Tuesday, June 14, 2016

நெடுஞ்சாண் கிடை வீழ்ந்த மாறன்

தி.மு.க.–அ.தி.மு.க. கட்சிகளை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்: விஜயகாந்த் # அப்போ விஜய் மல்லய்யாக்கு தந்த மாதிரி லோன் கொடுப்போமா?

=============

2 விஜயகாந்த் முதல்வராகவும், பிரேமலதா பிரதமராகவும் ஆக விரும்புகிறார்கள் -நடிகர் செந்தில் # நல்ல வேளை சுதீஷ் ஜனாதிபதி ஆக ஆசைப்படலை

================

3 வாக்குறுதிகளை மறந்தவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்: - கருணாநிதி # தலைவா! ஒரு ஏக்கர் நிலம் இலவசம் வாக்குறுதியை மறந்தது நாம தானே? பாடம் நமக்கா?


================

4 ஜெ கூட்டத்தில் 5 பேர் சாவு: வழக்கு தொடரப்படும்- அன்புமணி # கேஸ் நிக்காதுங்க, ஜெ தான் சாவுக்குக்காரணம்னு சட்டப்படி நிரூபிக்க முடியாது


=============5 சமூக வலைதளங்களில் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது: இல.கணேசன் # நெட் தமிழன் 50% பேர் வாக்குச்சாவடிக்கே வரமாட்டான்=============6 பா.ம.க. ஆட்சி அமைக்க அன்புமணியை 20–ந்தேதி கவர்னர் அழைப்பார்: ராமதாஸ் # எந்திரி அஞ்சலி எந்திரி விடிஞ்சிடுச்சு
============7 நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் # மனம் தளராதீங்க தலைவரே! எல்லா தொழில்லயும் போட்டி இருக்கத்தான் செய்யும்===============


8  நான சக்தியற்றவனாக இருக்கிறேன் எனக்கு சக்திகொடுங்கள்-கருணாநிதி # விட்டா பாபா ரஜினி போல் சக்தி கொடுன்னு அம்மன் கோவில் முன் பாட ஆரம்பிச்சுடுவார் போல


=================
9


திமுக அரசியல் கட்சியல்ல பாட்டாளி இயக்கம்-கலைஞர் # அப்போ டாக்டர் ராம்தாஸ் கட்சியை கலைச்சிடுவாரா?

=================


10 இந்த தேர்தலில் அ.தி.மு.க. ,வுக்கு மூன்றாவது இடம் கூட கிடைக்காது. -ஸ்டாலின் # இதை அரசியலே தெரியாத மூன்றாவது மனுசன் கூட ஒத்துக்க மாட்டான் தலைவரே!


===================


11 ஆட்சி இவர்களுக்கு மட்டும் தான் சொந்தமா? இவர்களுக்கு தான் பட்டா போட்டு வைத்திருக்கிறதா?-கலைஞர் # உங்க 2 பேருக்கு மட்டும் தான் மாற்றி மாற்றி பட்டா வா?ன்னு ஜனங்க யோசிக்கறாங்க


===================


12  : பணம் கொள்ளையடித்தவர்கள், ஓட்டு வாங்க உங்களை நோக்கி வருவார்கள் - கலைஞர்  # ஆமா தலைவரே! எல்லாம் நம்ம கட்சி ஆட்கள் தான்


======================

13 விஜயகாந்துக்கு, திடமாக நிற்கவே முடியவில்லை- -ஆர்த்தி  # மேடையில் எப்படியோ? தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் திடமா நிற்கறாரே?


======================

14  நாடு முழுவதும் கடும் வறட்சி: பிரதமர் நரேந்திர மோடி கவலை # இனிமேலாவது  ஃபாரீன் டூர் புரட்சியை குறைச்சுக்கிட்டு நம்ம நாட்டை சுற்றி வரவும்


=====================


15 ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் -  ராஜேஷ் லக்கானி  #  ஓட்டுக்கு பணம் தர்றது அதை விட கேவலமான விஷயம், அதையும் சொல்லுங்க


======================


16 கரூரில்  சிக்கியது யார் பணம்: ஜெ.,வுக்கு கருணாநிதி கேள்வி  # எல்லாம் மக்கள் பணம் தான், மக்களிடமே சேர்க்கறாங்களாம்


===================


17 தேர்தல் அறிக்கையில் இலவச பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர் அ.தி.மு.க., முடிவு  # இது மக்களை கூல் பண்ணும், எதிர்க்கட்சிகளை ஹீட் ஏற்றும்=====================

18 

ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல் # எதிர் எதிர்  துருவங்கள் இன்னைக்குதான் ஒரு விஷயத்துல ஒத்துமையா களம் இறங்கி இருக்காங்க


==================

19  

தனித் தமிழீழத்துக்கு ஆதரவு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு # நெடுஞ்சாண் கிடை வீழ்ந்த மாறன்னு நெட் தமிழர்கள் மீம்ஸ் போடப்போறாங்க மாம்ஸ்====================

20 

எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை -விஜயகாந்த் # அப்போ வை கோ வை சிஎம் வேட்பாளரா அறிவிக்கலாமே?==================

0 comments: