Wednesday, June 29, 2016

சோ ராம சாமி vs, டிராபிக் ராமசாமி

பிச்சைகாரர்கள் கூட செல்போன் வைத்துள்ளார்கள்-ஸ்டாலின் # பதவிக்காக.வீடு.வீடாக ரோடு ரோடாக வாக்கு கேட்பவர்களும் வாக்குப்பிச்சைக்காரர்களே

=============

2  பா.ஜ., அரசுக்கு தொடர்ந்து அ.தி.மு.க., ஆதரவு அளிப்பது வேடிக்கையாகவும், வினோத மாகவும் இருக்கிறது. -சோனியா:# கூடா நட்பு-ன்னு சொன்ன பிறகும் நாம எப்டி  திமுக  கூட சேர்ந்தோம்? 


=============

 எனது எந்தவொரு அறிக்கையும், உண்மை தகவலின் அடிப்படையில் தான் இருக்கும்.-,கருணாநிதி # அழகிரியை துரோகிம்பீங்க, விருந்து சாப்பிட வீட்டுக்கு போவீங்க


=================


4  மக்களைச் சந்திக்காத ஒரே முதல்வர் ஜெ  தான்-கனிமொழி: # 24 படத்தில் வரும் டைம் வாட்ச் கட்டி நாம எப்டி எம் பி ஆனோம்? மக்களைச் சந்திக்காமதானே?என பார்த்துட்டு வரவும்


==============


5  , பிரசாரம் செய்வதற்கே இயலாத ஒருவரால், முதல்வராகச் செயல்பட முடியுமா ?-ராமதாஸ் #உடல்நிலை சரி இல்லாம நீங்களே பிரச்சாரத்தை ரத்து செய்யும்போது 90+ வயசு கலைஞர் ரத்து செஞ்சா என்ன?


=====================

6  தமிழகத்தில் கால்பந்து விளையாட்டு போல, தி.மு.க., - அ.தி.மு.க., என்ற 2 கோல் ஆட்சிப் பந்து,-
சீத்தாராம் யெச்சூரி பேச்சு:# மத்தவங்களை கோள் சொல்வதை குறைச்சுட்டு நீங்க கோல் போடும் வழி பாருங்க


==================

7   இந்தத் தேர்தலில் பா.ஜ., வைப்புத் தொகையையே வாங்காது.- EVKS # இந்தியாவிலேயே அதிக நிதி உள்ள கட்சி பிஜேபி தானாம்.நமக்கெதுக்கு பெரிய இடத்துப்பொல்லாப்பு?


================


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: ஒட்டுப் போட்ட சட்டை: பா.ஜ., வர்ணனை # ஏழைகளும் ஒட்டுப்போட்ட சட்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்,அதனால் ஏழைகளை கவரும்


================


பணம் புழங்கும் பதற்றமான 94 தொகுதிகள் அறிவிப்பு-செய்தி  # 234 லயும் பணம் புழங்கிட்டுதான் இருக்குது. 94 தான் இவங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு


=================


10 அ.தி.மு.க., அறிக்கையில் 29 காப்பி: ராமதாஸ் # பிராயசித்தமாக  ஜெ ஆட்சிக்கு வந்ததும் அம்மா ஜெராக்ஸ் க்டை காண்ட்ராக்ட் அன்புமணிக்கு தரப்படும்


======================11 சாத்தியங்கள் இல்லாத பொய்யான வாக்குறுதி அளிப்பதும் , இலவசங்களை அள்ளி இறைப்பதும் சட்டப்படி தவறு என சட்டம் வந்தால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்


===================


12 தமிழகத்தை காப்பாற்ற போவது யார்?:பிரதமர் மோடி கேள்வி # அந்த ஆண்டவருக்குதாங்க வெளிச்சம்.-2006 -2011 ஆண்டவருக்கா?2011-2016 ஆண்டவருக்கா? வாய்ப்பு என்பதுதான் தெரியல


=================

13 

ஜெ.,வின் மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகம்:- கருணாநிதி # புகழ் பெற்ற நாடகம், சினிமா வசனகர்த்தாவையே பாராட்ட வைத்து விட்டாரே ஜெ?==============


14 

அன்புமணியை ஆதரித்து தமிழகத்தின் திசையை மாற்றுங்கள்- அன்புமணி # இலவச அறிவிப்பு வந்ததும் சுக்ரதிசை அடிச்சாச்சுன்னு சந்தோசப்படறான் தமிழன்.===========


15 மோடி பி.ஏ., பட்டம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை’ கெஜ்ரிவால் # ஊரெல்லாம் வால் போஸ்டர் அடிக்ச்சுக்கொண்டாடுவாரோ? கெஜ்ரி”வால்”


==================

16 ச.ம.க., தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சம் பறிமுதல் # நடிகர் சங்கக்கடனுக்கு உதவ கொண்டு போனேன்னு சமாளிப்பாரோ?


=============


17  தி.மு.க.,வில் கருணாநிதி முதல்வரா, ஸ்டாலின் முதல்வரா என்பதில் பெரும் குழப்பம் உள்ளது- சரத்குமார் # அழகிரி முதல்வரா?ன்னு குழப்பம் வராத படி பார்த்துக்கிட்டதே சாமார்த்தியம் தான்


================


18 அ.தி.மு.க., தான் எதிரி ஜெ., அல்ல: 'டிராபிக்' ராமசாமி # எனக்கு நண்பர் சோ ராம சாமிதான், டிராபிக் ராமசாமி அல்ல அப்டினு அவர் சொல்வாரோ?=================

19 மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: ஜெ., வேண்டுகோள் # என் ஆட்சியில் என் ஆணைப்படி சர்வாதிகார ஆட்சி நடத்த மக்கள் ஆதரவு தேவைப்படுது


================


20 நாட்டில், இரண்டு கோடி பேருக்கு மனநோய் உள்ளது - செய்தி # குறிப்பா தமிழ் நாட்டில் நான் தான் அடுத்த முதல்வர்னு ஆளாளுக்கு சொல்லிட்டு திரிய\றாங்க


================

0 comments: