நான் கருணாநிதியின் மகன் ஆதாரமில்லாமல் பேச மாட்டேன்-ஸ்டாலின் # ஆதாயம் இல்லாமல் பேச மாட்டேன்னு படிச்ட்டேன்


=============
2 அம்மா உணவகம், என்பதை அண்ணா உணவகம் ஆக்கறாங்களாம்.தி.மு.க.,வை அண்ணா தி.மு.க., என்று மாற்றிவிட வேண்டியது தானே?-விந்தியா# அம்மா திமுகனு நீங்க மாற்றத்தயாரா?==================


3  அம்மாவைபற்றி பேச விஜயகாந்த்திற்கு தகுதியில்லை-சரத் # என்னைப்பற்றிப்பேச ராதிகாவுக்குத்தகுதி இல்லைனு அவர் இன்னும் சொல்லலை,நல்லவேளை

================

4

. 70 லட்சம் பேரை தமிழகத்தில் குடிகாரராக மாற்றி, 3 கோடி குடும்பங்களை வேதனை கண்ணீர் வடிக்க வைத்தவர் தான் ஜெ- கனிமொழி #  டிஸ்ட்ரிபியூட்டரும், சப்ளையர்சுமே நம்மாளுங்க தானே?


================


5  தமிழகத்தில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 50%இளைஞர்கள், எங்கள் அணிக்கு ஆதரவாக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன-வை.கோ# ஒவ்வொரு கூட்டத்திலும் கேப்டன் பேசும்போதும் அந்த % குறைஞ்சிட்டே வருதாமே?

====================
===================7  திமுகவும், அதிமுகவும் தான் மது ஆலைகள் நடத்துகின்றன: வைகோ # ஆமா, சிகரெட் கம்பெனி மட்டும் மதிமுக நடத்துது


====================


8 தேமுதிக - ம.ந.கூ தலைவர்கள் கறை படியாத கைகள்: பிரேமலதா # மக்கள் நலனில் அக்கறை இருந்தா போதும், கறை படியாது


================

9 மக்கள் பணியாற்றத் தவறும் கட்சியினர் மீது நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி # தன் வீடு, மனைவி, மக்கள் இவங்களுக்குத்தானே எல்லா அரசியல்வாதிகளும் பணி ஆற்றுகிறாங்க?

================


10 தொகுதிகளை பார்வையிடாதவர் ஜெயலலிதா: ஸ்டாலின்‌ குற்றச்சாட்டு # இல்லையே? மழை வெள்ளம் வந்தப்போ 4 நாள் கழிச்சு ஹெலிகாப்டர்ல வந்து பார்த்தாரே?


=================

11 விஜயகாந்த் எங்களுக்குப் போட்டியே அல்ல: அன்புமணி # அப்போ சீமான் தான் உங்களுக்கு சரி நிகர் சமான போட்டியா?


==============

12 திமுக தேர்தல் அறிக்கை தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டது: மு.க. ஸ்டாலின் # நாளை கிடைக்கும் பலாக்காயை விடுங்க, இன்னைக்குக்குக்கிடைக்கும் கிலாக்காய் பற்றி சொல்லுங்க

===============

13 வேளச்சேரியில் ஆயிரம் கோடி ரூபாயில் திரையரங்கம் வாங்கியுள்ளதாக ஜெ மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு # விரைவில் அம்மா தியேட்டர் வருமா அப்போ?

======================

14 பயத்தினால் தான் திராவிட கட்சிகள் தங்களை விமர்சிப்பதில்லை: அன்புமணி # எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத லோ பட்ஜெட் சினிமாப்பட விமர்சனம் வர்லைன்னா பயம்னு அர்த்தமா?


==============


================


16 156 இடங்களில் பா.ஜ., போட்டி: தமிழிசை அறிவிப்பு # இது பிஜேபியின் பிரம்மாண்ட  வளர்ச்சி. டெபாசிட் பயம் இல்லாம 156 பேர் நிக்க தயாரா இருக்காங்களே?


====================

17  வீதிகளில் மது கடைகள் திறந்தவர் ஜெ., பிரசாரத்தில் ஸ்டாலின் பதிலடி # தமிழன் நடு வீதில தான் நிக்கனும் என சிம்பாலிக்கா சொல்றார் போல

=======================18 நான் நல்லவனா, கெட்டவனா?: தெரியாது - விஜயகாந்த் # இது நாயகன் கமல் டயலாக் ஆச்சே?தேர்தலில் வெற்றி “நாயகன்” ஆக ஐடியாவா?


====================


19 தமிழக மக்கள் ஊழல் அற்ற நேர்மையான அரசை தேர்ந்தெடுப்பார்கள்; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு # அப்போ கவர்னர் ஆட்சி தானா?

==============

20 அ.தி.மு.க.,-தி.மு.க., வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது: பிரேமலதா காட்டம் # தேமுதிக வந்தால் ஒப்பேற்றவே முடியாதுன்னு சொல்றாங்களே?


==========================

0 comments: