Wednesday, June 15, 2016

“நான் ஒரு நாய் வளர்த்தேன்.. அது செத்துப் போச்”

நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் # எங்க கண்ணுக்கு 2 பேர் தான் தெரியறாங்க .பல.வருசங்களா மாத்தி மாத்தி கொள்ளை அடிச்சவங்க

============

2 மே19ம் தேதி முதல்வராக பதவியேற்பேன்: விஜயகாந்த் #20 ம் தேதி அன்புமணி ஏற்பாராம்.ராம்தாஸ் சொன்னாரு.21 கலைஞர்.22,ஜெ?


============

3 பட்டுவாடா செய்ய வேண்டிய பணத்தை அதிமுகவினர் ஏற்கனவே சேர்த்துவிட்டனர்-பொன்.ராதா # ஈரோட்ல இருந்து பேசறேன்.இங்கே இன்னும் டீ வர்ல


============

4 கூட்டணி கட்சியினர் போட்ட வாய்ப்பூட்டு.. அடக்க ஒடுக்கமாக மாறிய ஆக்ரோஷ வைகோ கழுத்தில் ஏறும் வரை பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கும்


==============

5 இந்தியாவிலேயே கரூரில் தான் அதிக பணம் பறிமுதல் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது தேர்தல்ஆணையம் - செய்தி # கண்டுபிடிச்சது கரூர் அளவு.


==============


6 ஜெ சாதனை படைத்துள்ளார்; குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: சோ மைன்ட் வாய்ஸ் ="சோ"தனை மேல் சோதனை போதுமடா சாமி

============

7 வாக்காளர்களுக்கு அதிமுக வினர் பணம் கொடுத்தால் தகவல் கொடுங்கள்-ஸ்டாலின் # அஸ்குபுஸ்கு
சொன்னா அதையும் வந்து பிடுங்கிக்குவீங்க?


===========

8 கொட நாடு எஸ்டேட்டை ஜெ மக்களுக்கு எழுதி வைக்கத்தயாரா? - விஜய்காந்த் # நீங்கள் விடாக்கண்டர், அவர் கொடாக்கண்டர்==================


9 சாதி மோதலை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டியில் நான் போட்டியில் இருந்து இருந்து விலகுகிறேன்.-வை.கோ # அப்போ  எல்லாத்தொகுதிலயும் இப்டி மிரட்டியே ம ந கூ வை வாபஸ் வாங்க வெச்சுட்டா?


==================

10 இது 8-வது முறை: கும்பகோணம் அதிமுக வேட்பாளர் மாற்றம் # ரயில்வே ஸ்டேஷன்ல  ரயில் வரும் பிளாட்ஃபார்ம் நெம்பர் கூட இப்படி மாறுனதில்லை


==========================


11  

தேர்தல் செயல்திட்டத்தை 2 ஆண்டுகளில் நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன்: அன்புமணி # சார், முதல்ல பந்தில உக்காருங்க, அப்புறமா விருந்து பற்றி பேசுவோம்===================

12  மதுவிலக்கு குறித்து பொது விவாதத்துக்கு ஜெ தயாரா? #ஸ்டாலின்  #2 பேரும் மாத்தி  மாத்தி திட்டிக்கப்போறீங்க, அது பொதுவிவாதமா?


===================


13  

தலைவர்களின் வாகனங்களையும் சோதனையிட வேண்டும்: தேர்தல் செலவின பார்வையாளர் அறிவுறுத்தல் # திருடன் என்னைக்கும் மடில திருட்டுப்பொருளை கட்டிக்கிட்டு அலைய மாட்டான்=================
14   

ரூ. 120 கோடியே 41 லட்சம் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் ஜெ தகவல் # நானும் இனிமே மாசம் ஒரு ரூபா மட்டும் சம்பளம் போதும்னு சொல்லப்போறேன்=================


15

“நான் ஒரு நாய் வளர்த்தேன்.. அது செத்துப் போச்” விஜயகாந்த் பிரச்சாரம்! # எல்லா பிஸ்கெட் பாக்கெட்சையும் நீங்களே வெச்சுக்கிட்டீங்களாம்


=================


16

பாஜகவில் ஐக்கியமானார் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் # இனி பாஜக விடம் பவர் இ ல்லைனு யாரும் சொல்லிட முடியாது


===============

17 தி.மு.க.தேர்தல் அறிக்கை திருட்டு கதாநாயகன்: அன்புமணி # ஹீரோ திருடனா வந்த திருட்டுப்பயலே, திருடாதிருடா எல்லாம் ஹிட் ஆனதால அப்டி முடிவாம்

===============

18 பா.ஜ.க.வில் இணைந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன் # பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் சூப்பர் ஸ்டாரை வர வைக்க முடியாததால் பவர் ஸ்டார்?

========================

19 பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது - இளங்கோவன் # அதுக்குத்தான் ஃபிரிட்ஜ், ஏசி-ன்னு ஜில்லுன்னு தர்றாங்களாம்


==============


20 பணம்வாங்கி ஓட்டுபோடக்கூடாது என்று தாய்–தந்தையிடம், இளைஞர்கள் வலியுறுத்த வேண்டும்:வைகோ # அப்டி நடந்திருந்தா வரதட்சணைப்பிரச்னையே வந்திருக்காதே

=================

0 comments: