Sunday, June 12, 2016

சங்கமே அபராதத்துலதான் ஓடிட்டிருக்கு, இங்க வந்து டொனேஷன் கேட்டா எப்டி?

திருச்சியில் நமீதா அதிமுக வில் இணைந்தார் # இந்தப்பக்கம் குஷ்பூ , நக்மா அந்தப்பக்கம் நமீதா ,எதிர்ப்பக்கம் விஜய்காந்த் ஒரே சினிமா ஆதிக்கமா இருக்கே?================பிரச்சாரத்தில் காங்கிரஸ்க்கு பதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு கேட்ட கருணாநிதி:செய்தி!# நல்ல வேளை ,உதயசூரியனுக்குப்பதில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கலை==================3  சக்தியற்றவனாக இருக்கிறேன்..சக்தியைத் தாருங்கள்..'' - கருணாநிதி உருக்கம் # அனுதாப ஓட்டுக்கு அச்சாரம் போட்டுட்டார் தானைத்தலைவர். பலவீனத்தின் வெளிப்பாடு 


===============

மதுரை ஆதீனம் ஜெ வை சந்தித்து அதிமுக வுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக கூறினார் # மேடம், இவருக்கு தனி ரூட் நமீதாவுக்கு தனி ரூட் கொடுங்க


=====================
 என்னதான் இருந்தாலும், தி.மு.க., மீதான பாசம் என்னை விட்டுப் போகாது.- வை.கோ # புகுந்த வீட்டுக்கு வந்தாலும் தமிழச்சியோட நினைப்பு பிறந்த வீட்டிலேயே இருப்பது போலவா?

======================


6  தி.மு.க., தரப்பு மது ஆலைகள் மூடாதது ஏன்? ஜெ., கேள்வி # ஆலையை மூடுவதற்கு ஒரு “மூடு”(MOOD)  வரனுமில்ல? அதுக்கு ஆட்சிப்பொறுப்பு  மக்கள் தரனுமில்ல?

=================


7  ,பா.ஜ., அமைச்சர்கள் பலமுறை அழைத்தும், அவர்களுடன் விஜயகாந்த் போகவில்லை;-வை.கோ # வரலாறு தெரியாததுபோல் பேசாதீர்! திமுக , பாஜக இரு தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒத்து வராததால்தான்


=================

8   தமிழகத் தேர்தல் களத்தில், தைரியமாக உள்ள ஒரே கட்சி, பா.ம.க., மற்ற கட்சிகள் எல்லாம் பிறரை நாடியுள்ளன. எங்களுக்கு கூட்டணி தேவையில்லை; -அன்புமணி # யாரும் வர்லைன்னு சொல்லுங்க, ஆதரவு தர்லைனு ஒத்துக்குங்க


====================


 அன்று, எம்.ஜி.ஆர்., இரண்டு விரலைக் காட்டினால், இரட்டை இலை என அர்த்தம். இன்று, இரண்டு விரலைக் காட்டினால், அந்த இரண்டு பேரையும் துாக்கி எறியுங்கள் என்று அர்த்தம்- விஜயகாந்த் # 2 பேருக்கும் சம வாய்ப்பு சீட் ஜெயிக்க வெச்சு 2 பேரையும் தூக்கி  அரியணையில் வெச்சுடப்போறாங்க


================


10 ஓர் ஊரில் பஞ்சாயத்து என்றால், ஒரு சொம்பு, ஒரு நாட்டாமை இருக்க வேண்டும். ஆனால், ஆறு சொம்பும், ஆறு நாட்டாமைகளும் இருந்தால் விளங்காது- ராமராஜன் # ஆறு இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்னு ஆன்றோர்கள் சொல்லி இருக்காங்களே?

====================

11  செலவுக்கு பணம் இல்லை என்ற ஓசூர் வேட்பாளரை மாற்றிய பா.ம.க. # சங்கமே அபராதத்துலதான் ஓடிட்டிருக்கு, இங்க வந்து டொனேஷன் கேட்டா எப்டி?


========================


12 


, தேர்தல் விதிகளை மீறிய கட்சிகள் மீது, 2,764 வழக்குகள் பதிவு,அ.தி.மு.க., மீது மட்டும், 632 வழக்குகள் # இதுலயும் நாங்க தான் நெ 1 அப்டினு பெருமையா சொல்லிக்குவாங்களோ?

================

13  எங்களுக்கு எதிரி கிடையாது -அன்புமணி #  பலசாலிகளுக்கு  ஊரெல்லாம் எதிரிகள், பலவீனமானவருக்கு  எங்கும் எதிரிகள் இருக்க மாட்டார்


===================


14 அமைச்சர் வைத்திலிங்கத்தை, மீண்டும் பஞ்சர் ஒட்ட அனுப்ப வேண்டும்- -தஞ்சையில் பிரேமலதா # விஜய்காந்த்தை மீண்டும் நடிக்க அனுப்புங்கள்னு அவர் சொல்லிடப்போறாரு


=================


15   ஓவரா சத்தம் போட்டால் தொலைத்து விடுவேன்,- குறை சொன்னவரை மிரட்டிய  அமைச்சர் எடப்பாடி பழனிசாமி # நீங்கள் தொலைக்க இருப்[பது வெற்றி வாய்ப்பை எனவும் ஆகலாம்


========================


16  திண்டுக்கல்,மதுரை:இன்று விஜயகாந்த் பிரசாரம் # வாய்க்குப்பூட்டு போடாட்டியும்  யாரையும் கை ஓங்காம இருக்க கைக்கு  பூட்டு போடவும்


========================


17  பா.ம.க.,வில் மீண்டும் 2 வேட்பாளர் மாற்றம்  # மாற்றம் , முன்னேற்றம் கறதை இப்போ தான் ஃபாலோ பண்றாங்க 


===================


18  50 ஆயிரம் ரூபாய்; கால் ஏக்கர் நிலம் எளிமையான கேரள பா.ஜ., தலைவர் கும்மணம் ராஜசேகரன் # தமிழ் நாட்டின் இந்நாள், முன்னாள் முதல்வர் சொத்து மதிப்பை எல்லாம் பாருங்க. தமிழகம் தான் இந்தியாவில் நெ 1======================

19  

ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்து விடாதீர்கள்: பிரச்சாரத்தில் கருணாநிதி உருக்கம் # வழக்கமா 5 வருசத்துக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம், இந்த முறை ஏமாற்றம்
==================

20 

திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்: கருணாநிதி நம்பிக்கை # நம்பி” “ கை” இருக்கு, உங்களுக்கும் நம்பிக்கை இருக்கு, ஆனால் மக்கள் மனசில் என்ன இருக்கு?====================

0 comments: