Tuesday, June 21, 2016

தலைவரே! மே 16 க்கு ஓட்டு போட ஏன் வரலை?

1  மேடம், எளிதில் அணுகக்கூடியவர் நீங்கன்னு கருத்துக்கணிப்பில் சொல்லி இருக்காங்களே? எப்டி?


 சாரி, அப்பாயிண்ட் மெண்ட் இல்லாம பேட்டி தர்றதில்ல


==============


2 சார், எனக்கும் அவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை

 சரி, பிரச்னை பண்ணி தான் பாருங்க

ஐ லவ் ஹிம்


ஆணியே புடுங்க வேணாம்

=================


3   தலைவரே! உங்க சொத்து மதிப்பு 4 கோடி ரூ தானே?

ஆமா!

ஆனா, உங்க பையன் 6 படம் தயாரிச்ட்டு இருக்காரு தலா 30 கோடி செலவுல, எப்படி?


==================

4 மேடம்.எதுக்கு கூட்டமா ஆபீஸ் வந்திருக்கீங்க?இவனுங்க எல்லாம் யாரு?என் ஃபேஸ்புக் 11,000 பாலோயர்ஸ் தான்.ஒரு கெத்து காட்டனும் இல்ல?


==============

5 டீச்சர்.GIRLS.ல R் சைலன்ட்டா?


நோ.கேர்ள்ஸ் தான்
என்னைக்கு அவங்க.சைலன்ட்டா இருந்திருக்காங்க?================

6 டாக்டர், வீட்டின் முற்றத்தில் துளசி இருந்தா நல்லதா?

 கார்த்திகா இருந்தாக்கூடதான் நல்லது, ராதா ஒத்துக்கனுமே?


=====================

7
தலைவரே! டெம்ப்ப்பிள் ரன் கேம் விளையாடுவீங்களா?

 ம்ஹூம், சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது. சர்ச் ரன், தர்கா ரன் வேணா விளையாடுவேன்


====================


நான் கூண்டுக்கிளியா வீட்லயே இருக்கேன்

 மிஸ்.அப்பப்ப ஃபேஸ்புக்ல வந்து டைம் சொல்றீங்க. அப்போ மணிக்கூண்டுக்கிளி தானே?


====================


தலைவரே! 11 கோடி கடன் இருக்குனு குறிப்பிட்டிருக்கீங்க?’
 ஆமா

 உங்க கடனையே கட்ட முடியாத நீங்க தமிழக கடனை எப்படி தீர்க்கப்போறீங்க?


==================

10 ஜட்ஜ் = பேங்க்ல 100 கோடி கொள்ளை அடிச்சியா?

 கைதி =  100 ரூபா பிக்பாக்கெட் அடிச்சுட்டு  அது  ல 50% போலீஸ்க்கு மாமூல் தரும் சாதா கபாலின்னு நினைச்ட்டீங்களா?கபாலிடா===================


11 தலைவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காதாமே?

 ஆமா, கோர்ட் டுக்கு அவரை அழைச்ட்டு போலீஸ் வந்தப்போ முகத்தை மூடிக்கிட்டாரே?


==================


12 
 மாப்ளை பேங்க் ஸ்டாஃப்னு சொன்னீங்க, ஆனா ரவுடி மாதிரி இருக்காரு?
 தலைவரோட  வாக்கு வங்கி க்கு இன்சார்ஜ்


================


13  நாட்ல கிரிக்கெட் ரசிகர்கள் ஜாஸ்தியா இருக்காங்க.

 தலைவரே! அதுக்காக  டோனி, கோஹ்லி, அனுஷ்கா சர்மா, லட்சுமிராய் இவங்களை எல்லாம் பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வரலாமா?


==================


14  தலைவர் கோபம் வந்தா உடனே பக்கத்தில் இருப்பவர்க்கு ஒரு அறை கொடுப்பாராம்

 ஓ, ”அறை” லூசுன்னு சொல்லு


==================


15 தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்வேன்

 தலைவரே! தோத்துட்டா?

 வழக்கம் போல் கெடுதல் தான் செய்வேன்


====================


16   தலைவரே! மே 16 க்கு ஓட்டு போட ஏன் வரலை?

 16 வயதினிலே படம் பார்க்க போய்ட்டேன்


====================


17  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை  தினமும் மூடுவோம்

 அப்போ பர்மனெண்ட்டா மூட மாட்டீங்களா?===================18   கஷ்டப்பட்டு ஊழல்ல சம்பாதிச்ச பணத்தை எல்லாம் வாக்காளர்க்கு தந்தேன் 1000  ரூபா நோட்டா

 என்னாச்சு இப்போ?

 எல்லா வாக்கும் போய்டுச்சு நோட்டா வுக்கு


==================


19 தலைவரே! ஏன் டெபாசிட் கட்டலை?

 டெபாசிட் கூட கிடைக்கலைன்னு நாளை யாரும் நம்மை எள்ளி நகையாட முடியாதில்ல?


=====================


20  தலைவரே! ஈழத்தமிழர்களுக்கு எதிரி  அவங்க தான் அப்டினு சொல்லியும் ஏன் உங்களுக்கு ஆதரவு கிடைக்கலை?

ஏன்னா நான் ஈழத்தமிழர்களுக்கு துரோகி. எதிரியை விட துரோகி ஆபத்து======================

0 comments: