Monday, June 20, 2016

உங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்களே?

தமிழர்களை காப்பாற்ற நம்மை விட்டால்  வேறு கதியில்லை.-கலைஞர் # உங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்களே?

====================


எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் 1000 ஆண்டுகள் ஆனாலும், தமிழ்ச் சமூகத்தை மீட்க முடியாது # அப்போ 200 தேர்தல்லயும் நமக்கு தோல்வி தானா?

==================


3  தி.மு.க.,வில் இரண்டு முதல்வர் வேட்பாளர்கள். ஒருவர், கருணாநிதி; இன்னொருவர், ஸ்டாலின்-நாஞ்சில் சம்பத் # அதிமுகவிலும் 2 பேர். ஜெ. ஜெ ஜெயிலுக்கு போய்ட்டா  OPS


=====================


4  விஜயகாந்த் தான் தருமனாம். தருமன் தண்ணி அடித்ததாக, எந்த மகாபாரதக் கதைகளிலும் இல்லை.-நாஞ்சில் சம்பத்  # தருமன் யாரையும் கை நீட்டி அடித்தது கூடத்தான் இல்லை


===================


5  \DMK,ADMK இருநூறு இடங்களில் பணத்தை பதுக்கிவைத்துள்ளது-வைகோ- # தேர்தல் 234 தொகுதில தானே மீதி 34 தொகுதியை மறந்துட்டாங்களா?


======================


6 திமுக.தரப்பு மது ஆலைகள் மூடாதது ஏன்? -ஜெ # தமிழக முதல்வராக இருந்தும் அந்த மது ஆலைகளை மூடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்காதது ஏன்?==================


7  முதலமைச்சராவதற்கு திமுக -ம.ந.கூட்டணியில் யாருக்கும் தகுதியில்லை : சரத்குமார் # அப்போ பாமக, பாஜக வில் சி எம் ஆக தகுதி இருக்குன்றீங்களா?=========================8

கோவில்பட்டியில் நின்றிருந்தால் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பேன்: வைகோ # அதான் நிக்கலையே? 2 1/2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சிருப்பேன்னு  கூட சொல்லிக்கலாம்


======================


9  

முழு மூச்சோடு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுகவினருக்கு  ஜெ வேண்டுகோள் # அப்போதான்  நீங்க நிம்மதிப்பெருமூச்சு விடமுடியுமா?
=========================


10 

குஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு -செய்தி # இதனால காங்க்:கிரேஸ்” குறைஞ்சிடாது=======================

11   1998ல், ராமதாஸ் 'என் பெயரில் பட்டாவும் இல்லை, சிட்டாவும் இல்லை' என்றார். ஆனால், இன்று , ஏராளமான சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன.-பு.தா.இளங்கோவன்: #18 வருசம், மாற்றம், முன்னேற்றம்


=======================


12 அ.தி.மு.க., ஆட்சியில், கிரானைட் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.-ஜெ # டிராஃபிக் ராமசாமி வழக்கு போட்ட்டதால் , சகாயம் ஐஏஎஸ் நாணயத்தால்


========================


13   70% பேர் அன்புமணிக்கு ஆதரவாக ஓட்டு போட தயாராக உள்ளனர்- ராம்தாஸ் # 8% வாக்கு வங்கி வெச்சிருக்கும் விஜய்காந்த்தையே அந்த தாங்கு தாங்கின கலைஞர் 70% -னா  வீடு தேடி வந்திருப்பாரே?


=====================

14  தமிழகத்தில் லஞ்சம் வாங்குவதை குடிசை தொழிலாக ஆக்கியவர் கருணாநிதி-முத்துலிங்கம் # சிறந்த தொழில் முனைவோர் விருது வேற கொடுத்தாங்களாம் அவருக்கு


=====================


15  ஊழலில் திளைத்தவர்கள், இன்றைக்கு ஊழலை ஒழிப்போம் என்று அறிக்கை வெளியிடுவது, வேடிக்கை-தமிழிசை # வேடிக்கை என் வாடிக்கை என்பார்களோ?


========================


16  தமிழகத்தில், 100% கட்சிகள் மதுவுக்கு எதிரான முடிவை எடுத்திருக்கின்றன. அதுவே எங்கள் கட்சிக்கு கிடைத்த முழு வெற்றி-அன்புமணி # ஆனா நம்ம வாக்கு வங்கி 4% ல இருந்து 1 ஸ்டெப்பாவது முன்னேறுனா தேவலை==================

17  :1998ல், ராமதாஸ் 'என் பெயரில் பட்டாவும் இல்லை, சிட்டாவும் இல்லை' என்றார். ஆனால், இன்று , ஏராளமான சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன.-பு.தா.இளங்கோவன்: # சிபிஐ ல அகப்”பட்டா” பறந்துடுவார் வெளி நாட்டுக்கு “சிட்டா”

====================

18  தர்மத்தின் வழி நடப்பது அரசியல் என்பது மாறி,  தனிநபர் துதிதான் அரசியல் என்ற மலிவான நிலைமை -தருண் விஜய் # அதிமுக வில் தனி நபர் துதி, திமுகவில் இரு நபர் துதி=====================


19  நாக்கை துருத்துவது விஜயகாந்த் 'ஸ்டைல்': மார்க்சிஸ்ட் 'ஜி ஆர் #  அது ஸ்டைலோ , மேனரிசமோ மக்களை செய்யாது மெஸ்மரிசம்.மைனஸ் தான்


==================


20 ம.ந.கூ.,க்கு 10 தொகுதிகளில் மட்டுமே 'டிபாசிட்' கிடைக்கும்: அன்புமணி  # அவங்களை விடுங்க. நமக்கு மொத்தமே 5 டூ 8 சீட் தான் கிடைக்கும் போல


====================

0 comments: