Thursday, June 02, 2016

கிஃப்டா தந்த கோஹினூர் வைரத்தை மீண்டும் பெற ஒரு குறுக்கு வழி

ஸ்டாலினால் அறிவாலயத்தைத்தான் பிடிக்க முடியும்... ஆட்சி கிடைக்காது: விஜயகாந்த் # உங்களுக்கும் கவிதாலயா வேணா கிடைக்கும்.கவர்மென்ட் கிடைக்காது

=============


2 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு- பொன்முடி, மனைவி விசாலாட்சி விடுதலை # வக்கீல் fees ஜட்ஜ் fees குடுத்தாச்சா?


============

3 திமுகவும் அதிமுகவும் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது- தமிழிசை # பிஜேபி மேல நம்பிக்கையே இன்னும் வர ஆரம்பிக்கலையே?


============

4 சட்டமன்ற தேர்தலில் வரும் மாற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசப்படும்- வைகோ# யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காம கவர்னர் ஆட்சி வந்திடுமோ?


============

5 ரேசன் கடைகளில் இலவசமாக வழங்குவது அம்மா அரிசியல்ல, மோடி அரிசி-பிரகாஷ் ஜவடேகர்# "அம்மா"டி ! நஹி.அம்"மோடி"போலோ

===================

6 அரசியலில் நான் கால் பதிக்காத தொகுதியே கிடையாது -விஜயகாந்த்# ரிஷிவந்தியம் விதிவிலக்கு?

============

7 கலர் கலராக சட்டை போடுவதால் தான் நான் கதாநாயகனைப் போல இருக்கிறேன்: ஸ்டாலின் - # அப்போ ராமராஜன் காட்டிய வழி ல தான் நீங்களும் போறீங்களா?

=============

8 மக்களின் விருப்பத்தை ஏற்றே பென்னாகரத்தில் போட்டியிடுகிறேன் : அன்புமணி..# எப்போ ஜாதிப்பற்று மறையுதோ அப்போ தான் வாக்கு வங்கி வரவு


============

9 எந்த பதவியும் எனக்கு வேண்டாம்..-ஸ்டாலின் #,இதைக்கேட்டா கலைஞர் உங்க கிட்டே இருக்கும் இளைஞர் அணித்தலைவர் பதவியையும் லபக்கிடுவாரே?்

============

10 திமுக வேட்பாளர் மைதீன்கானின் உருவ பொம்மையை தூக்கில் போட்ட திமுக தொண்டர்கள்!
# கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாவற்றையும் தூக்கி{ல் } உடைப்பில் போடு


============


11
ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும்.-் கனிமொழி # தவளை தன் வாயால் கெடும்.திருக்குவளை பரம்பரையும் அதே


========

12 யார் எப்படி நின்றாலும் தமிழ்நாட்டை பொறுத்த வரை லேடி தான்" - நடிகை விந்தியா # இந்தியான்னா மோடி தமிழ்நாடுன்னா லேடி னு சொல்றீங்களா?

==============

13
உளுந்தூர்பேட்டையில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக இடையே நான்குமுனைப் போட்டி # எல்லாக்கட்சிகளும் விழுந்து விழுந்து உளுந்தூர்ல பிரச்சாரம் பண்ணுவாங்களே

===============

14 உளுந்தூர் பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி# அப்போ வடை நமக்குத்தான். வி ஃபார் விஜய்காந்த், வி ஃபார் விக்டரி-னு சொல்வாங்களோ?

============

15 ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும்.-கனிமொழி # ஏன் இப்பவே மூடிட்டா தெய்வக்குத்தம் வந்துடுமா?

================

16 ஜெ வை எதிர்த்து திருமாவளவன் போட்டியிட்டால் ஆதரவு - தமிழருவி மணியன் # இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றி
உடம்பை ரணகளம் பண்ணிட்டாங்க.-திருமா===============

17 கோஹினூர் வைரத்தை கிப்ட்டா கொடுத்துட்டோம்.. திரும்ப பெற முடியாது: -மத்திய அரசு # அந்த வைரம் இருக்கும் இடம் ஆபத்துனு புரளி கிளப்புங்க, தந்துடுவாங்க=================

18  வழக்கத்தை விடக் குறைவான 'ஊதிய உயர்வு'.. குழப்பத்தில் மூழ்கிய 'இன்போசிஸ்' ஊழியர்கள்..! # வேலை கிடைப்பதும், கிடைத்ததை தக்க வைப்பதுமே பெரும்பாடு,கிடைச்ச வரை லாபம்னு இருங்க


=================


19 சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- EVKS இளங்கோவன் # ஸ்கூல் பையன் லீவ் போடற மாதிரி ஓடப்படாது. பேர்லயே வெற்றி இருக்கில்ல? இளங்கா"WON". என்ன பயம்?


=================

20 தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் - ஸ்டாலின் # கனிமொழி, காந்தி அழகிரி,தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் இவங்களுக்கு சீட்டா?


==============

0 comments: