Thursday, June 09, 2016

சரத்குமார் - விஜயகாந்த்: மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்

ஒரு வில்லியிடம் இருந்து உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன்!-ஸ்டாலின் # வில்லியிடம் இருந்து காக்க வந்த கில்லி?னு போஸ்டர் ஒட்டிடலாமா?

=============


2 ஜெ ஆணையிட்டால் பிரச்சாரத்துக்கு தயார்: - மதுரை ஆதீனம்
# இவரு பெரிய எங்க வீட்டுப்பிள்ளை.சவுக்கை எடுத்தா நம்பியார்கள் பயந்துடுவாங்க

==========

3 ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக நிற்பது நான்தான்: தொண்டர்களுக்குகருணாநிதிகடிதம்# கெட்டப்ல கமலையும் மிஞ்சிய கலைஞர்.234 கெட்டப்"


===========

4 என் வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை: விஜய் மல்லையா # கடன் காரர்களுக்கு ரோசம் எதுக்கு?

=============


5 பா.ஜ.க-வின் விஷவித்துக்களை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்-EVKS # இல்லைன்னா காங்கிரஸ் போல் அதுவும் தமிழகத்தில் கை ஊன்றி நின்னுடும்?


===============


6 மது விலக்கு குறித்து திமுக முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறது: ராமதாஸ்
# என் குடும்பம்.அரசியலுக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள் கூட முரண்தான்

============


7 சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடையவில்லை: ராதிகா சரத்குமார் விளக்கம்
# நீங்க சொன்னா நம்ப மாட்டோம்.ஹவுஸ் ஓனர் சொன்னாதான் நம்புவோம்

===============

8 சரத்குமார் - விஜயகாந்த்: மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் - ராதிகா சுளீர்
# ஆமா.1 சீட் எங்கே இருக்கு? 100+ஸீட்ஸ் எங்கே இருக்கு?


=============


9 தேமுதிக அலுவலகத்தில் கல்வீச்சு எதிரொலி.. விஜயகாந்த் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு #அப்போ வீட்ல கல்லெறிஞ்சா ஆஃபீஸ்க்கு பாதுகாப்பு போடுவாங்களா?

=============


10 இன்னும் 35 வருடங்களில் இந்தியா குடிநீரை இறக்குமதி செய்யும் நிலை வரலாம்: ஆய்வில் அதிர்ச்சி # அப்போக்கூட அரசியல் கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிநீர் இலவசம்னு வாக்கு தருவாங்க

==================


11 ஜெ. சொன்னது மாதிரி சங்கிலிதிருடர்கள் ஓடலை. தொழிற்சாலைகள்தான் ஓடுகின்றன: பாஜக # எப்படியோ ஃபேக்டரி ரன்னிங்க் ஆகிட்டிருக்கு இல்ல?னு சமாளிப்பாரோ ஜெ?

=================

12 பாமகவில் மயிலாப்பூர் உள்ளிட்ட 4 தொகுதி வேட்பாளர்கள் மாற்றம் # மற்ற காட்சிகள் மாத்துனப்போ கிண்டல் பண்ணாரு. மாற்றம், முன்னேற்றம்

==============

13 மக்களின் எந்த குறையும், வலியும் தெரியாதவர் ஜெ.: கனிமொழி # ஹெலிகாப்டர்ல போகும்போது எப்படிங்க மக்கள் குறை தெரியும்?


=================

14 அச்சரப்பாக்கம் பஜாரில் ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலினுக்கு பழம், கொடுத்த வியாபாரிகள் # அப்பாவுக்கு பார்சல் கட்டிக்கொண்டுபோனா சந்தோஷப்படுவாரு.பழம் கனிந்து விட்டது

=============

15 தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம்: கலைஞர் # கூட்டணிக்கு மறுத்த கேப்டனை மட்டும் லைட்டா பழி வாங்குவோம்னு மைண்ட் வாய்ஸ் கேட்குது

=================

16 எந்த கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள் இல்லை: இலவசங்களை ஒழித்ததே பாமக சாதனை தானே!-ராம்தாஸ் # இலை வசம் ஏகப்பட்ட இலவசம் இருக்கும் என பட்சி சொல்லுது


=================


17 பணம் கொடுக்க வரும் எம்.எல்.ஏ., அமைச்சர்களை அடித்து விரட்டுங்கள்: பிரேமலதா ஆவேச பேச்சு # என்னம்மா சொல்றீங்க? அவங்க தான் பணத்தால அடிக்கறாங்க இல்ல?

===============

18 என் ஆட்சியில் தான் மக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர்: ஜெ # இந்த என் ஆட்சி என் ஆணைப்படி-ன்னு சொல்றீங்களே, இதை நினைச்சுதான் அச்சமா இருக்குங்க

============


19 நான் இருக்கும் போது கல்வீசி பாருங்கள்: நாங்கள் யார் என்று காட்டி இருப்போம்-விஜயகாந்த் ஆவேசம் # கம்முனு இருங்க,அவங்க தான் போய்ட்டாங்க இல்ல?வெத்தலை பாக்கு வெச்சு விரோதியை அழைக்காதீங்க

================

20 1 .5 கோடிமக்களுக்குவிலையில்லா சமையல்எரிவாயுஇணைப்பு: மே1-ம்தேதி- மோடி # தேர்தல் கமிசன் இதுக்கு ஒத்துக்காதே?

=================

0 comments: