Saturday, June 04, 2016

காதல் ஜோடிகளுக்கு சவுகர்யம்-@மாமல்லபுரம்

1 வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்கள் # உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும், தப்பு செஞ்சவன்  மன்னிப்பு கேட்கனும்

==============


உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பார்: ராமதாஸ் # நாம மட்டும் எல்லா தொகுதிலயும் 80% ஓட்டா வாங்கப்போறோம்.நாமும் ஃபெயில், அவரும் ஃபெயில்


====================


சர்வாதிகாரத்தின்
சின்னம் ஜெ
-கலைஞர்# உண்மை தான் தலைவரே! நாம மட்டும் இளப்பமா? சர்வதேச ஊழலான 2 ஜி யின் சின்னமே நாமதானே? போட்டி போட முடியுமா? வேற யாராவது நம்ம கூட?


========================நட்சத்திர கிரிக்கெட் ஏற்பட்ட நஷ்டம் தமிழக மக்களே பொறுப்பு-விஷால் # பருப்பு மாதிரி பேசப்படாது. அடிக்கற வெய்யில்ல 1000 ரூபா டிக்கெட் எடுத்து மண்டை காய தலை எழுத்தா?================


5 வேட்பாளர்களை அடிமை போல நடத்துகிறார் ஜெ.: மு.க.ஸ்டாலின் புகார் - கட்சிக்காரங்க எல்லாரையும் அப்படித்தானே நடத்தறார்?”அடிமை”ப்பெண்


========================


6  சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.. அழகிரி "அதிரடி" முடிவு! # மக்களுக்குப்பயன்படாம ஆத்துத்தண்ணி கடல் ல கலக்கக்கூடாதுண்ணே!


============

7 வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும் மும்பை : புல்லட் ரயில் # அப்போ விஜய் மல்லய்யா காலத்துக்கும் ஓடிட்டே இருக்கனுமோ?


==============

8 பண பலத்தை மீறி ம.ந கூ வெற்றி பெறும்: குமரியில் வைகோ நம்பிக்கை #அப்போ பணம் பாதாளம் வரை பாயும் என்பது பொய்த்து விடுமா?மனோ பலத்துக்கு வாழ்த்து


=================

9

சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் வாதம் # அப்போ அவரோட கோடிக்கணக்கான சொத்து எல்லாம் வயல்ல விவசாயம் செஞ்சு சம்பாதிச்சதா?================

10

திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையே இல்லையே ஏன்? ஜெ. கேள்வி #சாரி மேடம், பரிபூரணமா மறந்துட்டோம்================

11 தேர்தலுக்கு முன்பு, ஜெ சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு # நேர்மையான தீர்ப்பு வந்தா திமுக வுக்கும் , ம ந கூ வுக்கும் ஜாக்பாட்

==============


12

பெண்களுக்கு தடை விதிக்க சபரிமலை கோயில் நிர்வாகத்துக்கு உரிமை இல்லை: உச்ச நீதிமன்றம் கருத்து # கருத்து எல்லாம் நல்லாதான் சொல்றீங்க, ஆனா தீர்ப்புதான் குமாரசாமித்தனமா வந்துடுது


=================

13 திமுகவினர் மதுபான கம்பெனிகள் வைத்துள்ளதால் மதுவிலக்கு பற்றி பேச தகுதியில்லை:தமிழருவி மணியன் # அதே போல் சசிகலா சினிமா தியேட்டர் , வை கோ சிகரெட் கம்பெனி எல்லாம் சொல்லுங்க


================

14 அதிமுக ஆட்சி அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை துரோகத்தை செய்துள்ளது: - கலைஞர் # நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டுமே துரோகம் செய்தோம்

===========

15 சொன்னீங்களே..செஞ்சீங்களா..? விளம்பரத்திற்கு தடை விதிக்க அதிமுக தேர்தல் ஆணையத்திடம் மனு! # பயப்படறியா குமாரு?


==============


16 குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை ஏன் தடுக்க முடியவில்லை-ஜட்ஜ் கேள்வி # ஏன்னா 75% வேட்பாளர்கள் கிரிமினல்ஸ் தானே?


================


17 மதுவிலக்கு பற்றி பேசுபவர்களே மது ஆலைகளை நடத்துகிறார்கள்! – விஜயகாந்த் # ஆமாங்க, வை கோ பையன் கூட தம் ஃபேக்டரி வெச்சிருக்காரு, கேட்க முடியுமா?


=============

18

தமிழக அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படும்: சீமான் # சீதோஷ்ணம் வேணா மாறிடுச்சு. பயங்கர வெய்யில்==========================================


19


உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் இல்லை # காதல் ஜோடிகளுக்கு சவுகர்யம்
================

20 

அன்னை தெரசா வடிவில் பிரேமலதாவை பார்க்கிறேன்! -வைகோ # எனக்கென்னமோ ஒரு சாயல்ல காத்ரீன் தெரேசா சாயல் தான் தெரியுது
=======================

0 comments: