Tuesday, June 07, 2016

சொந்த “மண்ணுக்குள் வைரம்”

ஜெ–கருணாநிதி ஓய்வெடுக்கட்டும்: தமிழகத்தை இளைஞர்கள் இனி ஆளட்டும்- பிரேமலதா # நம்ம கட்சில உள்ள ஒரே இளைஞர் உங்க தம்பி சுதீஷ் தான்,அப்போ அவர் தான் சிஎம்மா?

===============

2 நோட்டாவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துவிட்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள் - எச்.ராஜா # நோட்டுக்குப்பாதி , நோட்டாவுக்கு மீதி என வழக்கப்படுத்திக்கொள்ளாதே பாப்பா-ங்கறாரு

=================

3 அரசு டாக்டரை தாக்கிய குஜராத் பாஜக எம்.பிக்கு 3 வருட சிறை - செய்தி # அவரு மேல்முறையீட்டில் நான் அந்த டாக்டரைப்பார்த்ததே இல்லைனு சொல்லப்போறாரு


================4 மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது- ஜெ பெருமிதம் # அங்கங்கே அரிவாள் வெட்டு ஜாஸ்தி ஆக இருக்கு, அதைக்கவனிங்க


=============

5 தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது: -ஜெ # பார்க்கோட வாட்ச்மேன் தான் அடிக்கடி லீவ்ல கொடநாடு போய்டறாரு


============

6 காட்டாட்சி தந்த தி.மு.க.,: சேலத்தில் முதல்வர் ,ஜெ., தாக்கு # எங்க காடு தந்தாங்க. எல்லாருக்கும் ஒரு ஏக்கர் காடு தர்றேன்னாங்க, இன்னும் தர்ல


================


7 மீண்டும் நாக்கை துருத்தினார் விஜயகாந்த். பாதுகாப்பாளருக்கு விழுந்த அடி உதை. # முதல்ல இவரு யாரையும் அடிக்காம இருக்க ஒரு கம்பி வேலி பாதுகாப்பு போடனும்

================

8 பொதுமக்களிடம் நில அபகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள்-ஜெ #வெள்ள நிவாரணப்பணில ஸ்டிக்கர் ஒட்டுனவங்க வந்தா?

===============

9 ஜெ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை . -குஷ்பு # இல்லீங்களே, டெய்லி 4 கிமீ WALK போய்க்கிட்டுதான் இருக்காரு ஓவர் ஓவர்


=============

10 அ.தி.மு.க., தொண்டர்கள் நிறைந்த கட்சி. ஆனால், தி.மு.க.,வில் குண்டர்கள் தான் இருக்கின்றனர்-ஜெ # எப்படியோ 2 தரப்பும் விடாக்கொண்டர்கள் கொடாக்கொண்டர்கள்


===================


11 அமைச்சர் பதவி யார் தர்றாங்களோ அவங்களோட கூட்டணி என்பது அரசியல் அல்ல. - டிகேஎஸ் இளங்கோவன்.# அதிக சீட் தருபவர்களுடன் தான் கூட்டணினு ஓப்பனா அறிவிக்க முடியுமா?


==================


12  2012 ல் திமுக.பொதுக்குழுவில், 'கட்சிக்குள் சில குண்டர்கள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்' என, கருணாநிதி கூறியுள்ளார். -ஜெ # அழகிரியை சொல்லி இருப்பாரு..பர்சனல் மேட்டர்

====================


13 பொய் முகத்தை அடையாளம் காட்டு... நமது புதிய ஆட்சி தானாகப் பூக்கும்!": கருணாநிதி # தலைவரே! சைக்கிள் கேப்ல தாமரை இங்கே பூத்துடப்போகுது


==================


14 கருணாநிதியுடன் குஷ்பு சந்திப்பு -செய்தி # நம்ம கூடாரத்தில் இல்லைன்னாலும் நம்ம கூட்டணியில் இருப்பதே மகிழ்ச்சின்னாரா?


===============

15  செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கக் கூடிய கட்சி, அ.தி.மு.க., மட்டுமே.-விஜயபாஸ்கர்: # திமுக வை திட்டுவதுதானே அதிமுக  செய்த முக்கிய சாதனை?


=======================


16  என் ஆட்சி மக்களுக்கு வசந்தத்தை கொடுத்து இருக்கிறது.-ஜெ # இல்லையே? தினகரன் பத்திரிக்கை தான் வாரா வாரம் சண்டே வசந்தம் இலவச புக் இணைப்பா தருது


====================


17  ஜெவின் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து தருவோம் என்று  மக்களிடம் மன்றாடுவது தி.மு.க.,வின் தோல்வியை உறுதி செய்து உள்ளது.-வேலுமணி # எம் ஜி ஆர்  குணமாகி வந்தால் அவரிடம் ஆட்சியைக்கொடுப்போம்னு சொல்லி ஓட்டு கேட்டவங்கதானே?


=======================


18 

தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 501 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன-ஸ்டாலின் # மக்களுக்கு சோப் போடறோம்னு குறியீடு சூப்பர் 501


====================


19  மதுவை அறிமுகப்படுத்தி தமிழினத்தை அழித்த கருணாநிதியை, அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க, திருவாரூர் மக்கள் முன்வர வேண்டும். - சீமான் # சொந்த “மண்ணுக்குள் வைரம்” கிடைக்கும்னு கலைஞர் நம்பறார்


==================


20  ஜெயலலிதா பிரசாரத்தை துவங்கிய பிறகு தான், அவருக்கு வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது.-ராமதாஸ் # எக்சாம்க்கு படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் ஃபெயில் ஆவதற்கான அறிகுறி தெரியுதுனு சொல்ற மாதிரி இருக்கு


=========================

0 comments: