Tuesday, June 21, 2016

UdtaPunjab -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)

சர்ச்சைக்குரிய [படம், சென்சார் ல ஏகப்பட்ட கட் கொடுத்து பின் முட்டி மோதி “ கவனிச்சு” அனுமதி வாங்கின படம்கற பில்டப்போட வந்திருக்கும் உட்தா பஞ்சாப் டைட்டிலுக்கு  பறக்கின்ற பஞ்சாப் அப்டினு அர்த்தம், மப்பில் பறக்கும் அப்டினும் வெச்சுக்கலாம்


வானம் கதை மாதிரி 3 ட்ராக்கில் பயணிக்கும் கதை 


ஹீரோ ஒரு பாப் ஸ்டார். கேவலமான பாட்டு பாடி எப்டியோ ஹிட் ஆன ஆளு.போதைப்பழக்கத்தால் அவர் சில பிரச்சனைகளை சந்திக்கறார்


இன்னொரு ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர்.அவரோட தம்பி போதைபப்ழக்கத்துக்கு அடிமை ஆகி ஹாஸ்பிடல் ல சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக்கவனிக்கும் டாக்டர் செம ஃபிகர். இதுவே தமிழ் சினிமாவா இருந்தா லேடி டாக்டருக்கும், பேஷண்ட்டுக்கும் காதல்னு கதை எழுதி இருப்பாங்க. ஆனா இது ஹிந்தி சினிமா. டாக்டருக்கும் , பேஷண்ட்டோட  அண்ணனுக்கும் லைட்டா காதல்.


போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆன மக்களை காப்பாத்தனும், போதை மருந்து கும்பலை வேரோடு அழிக்கனும்னு அசைன்மெண்ட் தருது டாக்டர். அதை போலீஸ் ஆஃபீசரான ஹீரோ  எப்டி நிறைவேற்றறார் என்பது கதை.


இன்னொரு டிராக்கில் இன்னொரு ஹீரோயின். அது கைக்கு  10 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதை மருந்து சிக்குது ( ஓப்பனா சொல்லப்போனா திருடுது- மம்தா குல்கர்னி கதை போல )அதை சேல்ஸ் பண்ண ட்ரை பண்ணும்போது அந்த கும்பல்ல 3 பேரு  அவளை மடக்கி  போதை ஊசி போட்டு ரேப்பிடறாங்க. அந்த கும்பல்  அவளை சினிமா தியேட்டரா யூஸ் பண்றாங்க, அதாவதி தினசரி 4 காட்சிகள் 3 ஆடியன்ஸ். அந்த ஹீரோயின் அவங்க கிட்டே இருந்து தப்பி மேலே முதல்ல சொன்ன  ராக் ஸ்டார் கிட்டே வருது.

 போலீஸ் ஆஃபீசர் - டாக்ட்ர்  ஜோடி , ராக் ஸ்டார் - ரேப்டு ஹீரோயின் இந்த 2 செட் லவ் ஜோடிங்க கதை தான் படம்


ஷாகித் கபூர்  ராக் ஸ்டாரா வர்றார். எடுபடலை. அவர் நடிப்பும் , கெட்ட்ப்பும்  சகிக்கலை

அவருக்கு ஜோடியாக வரும் ஆலியா பட் தான் படத்துக்கு முதுகெலும்பு . விருது பெறக்கூடிய சிறப்பான நடிப்பு. இவரது போர்சன் மட்டும் ஈரானிய படம் போல் அட்டகாசமான ஒரு குறுங்கவிதை  ( டேய், இதுக்கு முன்னால நீ  ஈரானியப்படம் பார்த்திருக்கியா? இல்லை, கவிதை படிச்சிருக்கியா? அதுவும் இல்லை. அப்புறம் எதை வெச்சு இந்த டயலாக்கை சொல்றே? எல்லாரும் சொல்றாங்க நானும் சொல்றேன்)


ஆலியாபட் போர்சனில்  ஒளிப்பதிவு , பின்னணி இசை , இயக்கம் , நடிப்பு என 4 பேருக்கும் செம போட்டி. ஜெயிப்பது நடிப்பு தான்.


போலீஸ் ஆஃபீசரா  தில்ஜித் சிங், நல்ல கம்பீரமான ரோல். ஆனா அவர் இன்னும் நல்லா பர்ஃபார்ம் பண்ணி இருக்கலாம். சோன் பப்டி மாதிரி ஃபிகர் அருகில் இருந்தும் அவர் ரொமாண்டிக்காக எதுவும் செய்யாதது பேரதிர்ச்சியை ஏற்படுத்துது


 கரீனா கபூர் டாக்டராக வர்றார். அங்கங்கே கொஞ்சம் செயற்கை தட்டுது. ஆனா லோ ஹிப் லோ கட்  எதுவும் காட்டாம டீசண்ட்டா டாக்டரா நடிச்சதே பெருசு.


ஒளிப்பதிவு , இசை , பின்னணி இசை , எடிட்டிங்   எல்லாம்  ஓக்கே ரகம்.

 வசனம் எழுதுனவர் யார்?னு தெரியல. இவரை கொண்டு போய் க்ன்னி இல்லா காட்டில் 1 வருசம் உக்கார வைக்கனும். ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள். இப்டி கேவலமா டயலாக் எழுதிட்டு சென்சாரை குறை சொல்றது. எப்டி ரிலீஸ் பண்ணுவாங்க  கட் குடுக்காம.?படத்தின் மாபெரும் மைனஸ்  வசனம்  

 நச் டயலாக்ஸ்


போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப்படம் எனும் போர்வையில் வரிக்கு வரி கெட்ட வார்த்தை வசனம். punjab


=============
2 போலீசோட பவரை பாத்தியா?

எஸ் சார்.தப்பு பண்றவன் மாட்டிக்கிட்டா அவன் கிட்டே லஞ்சம் கேட்டு பிச்சை எடுப்பீங்க

===========


முதல்ல மனிதன் ஆகு.பின் விஐபி ஆகலாம் b


=============


4 பிரபலம் என்பதன் பலம் என்ன?அவன்.என்ன தப்பு செஞ்சாலும் உடனே ஜாமீன் கிடைச்சிடும்.ஆனா நியாயத்துக்கு நீதி மட்டும் கிடைக்காது

==========

தேர்தல் ந்டக்கும் நேரம் தான் நாம் புரட்சி பண்ண.சரியான தருணம்.முழுமாநிலமும் தேர்தல் கமிசன் கட்டுப்பாட்டில்.அரசியல்வாதி பல் இல்லா பாம்பு#UP


===============

6 தனி மனிதன் செய்தா போராட்டம்
பொது மக்கள் செய்தா போர்


============

WHO r u?


tommy
DOG?
NO popular singer
MUJE kuththa maathra maalum hai


===============

ஒரு சிறந்த படைப்பாளி யின் பெஸ்ட் டைம் முடிஞ்சிட்டா மீண்டும் அவன் மீண்டு வருவது சிரமம்


==================

மத்தவங்களைக்காப்பாத்தனும்னு நினைக்கறவன் முதல்ல தன்னைக்காப்பாத்திக்கனும்.பின் பலப்படுத்திக்கனும்.பலவீனனுக்கு வெற்றி கிட்டாது


=================  

சபாஷ் டைரக்டர் 


1  ஆலியாபட்  போர்ஷனுக்கு கொடுத்த கலர் , பிஜிஎம் , நடிப்பு எல்லாம் டாப் டக்கர்.


2 போதை பழக்கத்துக்கு எதிரான படம்னு ஜனங்களை நம்ப வெச்ச மொள்ள மாரித்தனம்லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ஒரு பொண்ணு தன்னந்தனியா போதை மருந்து கும்பல் கிட்டே பேரம் பேச திருட்டு சரக்கோட அப்டி போய் மாட்டிக்குமா? சரிதா நாயரை விட  லூசா இருக்கும் போல 


2  வில்லன் க்ரூப் அந்த லூசுங்க 3 பேரும் அந்தப்பொண்ணை துரத்தி மடக்கி சித்ரவதை செஞ்சு கடைசியா போதை ஊசி போட்டு ரேப்பறாங்க. அந்த வெங்காயத்தை ஆரம்பத்துலயே செஞ்சிருக்கலாமில்ல? எதுக்கு வன்முறை?

3  வீட்டுக்குள்ளே அந்த ஆலியாப்ட்டை விட்டுட்டு கதவைப்பூட்டாம, கையைக்கட்டாம அம்போன்னு விட்டுட்டுப்போவாகளா?


4  போதை மருந்து ஊசியை ஆலியாபட்டு க்கு போட்ட அடுத்த விநாடி அது மயக்கம் ஆகுது. ஆனா  போலீஸ் ஆஃபீசருக்கு போட்டு அரை மணி நேரம் கழிச்சு லைட்டா தூங்கறாரு எப்டி?


5  ராக் ஸ்டார் கேரக்டர் படு மோசம். குழப்பமான படைப்பு. 


6  பெண்கள் தியேட்ட்டருல உக்காந்து படம் பார்க்கவே முடியாது. நல்ல வேளை குடும்பங்கள் கொண்டாடும் படம்னு விளம்பரம் பண்ணலை

சி.பி பஞ்ச் - UDTA PUNJAB - போதைப்பழக்கத்துக்கு எதிரான விருதுக்குரிய படம்..குடும்பப்பெண்கள் தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்கவும்.ரேட்டிங் =2.75 / 5


===============


Adoor smitha theatre 🎦 Pathanamthitta district Kerala (udta punjab-Hindi)

0 comments: