Thursday, June 16, 2016

வீடியோ கேசட் வாடகைக்கு விட்டே 1000 கோடி சம்பாதிச்சாரா?


 சு.சாமி,  தேர்தலில், 2-3 இடங்களில் தான், பா.ஜ., வெற்றி பெறும் எனக் கூறியது, அவரது சொந்தக் கருத்து.-பொன் ராதா # பக்கத்தில் ஒரு 4 சேர்த்து 234 லிலும் வெற்றி பெறும் என சொல்வது உங்கள் கருத்தா?


===============

2  சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. -நிதின் கட்கரி # எதுக்கு அரைகுறை வேலை? முழுமையா குறைக்க/விபத்தே நிகழாம இருக்க நடவடிக்கை எடுங்க

===================

3   அமைச்சர்களை அடிமைகள் போல் நடத்துவது போல, மக்களும் அடிமையைப் போல இருக்க வேண்டும் என நினைக்கிறார்  ஜெ -குஷ்பூ # அதான் அன்னைக்கே அடிமைப்பெண் நாயகியா வந்தாரா?


===============

4  திமுக வெற்றிக்கு பாடுபடும் நிர்வாகிகளுக்கு 5 சவரன் தங்க நாணயம் பரிசு: ஆ.ராசா # ரொம்ப நாணயமானவர், தங்கமானவர்னு பேர் எடுக்க தங்க நாணயம் பரிசு?


==================

5 மதுவை மறப்போம்; மதுவை ஒழிப்போம் என, தி.மு.க., இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்.-கலைஞர் # நடுத்தர வயசுக்காரர்கள், முதியவர்கள் குடிச்சா பரவாயில்லயா தலைவரே?==================

6  கருணாநிதிக்கு, ஜெ எதிரி. ஜெ-க்கு, கருணாநிதி எதிரி; 2 பேருக்கும் நான் தான் எதிரி.-விஜய்காந்த் # உங்களுக்கு அன்புமணி எதிரி? முன் கோபம் எதிரி

======================

7  திமுகவை யாராவது அழிக்க நினைத்தால் சும்மாவிடமாட்டேன்: கருணாநிதி எச்சரிக்கை # அழகிரியைத்தான் சொல்றாரு, யாரும் ஜெர்க் ஆகவேணாம், இது குடும்பப்பிரச்னை


====================


8 தொண்டை சரியில்லை.... ஆனால் தொண்டை நிறுத்தி விட மாட்டேன் -கலைஞர் # கட்சில யாராவது சரி இல்லைன்னாக்கூட அவரை நிறுத்தி விட மாட்டீங்க? உதா - ஆ .ராசா


==================


9 அரசுப் பள்ளியில் சேர்க்காவிட்டால், ரேஷன் கார்டு பறிமுதல் - அன்புமணி # அய்யய்யோ, அப்போ உங்க ரேஷன் கார்டை பிடுங்கிடுவாங்களே?

===============

10

குறைகளே இல்லை. எதற்காக மக்களை அம்மா சந்திக்கனும்?-நா.சம்பத் # அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் குறைகள் களையப்படும்னு ஜெ பேசுனது அப்போ பொய்யா

====================


11  6 லட்சம் பெண்களுக்கு மாங்கல்யப்பிச்சை - நாஞ்சில் சம்பத் # கோடிக்கணக்கான தமிழர்களிடம் வாக்குப்பிச்சை கேட்கறீங்களே அது?


===================

12 மதுவிலக்கு தான் முதல் கையெழுத்து-ஸ்டாலின் # அது 2 வது கையெழுத்தாத்தானே வரும்? முதல்வர் பதவி ஏற்பதுதானே முதல் கையெழுத்து?


==================


13

தமிழகத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பதுக்கப்பட்டுள்ளது.-பொன் ராதா # கிடைச்ச பணத்தை மட்டும் பறிமுதல் பண்ணா போதாது. கட்சியை தடை செய்யனும்

==================


14

டாஸ்மாக் வசூல் ரூ. 40 லட்சம் கொள்ளை முயற்சி... பாதுகாவலர் கொடூரமாக வெட்டிக் கொலை # தமிழகம் அமைதிப்பூங்காவா இருக்குனு நேத்துத்தான் சொன்னாரு ஜெ


================

15 ஜெ.வை இழிவாக விமர்சிப்பதா? EVKS மீது வைகோ பாய்ச்சல் # அங்கே அடிச்சா இங்க வலிக்குது. ரமணா ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகுது


=================


16 வணக்கம் உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன்”... வாட்ஸ் அப்பில் வாக்கு சேகரிக்கும் ஜெ. # வாட்ஸ் அப்பில் ஓட்ஸ் பிக்கப்?

===============

17 சசிகலா ஜெ.வின் பினாமி அல்ல- சுப்ரீம்கோர்ட்டில் சசி வக்கீல் வாதம் # வீடியோ கேசட் வாடகைக்கு விட்டே 1000 கோடி சம்பாதிச்சாரா?

==============

18 ஸ்டாலின், நாவை அடக்க வேண்டும். இல்லையேல், அடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்- நாஞ்சில் சம்பத் # இது அடக்குமுறை ஆட்சின்னு சொல்லாம சொல்றீங்க?


==================

19  

ஸ்டாலின் என்று ஒருத்தர் இருக்கிறார்; அவருக்கு அவரே எதிரி. - விஜயகாந்த் # இல்லைங்களே, அண்ணன் அழகிரி தான் அவரோட முதல் எதிரினு சொல்றாங்க

====================

20 எளிதில் உணர்ச்சிவசப்படுவது வைகோவின் மிக மோசமான பலவீனம் - தமிழருவி மணியன் #-  மேடை ஏறிட்டா வார்த்தை அப்படியே அருவி மாதிரி கொட்டுதாம்


=====================


0 comments: