Monday, June 20, 2016

கூட்டணி ல ஒரு ஃபயரே இல்லையே?

தமிழீழத்தை மீட்டெடுக்கவே நான் தமிழ்நாட்டு அரசியலில் கால் பதித்தேன் - சீமான் # சாரி, ராங்க் லொக்கேஷன் செலக்சன் , அதுக்கு நீங்க இலங்கை போகனும் சென்றாயன்


=================2 தேர்தல்அறிக்கையில் இலவசங்களை கொடுத்து ADMKமீண்டும் ஏமாற்ற பார்க்கிறது -கனிமொழி # நாம மட்டும் அன்னைக்கு இலவசTV கொடுத்தோமே அது மட்டும் சரியா?============3 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்தங்கிய தமிழகம்: ஸ்டாலின் # நாம ஆட்சிக்கு வந்துட்டா  50 வருசத்துல செய்ய வேண்டிய ஊழலை அஞ்சே வருசத்தில் நல்லா வெச்சு செஞ்சுடுவோம்


===================

4  

தேமுதிகவுக்கு துரோகம் இழைத்தவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: பிரேமலதா # சந்திரகுமாருக்கு  தேர்தலில் சங்கு ஊதுங்கள்னு சுத்தி வளைச்சு சொல்றாரு


===============


திமுக ஊழலின் ஊற்றுக்கண்; அதிமுக உச்சக்கட்டம்: ராமதாஸ் # ஆனா நாம அந்த 2 பேரோட முன்னாள் கூட்டாளி பாட்டாளி================

6  பிரசார கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் முதுகில் அடித்த பொன்.ராதா # முதுகில் அடிச்ட்டார்னு தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி முதுகில் குத்திடப்போறாரு


============

7 ஆந்திர போக்குவரத்து துறை அதிகாரியிடம் சிக்கிய ரூ.800 கோடி! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி # போக்குவரத்து என்றாலே பண”வரத்து” இருக்கத்தானே செய்யும்

===========

8 தமிழகத்தை இருண்டநிலைக்கு தள்ளிய திமுக, அதிமுக- பொன்.ராதா # அதெப்பிடி? சூரியன் வந்தா வெளிச்சம் தானே இருக்கும்?னு கேட்பாரே?கலைஞர்

=============

9 திமுக, அதிமுகவுக்கு பண பலம், எங்களுக்கு மக்கள் பலம்: ஜி.கே. வாசன் # பணபலம் மக்கள் பலத்தை பலவீனம் ஆக்காமல் இருந்தால் சரி

=============

10

ஜெ.வுக்கு மீண்டும் வாக்களித்தால் தமிழகம் கற்காலமாகிவிடும்..- ஸ்டாலின் #யாருக்கு வாக்களித்தால் பொற்காலம் என மக்களுக்கு த்தெரியும்


=================

11 கூட்டணி ஆட்சி வராது... திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - கருணாநிதி # அப்டி கூட்டணி ஆட்சி வந்தா பங்கு தரனும்.அதுக்கு மனசு வராது

============


12 கருணாநிதிக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றுவார்... ஜெ.# ஆதாயம் இருந்தால்தான் அரசியல்வாதிகள் தாயம் போட்டு துவங்குவாங்க

=============

13 தமிழகத்தின் எந்த முதல்வரும் விவசாயிகளுக்காக போராடியது இல்லை: நிர்மலா சீதாராமன் #ஓஹோ! அப்போ விவசாயிக்காக போராடினா செண்ட்டிமெண்ட்டா சிஎம் ஆக முடியாதுங்கறீங்க?

==========

14

டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி: விந்தியா #  குதிரை வண்டிக்குக்கூடத்தான் டயர் இல்லை, அது போக வேண்டிய இடத்துக்குபோறதில்லையா?


=================


15 

திருடுவதற்காக திட்டம் போட்ட திமுக தற்போது திட்டத்தையே திருட ஆரம்பித்துவிட்டது: -விந்தியா # திருடாமல் ஒரு நாளும் இருக்க  வேண்டாம் அப்டினு ஒரு பாலிசி வெச்சிருப்பாங்களோ?


====================


16  

திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என்பது வெறும் பசப்புரை: கருணாநிதி # ஆமா தலைவரே! 63 டூ 93 தான் அதிக வாய்ப்புன்னு ஜனங்க பேசிக்கறாங்க=================

17 

திமுகவினர் மது ஆலைகள் வைத்திருப்பதாகக் கூறுவது கற்பனையே; இருந்தால் மூடிவிடுவோம்: கருணாநிதி  # அதாவது வெளியே சொல்லாமல் வாய் மூடி இருந்து விடுவோம்?===============
18  

மற்ற கட்சிகளுக்குத்தான் இது தேர்தல். அதிமுகவுக்கு இது 'ரெனியுவல்' # ஆனா புதுப்பிக்கலாமா? வேணாமா?ன்னு மக்கள் தான் தீர்மானிப்பாங்க, அடக்கி வாசிக்கவும்================

19  

வெற்றியோடு சந்திக்கிறேன்- பிரசாரம் விடுபட்ட நகர் மக்களுக்கு கருணாநிதி உறுதி # திருவாரூரில் பெறப்போகும் வெற்றியைச்சொல்றாரு போல===============

20 டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி: விந்தியா # ஆனா மற்ற கூட்டணி ல ஒரு ஃபயரே இல்லையே?


==================

0 comments: