Thursday, June 02, 2016

ஜாண்டி ஜாண்டி எஸ் பாப்பா

உங்க பொண்ணு கணக்குல புலி ன்னீங்க.அப்டீன்னா?அவுட் னு அர்த்தம்

============

2 சார்.2 எழுத்து நமக்கு ராசி இல்லை. துப்பாக்கி ராசி 5எழுத்து ஓக்கேஅப்போ அடுத்த படத்துக்கு வரி பாக்கி னு வெச்சுடுவோமா?

=============

3  ஜட்ஜ் =  கட் அவுட்க்கு பாலபிஷேகம் பண்ணதே தப்பு , அதையும் திருடி இருக்கீங்க?

 கைதி = சாரி சார்.அதுக்காக பாலியல் துஷ்பிரயோகம் கேஸ் போட்றாதீங்க


==================


பொன்னாடை போர்த்துனா தலைவ்ருக்குப்பிடிக்காதாமே?

 ஆமா, பொண்ணாடை போர்த்துனா பிடிக்கும், தாவணி துப்பட்டா இப்படி


===============


ரெடிமேடு-ன்னா இன்னா?

ஆல்ரெடி தைத்து  ரெடியா வெச்சிருப்பது. 

 ரெடிமேடு ஹிட் ஃபிலிம்னா?

ஆல்ரெடி ஹிட் ஆன படத்தை அப்டியே எடுத்து வெச்சிருப்பது # இந்தியாடுடே


================


6 சார், நான் ஆரம்பிக்கப்போகும் புரொடக்சன் கம்பெனிக்கு ஒரு பேர் சொல்லுங்க

 ஆஹா ஓஹோ புரொடக்சன்னு வைங்க, யாராவது கேட்டாக்கூட ஆஹா ஓஹோ அப்டினு சொல்லிடுவாங்க எல்லாரும்


================

டாக்டர். நாய் தொரத்தினா ஓடக்கூடாது..அப்டியே அசையாம அத பாக்காத மாதிரியே நின்னுடமாமே? நிஜமா மாமே?ஆமா.அப்பதான் நாய் க்கு வசதி


=============


8 1கோடி கடனை அடைக்கலாம்னு மேட்ச் நடத்துனீங்களே என்ன.ஆச்சு?ஆடியன்சே.வர்லை.10,கோடி.நட்டம்


=============99

9

 மாப்ளைக்கு பால் வடியும் முகம்னு  சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்


 என்னடி ஆச்சு?

 இப்போ பால் பாக்கெட்டை திருடறாரு


===============


10   

சார், நட்சத்திர கிரிக்கெட் க்கு வந்த கூட்டம் ரொம்ப கம்மியா இருக்காமே?


அதை ஏன் கேட்கறீங்க? ஆட வந்த மெம்பர்சை விட வேடிக்கை பார்க்க வந்தவங்க பாதி கூட இல்லையாம்==================

11  

வேலை வெட்டி இல்லாதவனுக்கு எம் பொண்ணைக்கொடுக்க முடியாது. சிங்கிள் டீக்கே சிங்கி அடிப்பா


 டாடி, அவர் பால் பாக்கெட் நல்லா திருடுவாரு


==================


12  நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  எங்கள் கட்சி ஆட்களின் மதுபானக்கடைகளை மூடுவோம். வராவிட்டால் மேன்மேலும் கள்ளச்சாராய ஆலைகள் திறப்போம் என எச்சரிக்கிறோம்


================


13 நான் உளுந்தூர்ப்பேட்டையில்  தோற்றால் எனது 2 மகன்களையும் வைத்து  சகாப்தம் 2 மெகா சீரியலாக கேப்டன் டிவியில் தினமும் வரும்  என எச்சரிக்கிறேன்

=================

14 கோடிக்கணக்கான ஸ்டிக்கர்கள் இப்போ  ரெடி ஸ்டாக் இருப்பதால் அடுத்த முறை வெள்ளம் வரும்போது ஸ்டிக்கர் புரொடக்சனுக்கு தாமதம் வராது என உறுதி அளிக்கிறேன்,அண்ணா நாமம் வாழ்க


================


15   உடன்பிறப்பே! இன்று  உலக பாரம்பரிய தினம், தமிழனின் பாரம்பரிய குணம் என்ன? 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது. பாரம்பர்யத்தை மீறாதீர்!( கற்பனை)


==================


16  தலைவரே! எம் பி யா எந்த ஏரியாவில் இருக்கீங்களோ அதே ஏரியாவில் எம் எல் ஏ சீட்க்கு இப்போ நிற்கறீங்க

 ஆமா

 அப்போ இது பின்னேற்றம் தானே? எப்டி முன்னேற்றம் ஆகும்?

===================

17  தலைவரே! ஊரான் சொத்தை கொள்ளை அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க

எதுக்கு?

நீங்க மட்டும் ஓட்டுக்கு சத்தியம் கேட்கறீங்க?

==================

18 கையில கொஞ்சம் காசு சேர்ந்துட்டா போதும் யாருக்காவது புத்திமதி சொல்ல கெளம்பிடுவீங்களாமே?

இல்லையே? தியேட்டருக்குதான் கிளம்புவேன்


====================

19 மிஸ்! வாசல் கேட் லாக்டு? நோ வீட்டுக்கதவு? சாரி அப்போ எதைத்தான் லாக் பண்ணீங்க? ட்விட்டர் அக்கவுண்ட்டை # ஜாண்டி ஜாண்டி எஸ் பாப்பா


====================

20 மாமா , உங்க பொண்ணுக்கு பரத நாட்டியம் ஆடத்தெரியுமா?

 இப்போ தெரியாது. மேரேஜ்க்கு அப்புறம் கோபம் வந்தா  எல்லா வகையான ஆட்டமும் ஆடிக்காட்டுவா


=======================

0 comments: