Friday, June 24, 2016

காரியம் VS கல்யாணம்

அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச மின்சார அறிவிப்பு: ஈரோட்டில் ஸ்டாலின் கணிப்பு # தானைத்தலைவருக்கு “ஷாக்” கிங்க் நியூஸ் ஆச்சே?

============

2 லாரி ஏற்றிக் கொல்வோம்.. தமிழிசைக்கு எஸ்.எம்.எஸ்சில் வந்த மிரட்டல்! # உடனடியா “ லாரிக்காரன்” ஐடி யை கைது செஞ்சிடாதீங்க. அவரு நல்லவரு

============

3 திமுகவினர் சொன்னார்களே, செய்தார்களா?, நான் தான் செய்தேன்: ஜெ # எது? சொத்துக்குவிப்புதானே?

===========

4 மே 3ல் மதுரை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பிரச்சாரம்... அழகிரி வீட்டில் ஸ்பெஷல் விருந்து # ஸ்டாலினுக்கு இது கசப்பு மருந்து

==========

5 பறந்து வந்த செருப்புகள், கற்கள்.. அமைச்சர் பழனியப்பனுக்கு ஷாக் கொடுத்த பாப்பிரெட்டிபட்டி வாக்காளர்கள # சபாஷ் ஹேப்பி பாப்பி மக்களே!

==============

6 திமுகவுக்கு ஆதரவாக பணியாற்றுங்கள்: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு # தலைவா! டைம் டூ லீடு கேப்சனுக்கே பாடா படுத்துனாங்க

============

7 அரசு திட்டங்களுக்கு MGR.பெயரை பயன்படுத்தாது ஏன்?: விஜயகாந்த் # வாக்கு கேட்கும்போது மட்டும்தான் எம்ஜி ஆர்.தேர்தல் முடிஞ்சா எம் ஜி “யாரு?”

=================

8 கேலி, கிண்டல் மீம்ஸ் மக்களே... தேர்தல் ஆணையம் உங்களைக் கண்காணிக்கிறது! # திருடறவங்களை, கொள்ளையர்களை கண்காணிங்கய்யான்னா பப்ளிக்கை... ஹய்யோ அய்யோ


===============

9

  பாவ மன்னிப்பு கேட்கும் தகுதி கூட கருணாநிதிக்கும், அவர் குடும்பத்துக்கும் இல்லை - விந்தியா # சிவாஜிகணேசனின் பாவமன்னிப்பு படம் பார்க்கும் தகுதி கூட இல்லையா?


================


10 மல்லையா தனது ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். # ஜெயில்ல கம்பி எண்ண வேண்டிய ஆளுக்கு எதுக்கு எம்.பி பதவி?

===========

11 தமிழகத்தில் உள்ள 1.5 கோடி இளைஞர்களும் அன்புமணியைப்பற்றி தான் பேசுகிறார்கள் -ராம்தாஸ் # தினமலர் அந்து மணி அல்லது அந்த MONEY யா இருக்கும்


=================


12 தினத்தந்தி தேர்தல் நெருங்க நெருங்க, அ.தி.மு.க. வின் பிரச்சார ஏடாக மாறி வருகிறது - கலைஞர் # தந்தியை நிறுத்தும்போதே தினத்தந்தியையும் நிறுத்தி இருக்கனுமோ?


==================

13 கலைஞர் தமிழ்மக்களுக்கு நிறைய காரியம் செய்துள்ளார்-

# நான் நிறைய பேர்க்கு கல்யாணம் செய்துவைத்தேன்னு ஜெ சொல்வாரோ?

==============

14 நான் வராத ஊர்களிலும் வந்ததாக தொண்டர்கள் கருத வேண்டும்-கருணாநிதி # இது பொய்யான நம்பிக்கையை விதைக்கும் தவறான செயல் ஆச்சே தலைவரே?


=============

15 அரவிந்த் கெஜ்ரிவால் புதிதாக கட்சி ஆரம்பித்து ஆட்சியில் அமர்ந்ததுபோலத் தான், தமிழகத்திலும் நடக்கும்.-ராம்தாஸ் # புதுக்கட்சின்னா சீமானும் , கேப்டனும் தான். யாரைச்சொல்றீங்க?தெளிவா சொல்லுங்க


======================


16  பாலில் தண்ணீர் கலந்து பார்த்திருப்பீர்கள். தண்ணீரில் பால் கலந்த சம்பவம், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது-ஸ்டாலின் #  போர்த்திக்கினு படுத்துக்கலாம், படுத்துக்கினு போர்த்திக்கலாம், 2ம் 1 தானுங்க


==================17  கருணாநிதி என்னை பிடிக்க பார்த்தார். கழுவுற மீனில் நழுவுற மீன் போல நான் நழுவி வந்து விட்டேன்-விஜயகாந்த் # டூ லேட்.அதான் உங்களை கழுவிக்கழுவி ஊத்தறாங்க


====================

18  மூன்றாவது அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்.-பண்ருட்டி ராமச்சந்திரன் # இதை ஒரு மூணாவது மனுசன் சொன்னா நம்பலாம் இரட்டை இலை ஆள் சொன்னா எப்டி நம்ப?


===================

19 50 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுள்ளது : ஸ்டாலின் # சேம் சைடு கோல் போட்டு மாட்டிக்காதீங்க, 60 வருசமா திமுக, அதிமுக தானே மாறி மாறி ஆட்சி?===================

20 
  • தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது: நடிகை குஷ்பு # டைம் மிஷின்ல 5 வருசம் பேக் ல போய் பார்த்திருப்பாரோ?
====================

0 comments: