Saturday, June 18, 2016

டாக்டர்! கேக் சாப்ட்டா உடலுக்கு நல்லதா?

1   டியர், அடிக்கடி மாங்காய் சாதம் சாப்பிட்டா மாங்காய் மடையன் ஆகிடுவே-னு குழந்தை கிட்டே ஏன் பொய் சொன்னே?

 எனக்கு மேங்கோ ரைஸ் கழற ( கிளற) தெரியாது

===================


 தலைவரே! நாம ஜெயிச்சுட்டா முதல் வேலையா என்ன செய்வோம்?

முதல்வராகப்பதவி ஏற்கிறேன்னு கையெழுத்துப்போடனும்

அப்போ மதுவிலக்கு தான் முதல் கையெழுத்து என்பது பொய் தானே?

=================

3 மேடம், மக்களோட வரிப்பணத்துல தானே தாலி தந்தீங்க?

ஆமா,

ஆனா மாங்கல்யப்பிச்சை-னு சொல்றாங்களே அப்போ நீங்க கேட்கும் வாக்குப்பிச்சை?


================

4  தலைவரே! அரசுப்பள்ளிகளில் தான் மக்கள் படிக்கனும்னு சொன்னீங்களே, வெரிகுட்

நன்றி

உங்க ஸ்கூல் சர்ட்டிஃபிகேட் காட்டுங்க. எந்த ஸ்கூல்னு பார்ப்போம்


==================


5

 தலைவரே! ஹிந்தித்திணிப்பை எதிர்த்த முக்கிய தலைவர் நீங்க
ஆமா

உங்க மகன், மருமகள்,பேரன், பேத்தி எல்லோரும் ஹிந்தி படிச்சிருக்காங்களே அது எப்படி?


=================


தலைவரே! 1974-ல் என்ன நடந்தது?

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தோம்.

அப்போ இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் கச்சத்தீவை மீட்போம்னு சொல்லிட்டுதானே இருக்கீங்க?


================

7
நான் எங்கே என்ன விஷயமாப்போனாலும் பாசிட்டிவ் ரிசல்ட்டோட தான் வருவேன்

ஓஹோ, எய்ட்ஸ் டெஸ்ட்டுக்குப்போனா பாசிட்டிவ் ரிசல்ட்டோட வந்தா எய்ட்ஸ் இருக்குனு ஆகிடுமே?


=============


8  தலைவரே! உங்களுக்கு சொந்தமா வாகனம் கூட இல்லைனு  சொன்னீங்க?

ஆமா

 அப்போ பிரச்சாரத்துக்கு கார்ல, வேன்ல வர்றீங்களே அந்த வண்டியோட ஆர்சி புக் எடுங்க பார்ப்போம்

=================

9  தலைவரே! சாராயத்தை முதன் முதலா கொண்டுவந்தது யாரு?
நான் தான்
கச்சத்தீவை தாரை வார்த்தது யாரு?

 அதுவும் நாந்தான்
இப்ப நீங்களே மதுவிலக்கு , கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது முரண் தானே?


===============

10  

சார், நீங்க வரலாறு படிக்காம கருத்து சொல்லாதீங்க


 நாந்தான் படிக்கலையே? படிச்சிருந்தா ஸ்கூல், காலேஜ்னு போய் இருப்பேனே? ஏன் ட்விட்டர் வர்றேன்?

===================


11  

 சார், நீங்க ஒரு அரை வேக்காடு


ஓஹோ, எப்டி சொல்றீங்க?

 எங்க கட்சியை விமர்சிக்கறீங்க இல்ல?

அப்போ உங்க கட்சியை பாராட்னா முழு வேக்காடா?

==================


12  

அஜித் குமார் 3 வேடத்தில் நடிச்சு கே எஸ் ரவிக்குமார் டைரக்‌ஷன் பண்ண படம் தான் வரலாறு


 இப்போ எதுக்கு இது?

 வரலாறு தெரியாமல் பேசாதேன்னீங்களே?

================


13  சார், எங்க கட்சி ஆன் லைன் மெம்பர் ஷிப் ஓப்பன் ஆகிடுச்சு, சேர்றீங்களா?

 என்ன விதிமுறை? எப்டி லாக் இன் ஆக?

 சாஷ்டாங்கமா தரைல படுக்கனும் முதல்ல


=====================

14 

 மேடம், ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 250 கோடி லஞ்சமா வாங்குனீங்களா?

 காத்து வாக்கில் வந்த செய்தி இது, நம்பாதீங்க


===================

15   

 தலைவரே! கட்சியின் வெற்றிக்குப்பாடுபட்டா 5 பவுன் தங்கம் பரிசாமே?

ஆமா, உள்ளங்கையை விரிச்சு ஓட்டு கேட்கும் போஸ் கைக்கு அதான் அர்த்தம்.அஞ்சு பவுன் தரும் அஞ்சான்


====================


16  டியர். சாப்ட்டியா?ன்னு அக்கறையா ஒரு வார்த்தை கேட்டா போதும், எனக்கு வயிறு நிறைஞ்சிடும்.

 நிஜமாவா? அப்போ தினசரி 3 வேளை சாப்ட்டியா? மட்டும் கேட்டுடறேன்


====================


17   தலைவரே! எல்லா அரசியல்வாதிகளும் விபரமா சம்சாரம் பேருல பாதி சொத்து எழுதி வைக்கறாங்களே எதுக்கு?

திடீர்னு நாம ஜெயிலுக்குப்போய்ட்டா ஜாமீன் எடுக்க காசு வேணுமில்ல?

===============


18 மிஸ்! இந்தாங்க பிளம் கேக்கு

யோவ் பேக்கு. நான் 250 ரூபாய் கேக் தான் சாப்பிடுவேன்.

அப்போ நீங்க பேக்கரி வெச்சிருக்கறவனைத்தான் வெச்சுக்கனும்


================

19 டியர், எனக்கு பிளாக் ஃபாரஸ்ட் கேக் வேணும்

உங்கப்பா என்னமோ ஃபாரஸ்ட் ஆஃபீசர் மாதிரி பில்டப் தர்றியே?இந்தா கூடை கேக் சாப்பிடு


=============

20 டாக்டர்! கேக் சாப்ட்டா உடலுக்கு நல்லதா?

பேக்குதான் கேக்கு, கோக்கு சாப்பிடுவான். மைதா + அஸ்கா = 2ம் கெடுதல் தான்

===========

0 comments: