Thursday, June 30, 2016

கேப்டன் அமெரிக்கா படம் ரொம்ப ஸ்லோவா போகுது ஏன்?

1  தலைவரே! எதுனா கெட்ட கனா கண்டீங்களா? ஏன் சோகமா இருக்கீங்க?

 நமக்கு 24 சீட் தான் கிடைக்கும்னு பட்சி சொல்லுது.சூர்யா -24, உதய சூர்யன்=24===============


2  மேடம், எதுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர் யூஸ் பண்றீங்க?\\

 எல்லாம் செண்ட்டிமெண்ட்ஸ் தான்,முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தனி விமானத்தை பயன்படுத்தியது ”ஹிட்”லர்தானாம்


==============


3
சார், உங்க படத்துல ரொமாண்டிக் சீன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்குமே? ஏன் டைவர்ஸ்?

ஷூட்டிங் ஸ்பாட்க்கு சம்சாரம் சொல்லாம வந்துடுச்சு

==========

4 டாக்டர்.ஃப்ரிட்ஜ்ல இருக்கற காய்கறிலாம் வாடிப் போற அளவு வெயில் அடிக்குது


பிரிட்ஜில் வைத்ததை சாப்பிட்டா உடல் ஆரோக்யமே வாடிப்போகுமே மிஸ்


==========


5 மேடம், மக்க|ளை சந்திக்காத  ஒரே முதல்வர்  நீங்க தான்னு பேசிக்கறாங்களே?

ஹெலிகாப்டர்ல போகும்போது கூட மக்களை கீழே எட்டிப்பார்த்துட்டுதான் இருக்கேன்


================


கேப்டன் அமெரிக்கா படம் ரொம்ப ஸ்லோவா போகுது

கேப்டனுக்கு இப்போ உடல் நிலை சரி இல்லை அல்லவா? அதனாலயா இருக்கும்


===============

7 டாக்டர். ரெட்டைச்சுழி தலைல இருந்தா 2 பொண்டாட்டி  அமையுமா?

 அடப்பாவி, எல்லாம் என் தலை எழுத்து/==============8  சார், நீங்க கண்டபடி எழுதற ஆளாமே?

 ஆமா, வாரா வாரம் வெள்ளிக்கிழமை கண்ட சினிமாவை கண்டபடி விமர்சனம் எழுதுபவன்


=============


கேவளம் என்று எழுதுகிறார்கள். கேவலமாய் இருக்கிறது!


கேரளாவில் உள்ள கோவளம் பீச்சில் கால் வைத்ததில்லை என்பதன் சுருக் தான் கேவளம்


================

10 தலைவரே! கள்ள ஓட்டுப்போட கட்சி ஆளுங்களை எப்டி ரெடி பண்றீங்க?

கள்ள ஓட்டுப்போட்டால் கள்ளக்காதலி செட் ஆகும் என வதந்தி கிளப்பி தான்


==============

11 தலைவரே! ஏன் சந்தோஷமா இருக்கீங்க? 

தேர்தல் நேரம், விஜய்காந்த் ஃபாரீன் போய்ட்டாராமே?

அய்யோ, அது கேப்டன் அமெரிக்கா ஹாலிவுட் படம் தலைவரே!

==============


12 மேடம், உங்க தொகுதி ல பிரச்சாரம் செய்த போது கரண்ட் கட்டாமே?

ஆமா, இது எதிர்க்கட்சிகளின் சதி. நான் சொல்வதை நம்புவது உங்கள் தலைவிதி,தேர்தலுக்குப்பின் மக்களுக்கு அதோகதி


==================

13  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரவணா ஸ்டோர் விளம்பரத்தை தடை செய்து மக்களைக்காப்பாற்றுவோம்================14   டைரி எழுதலாம்னு இருக்கேன் பிரமாதம் மிஸ், எங்கே எழுதுங்க பார்ப்போம்? டெய்ரி மில்க் சாக்லெட், வெண்ணிலா டெய்ரி, ஸ்ட்ராபெர்ரி டெய்ரி
=================15  சார், நம்ம படம் பயங்கரமான கலெக்சன்\\


 ஓஹோ எவ்ளோவ்\\?

 அதான் பயங்கரம்னு சொன்னேனே? எண்ணிப்பார்க்கவே பயமா இருக்கு================


16  சார் படம் எப்டி?


 முதல் 5 ரீல் க்கு 3.5 /5 , அடுத்த 5 ரீல்க்கு 4/5 , கடைசி 5 ரீல் க்கு 5/5

 அடேங்கப்பா ஏகப்பட்ட  ரீலா இருக்கெ? 3ஐயும் கூட்டி 3 ஆலா வகுக்க மாட்டீங்க|ளா?


==================


17  

  வாக்காளர்களே! இலவசத்தை நம்பியோ , புது கட்சி ஆட்சி நம்பியோ ஏமாறாதீர் , உங்களுக்கு நன்கு பழக்கம் ஆன எங்களிடமே ஏமாறுவீர்!=================18  

யார் முதல்வர் என்ற குழப்பம் இல்லாத ஒரே கட்சி ந்ம்ம கட்சி தான், நான், எனக்குப்பின் என் மகன், மகள்,,பேரன் , பேத்தி என  ஏகப்பட்ட வாரிசுகள் இருப்பதால் பரம்பரை பரம்பரையாக எங்களை ஆதரிப்பீர்
==================


19     டியர்  உனக்கு பூ கட்டத்தெரியுமா?

 அய்யோ. இப்பவே எனக்கு கண்ணைக்கட்டுதே--------------


20 மாப்ளை, என் பொண்ணு மணக்க மணக்க சமையல் செய்வா.

எப்டி மாமா? தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சுட்டே கிச்சன் வருவாளா?

=================

0 comments: