Sunday, June 26, 2016

AROUND THE WORLD IN 730 DAYS

234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன் - ஜெ # என் ஆட்சியில் என் ஆணைப்படி விட்டுட்டீங்க.


=============


2 திராவிட கட்சிகளுக்கு மாற்று கிடையாது

- கருணாநிதி # சிறு திருத்தம்


திராவிட கட்சிகள் போல் ஏமாற்று கிடையாது் மற்ற கட்சிகள்


==============


3 நீதி,நேர்மை,தன்மானம் உள்ளவர்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதற்காக திமுகவுக்கு ஆதரவு-வீரமணி. # கண்.டாக்டரைப்பார்க்கவும்.


=============

4 கலைஞா் காந்தி போல வாழ்கிறார் -கனிமொழி # அதனால்தான் கூடாநட்பு என சொன்னபின்பும் சோனியாகாந்தி ,ராகுல் காந்தி கூட கூட்டு?

===============


5 திமுக - காங்கிரஸ் கூட்டணி கும்கி யானை போல் பலமானது.

--இளங்கோவன். # ஆட்சியில் இருந்தாலும் 1000 பொன்,இல்லைன்னாலும் 1000 பொன்

========================

6 மது குடிக்கும் 46% பேரின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?- இந்திய கம்யூ. தா.பாண்டியன் # 23% அதிமுக , 23 % திமுக


================


7 பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் அழகியிடம் ஏமாந்த தமிழக தொழிலதிபர்! # அப்டியா?மிக்க மகிழ்ச்சி-னு கபாலி பாணில சொல்லனுமா?


===========


8 நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா அப்படி என்ன செய்துவிட்டார்?: ஸ்ரீ ஸ்ரீ # சுற்றுப்புற சூழலுக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தலை.இது 1 போதாதா?


============

9 சி.எம்.' பதவிக்காக கருணாநிதி எதையும் செய்வார்: நடிகை விந்தியா # மக்களுக்கு நல்லது செய்வார் னு நம்பி ஏமாந்துடாதீங்கனு சொல்றீங்க?ம்ம்


==============

10 நான் எங்க போனாலும் என்னை ஸ்டாலின் "பாலோ" பண்ணுகிறார்.- பிரேமலதா # உங்க பாலோயர்ஸ் லிஸ்ட் பார்க்கவா இருக்கும்.பிளாக் ஹிம்


================

11 வைகோ பச்சை, மு.க மஞ்சள்துண்டுபோடுவதற்கு காரணம் தெரியவில்லை-தமிழிசை # குடும்ப ஜோசியர் சொல்படி நடப்பதே பகுத்தறிவு என்பது இன்னுமா தெரியவில்லை?


============


12 முதல்வராவது எனது நோக்கமல்ல - அன்புமணி

# அப்போ உங்க நோக்கத்தில் ,லட்சியத்தில் நீங்களே தெளிவில்லை?

===========


13 தேடித்தேடிப் பார்க்கிறேன்,3வது அணியைக் காணவில்லை-கலைஞர

# நமக்கு ஆப்பு 3 வது அணி தான்.ஆப்பு எப்பவும் கண்ணுக்குத்தெரியாது
============


14 அன்னை தெரசாபோல தொண்டுள்ளத்தோடு வாழ்கிறார் கனிமொழி - ஸ்டாலின் # வாழும் அன்னையே! திமுக வின் தென்னையேனு கட் அவுட் பேனர்.வெச்சுடலாமா?


=============

15 200 இடங்களில் வெற்றி:இளங்கோவன் நம்பிக்கை # டெபாசிட் கிடைப்பதில் வெற்றி?


====================


16 திமுக மக்களுடன் கூட்டணி வைத்துவிட்டது!
-ஸ்டாலின்"# அதாவது கலைஞரின் மகன் மகள் மனைவி மக்களுடன் ஒற்றுமையாய் இப்போ சேர்ந்தாச்சு என பொருள் கொள்க


=============


17 இலவசங்களை கொடுத்து விலைவாசியை ஏற்றிவிட்டதுADMK-ஸ்டாலின் # தலைவா.விதை நாம போட்டது.கலைஞர் போர்ட்டபிள் இலவச டிவி.எம் ஏ பிலாசபி கேட்குதுங்க்ளா?


===============


18 2 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் மோடி THE WORLD IN 730 DAYS


=============


19 அதிமுகவிற்கு
மரண அடிவிழும்
-ஈவிகேஎஸ்
# நட்டாற்றில் விழுந்த நீச்சல் தெரியாதவன் பரிசலில் பாதுகாப்பா இருப்பவன் மூழ்கிடுவான்னு சாபம் விட்டானாம்

=========

20 தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு 210 இடங்களுக்கு மேல் கிடைக்கும் ஈ.வி.கே.எஸ். # வெற்றி கிடைக்குமா?தோல்வி கிடைக்குமா?னு தெளிவா சொல்லுங்க


============

0 comments: