Thursday, June 23, 2016

டாக்டர், சாப்பிடும்போது கூட மங்களகரமா சாப்பிடனும்?

 டாக்டர், சாப்பிடும்போது கூட மங்களகரமா சாப்பிடனும்னு எப்பவும் லட்டு, கேசரி, ஜிலேபி தான் சாப்பிடறாரு என் புருசன்

 சரியான மஞ்ச மாக்கானா இருப்பார் போல. சுகர் தாம்மா வரும்


=======================


2 ஆளுங்கட்சி   ரஜினி மேல கோபமா இருக்கா? ஏன்?

 நான் குனிஞ்சு வர்றவன் இல்ல, பணிஞ்சு போறவன் இல்ல, துணிஞ்சு எதிர்ப்பவன் -னு பஞ்ச் டயலாக் இருக்காம் கபாலில================


3  டியர்,சேர்த்து வைத்த கோபம் அனைத்தும் உன்னை நெருங்க நெருங்க பலவீனமடைந்து கண்ணீர் ஆகிறது

மொத்தத்துல நீயோ, உங்க அப்பாவோ சொத்து சேர்த்தலை?


================


4  ஏம்மா. யாரையோ லவ் பண்றதா சொன்னியே? யாரு?
டாடி, அவன் 'அன்பானவன் ,
அசராதவன் ,
அடங்காதவன்

அடேங்கப்பா. 3 பேரா?


=====================


5 பொண்ணுங்க செருப்பைக்கழட்டினாக்கூட நாங்க  கவலையேபடாம  கபாலி மாதிரி கமெண்ட் அடிப்போம்

 எப்டி?

 மகிழ்ச்சின்னுதான்


=========================6  ஜட்ஜ் = ஹெலிகாப்டர் ஊழலில் 250 கோடி லஞ்சம் வாங்குனீங்களா?

கைதி = ஹெலிகாப்டர்க்கு ஸ்பெல்லிங்க் கூட தெரியாதுங்க

அது தெரியும். கேட்ட கேள்விக்கு பதில் சொல்

===============


7  டேய் , ஹோம் ஒர்க் செய்யச்சொன்னேன். செய்யாம  டிராயிங் வரைஞ்சு வெச்சிருக்கே?

 டீச்சர். நான் சொன்னதையும் செய்யமேட்டேன், சொல்லாததை யும் செய்வேன்

=====================

8  
இது ஒரு கிளுகிளுப்பான மலையாளப்படம்னு எப்படி சொல்றீங்க?

டைட்டிலே ”சபாஷ் நாயுடு ஹால் ” தான்=================


9 மாப்ளை என்ன பண்றாரு?

 புரொடக்சன் ஆஃபீசரா இருக்காரு

 அடேங்கப்பா. எங்கே?

 ட்விட்டர்ல தான். அவர் போடும் ட்வீட்ஸ் வேற யாரும் படிச்சிடக்கூடாதுன்னு ப்ரொடக்சன் கொடுத்திருக்காரு


===================

10 டாக்டர் .2  வாரமா பிரிட்ஜில் வெச்ச நெல்லிக்காய் பழுப்பேறியிருக்கு. அதைப் பயன்படுத்தலாமா கூடாதா?

கூடாது. ஃபிரிட்ஜை எப்பவும் பயன்படுத்தவே கூடாது. கெடுதல்


===============


11 டாக்டர், கர்ப்பிணிப்பொண்ணுங்க பப்பாளிப்பழம் சாப்ட்டா கர்ப்பம் கலையுமா?

மேக்கப் கூட கலையாது. பப்பாளி உடல் சூட்டை தணிக்கும்


================12 டாக்டர், பெரிய நெல்லிக்காய் சாப்ட்டுட்டு தண்ணீர் குடிச்சா இனிக்குதே, அப்போ நெல்லிக்காய் சாப்ட்டா சுகர் வருமா?

இப்டி எல்லாம் கேள்வி கேட்டா எனக்கு கோபம் தான் வரும்

================


13  டாக்டர், மாம்பழம் சாப்ட்டா ஜாதிப்பற்று அதிகம் ஆகுமா?

உடல் தோல் ஷைனிங் தான் அதிகம் ஆகும். மாம்பழம் சின்னம் தான் ஆபத்து


=============

14 மீண்டும் கோகிலா படத்தை ரீமேக் பண்ணப்போறோம்
ஓஹோ? டைட்டில் மீண்டும் மீண்டும் கோகிலாவா?
நோ.வி “ஜெய”க்குமார். த ஃபேக் ஐடி
===============
15 பெண் பார்க்க நீ வர்லையா?


 நீங்க பார்த்தா போதும்மா

 சரி. பொண்ணு விஜய் ரசிகையாம்

 அய்யோ, அப்போ நான் நேரில் பார்த்துக்கறேன் எதுக்கும், ஃபேக்கா இருந்துட்டா?

==================

16    யுவர் ஆனர், எனக்கு டைவர்ஸ் வேணும்,  சம்சாரம் ஒரு விஜய் ரசிகை

 இதுக்கெல்லாமா டைவர்ஸ் கேட்பாங்க? 

 அய்யோ ராமா, அது ஆம்பளைங்கோ


===============

17  இண்ட்டர்வ்யூல  எதுக்கு நீங்க விஜய் ரசிகையா?ன்னு கேட்கறீங்க?

 ஒரு நம்பகத்தன்மைக்குதான் . ஃபேக் ஐடி களை ஐ. டி கம்பெனிக்கு எடுக்க முடியாது சாரி

==================


18  

டாக்டர். தேன் சாப்பிட்டா  உடம்புக்கு நல்லதா?

  ரொம்ப நல்லது. ஆனா அது ஒரிஜினல் “ஹனி”யா?ன்னு செக் பண்ணிக்கனும். பெரும்பாலும் டூப்ளீகேட்தான் மார்க்கெட்ல


================


19  தலைவரே! உங்க எதிரி பஞ்சப்பரதேசி போல

எப்டி கண்டு பிடிச்சே?
மாட்டு வண்டி ஏற்றி உங்களை கொலை செய்வேன்னு மிரட்டி இருக்கான்

=============

20 சார், உங்க 2 பசங்களுக்கும் என்ன பேர் வெச்சிருக்கீங்க?

விஜய் ரசிகர் = முத பையனுக்கு 100 கோடி, 2 வது பையனுக்கு 150 கோடி. அண்டர் புரொடக்சன்ல 3 வது இருக்கு,

=============

0 comments: