Friday, June 17, 2016

கை மாற்றி விட்டதில் “கை”மேல் பலன் 250 கோடி


=================

அம்மா மீதுள்ள மரியாதை காரணமாக நல்ல வேட்பாளர் இருந்தும் ஆர்.கே நகரில் நா.ம.க போட்டியிடவில்லை" - கார்த்திக் # இதுக்கு சரத்குமார் மாதிரி  கட்சில சேர்ந்துடலாம், எதுக்கு தனிக்கட்சி?


=================

தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுகவுக்கு தகுதியில்லை: ஜி.கே.வாசன் # நாம முதன் முதலா கூட்டணிப்பேச்சுவார்த்தைக்குப்போனதே இங்கே தானே?================

4  லாபம் பார்க்கவே  திமுக வின்  சேது சமுத்திரத் திட்டம்: இல.கணேசன் # நட்டம் பார்க்க யாராவது கட்சி /தொழில் நடத்துவாங்களா?

================

5  

மதுவை கொண்டு வந்ததற்கு முதலில் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி # அடுத்ததா அதைக்குடிச்சவங்க எல்லாம் மன்னிப்பு கேட்கனுமா?


===================


6  

உதயசூரியன் உதித்தால்தான் நல்லாட்சி மலரும்: கருணாநிதி # அம்மாவின் ஆணைப்படி, அம்மாவின் ஆட்சியில் தினமும் சூரியன் உதிச்சிட்டுதானே இருக்கு?===================


தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுக, அதிமுகவே காரணம்- பிரேமலதா # ஆமாங்க, கோடை வெய்யில் கூட திமுக, அதிமுக வின் சதி தான்===============

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்: ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் பெயர் இல்லை # நமீதா, விந்தியா, கருணாஸ் தானே சினி ஸ்டார் பேச்சாளர்?


================


அம்மா ஸ்டிக்கர் - அன்புமணி போஸ்டர்!" - கனிமொழி தாக்கு # நாமளா இருந்தா 2ஜி , 4 ஜி  டெக்னாலஜியை பயன்படுத்தி எதுனா மாடர்னா வெச்சு செஞ்சிருப்போம்


===========

10 அரசியல் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் - கருணாநிதி # அதைத்தான் நானும் விரும்புகிறேன் - ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்

=======================


11 ஜி.கே.வாசனின் பரப்புரைக் கூட்டத்தில் ரூபாய் நோட்டுகள் வீச்சு # தென்னமரத்தோப்புக்குள்ள குயிலே குயிலே ஒரு நோட்டுக்கட்டு விழுந்ததடி குயிலே குயிலே


=================

12  திமுக காரன் எவனும் மதுக்கடைகளை திறந்தது கிடையாது: கலைஞர் # தலைவரே, மரியாதையாப்பேசுங்க. நமக்கு நாம மரியாதை கொடுத்தாதான் மத்தவங்க நமக்கு கொடுப்பாங்க


==================

13 விஜயகாந்த் சொத்து மதிப்பு 19.37 கோடி:
பிரேமலதா-ரூ.17 கோடி # அந்த 500 கோடி, 1500 கோடி எல்லாம் கணக்கில் வராது இல்ல?


=============

14 விஜயகாந்த் சொத்து மதிப்பு 19.37 கோடி:
பிரேமலதா-ரூ.17 கோடி # 1.18 கோடி யை பிரேமலதாவுக்கு தந்துட்டா 2 பேரும் சரி சம சொத்து மதிப்பு


============


15 ரஜினி கூறியதை அப்படியே பேசி வாக்கு சேகரித்த ஜி.கே. வாசன் # விஜய்காந்த் கூட கூட்டு , ரஜினி காந்த் தோட பாட்டு , கிடைக்குமா மக்கள் ஓட்டு?


==================

16
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு: இத்தாலி நீதிமன்ற தீர்ப்பை காட்டி பாஜக குற்றச்சாட்டு! # வாயு வேக ஊழலா இருக்கே?

============

17 5 ஆண்டு தூங்கிய விஜயகாந்த்.. தேர்தல் வந்ததும் விழித்து விட்டார்- அன்புமணி # நம்ம வாக்கு சதம் 4%, அவருது 8 டூ 12%, நாம அவரை நக்கல் அடிக்கலாமா?

==============

18 கருணாநிதியின் பரப்புரைக் கூட்டத்தில் பெண்கள் அவதி: மயங்கி விழுந்ததால் பரபரப்பு # அப்பாடா! டேலி ஆகிடுச்சுன்னு ஆளும் கட்சி நினைக்குமோ?

==============

19 ரூ.3700 கோடி மதிப்பிலான, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தி  250 கோடி பெற்றார் - பாஜக குற்றச்சாட்டு # கை மாற்றி விட்டதில் “கை”மேல் பலன்

================

20   

 ஸ்டாலின் சொத்து மதிப்பு  4 கோடி - செய்தி # இவ்ளவ் தானா? இதை கேட்டா 4 பேர் 4 விதமா பேச மாட்டாங்களா?


=====================

0 comments: