Sunday, June 19, 2016

குஷ்பூவால்தான் கட்சிக்கு எழுச்சி

234 தொகுதியிலும் அ.தி.மு.க.வினர் பணம் பதுக்கல்: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் - மு.க.ஸ்டாலின் # கோர்ட்டுக்குப்பின்னாலயும் 2 மூட்டை இருக்காம். இரட்டை இலை


=============


2


ஜெ. அப்பீல் வழக்கு விசாரணை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு- # தீர்ப்பு வர்றதுக்குள்ளே தேர்தல் மக்கள் தீர்ப்பே வந்திடும் போல

===========

3 மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் - ஸ்டாலின், # தலைவரே! இந்த வெத்து பாண்ட் பேப்பர்ல தெரியாம ஒரு கையெழுத்துப்போடுங்க பார்ப்போம்


=================


4 அன்புமணி சொத்து ரூ30 லட்சம்... மனைவி செளமியாவுக்கு ரூ58.32 கோடி சொத்து # எல்லாரும் விபரமா சொத்தை மனைவி பேர்ல எழுதி வெச்சுடறாங்க

=============

5 : நடிகர் கார்த்திக்கின் கட்சி 30 இடங்களில் போட்டி # 30 பேருக்கு எங்கே போவாரோ? பாவம்


==================


6 அரசியல் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் - கருணாநிதி # தலைவரே! இப்படி சொல்லி வெச்சுட்டா நாளை தேர்தல்ல தோத்தாக்கூட இது விருப்ப ஓய்வு -ன்னு சமாளிக்கலாம்னா?


----------------

7 திமுக வின் திருமங்கலம் ஃபார்முலா இப்போ தமிழ்நாடு ஃபார்முலா ஆகிவிட்டது - இல கணேசன் # சக்சஸ்ஃபுல் ஃபார்முலான்னு 2 தரப்பும் நம்புது


===============


8 ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை: சோனியா # முதல் டைம் தான் பயமா இருக்கும், நமக்குதான் பழகிடுச்சே?


==============


9 நான் தளபதியாக வரவில்லை உங்கள் வீட்டு பிள்ளையாக வருகிறேன் :ஸ்டாலின் # அண்ணே! உங்க சொத்து மதிப்பு 30 கோடின்னீங்களே அதுல 10% கொடுங்கண்ணே!

=================


10 பாமகவின் 42 கருத்துகளை காப்பியடித்த திமுக" - ராம்தாஸ் # தொல்”காப்பி”யர் கலைஞர் இதற்கு பதில் சொல்வாரா?


===================


11 மக்களைப் பார்ப்பதே பாவம் என நினைப்பவர் ஜெ - கருணாநிதி# தன் மகன் ,மகள் ,மக்களைப்பார்த்துக்கொள்வதே புண்ணியம் என நினைப்பவர் கலைஞர்============
12 தனக்கு ரூபாய் 2.04 கோடி கடன் இருப்பதாக ஜெயலலிதா தகவல் # பாவம்.மாசம் 1 ரூபா மட்டும் சம்பளம் வாங்குனா எப்டி கடன் கட்ட?============

13 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்: கருணாநிதி # நான் ஓய்வு பெற விரும்புகிறேன்னு நேத்து சொன்னது உங்க ஃபேக் ஐடியா?தலைவரே?
===============14 ஸ்டாலின் எனக்கு பிரசாரத்தில் கைகொடுத்து துாக்கி விடுகிறார். சரியான நேரத்தில், நான், அவருக்கு கைகொடுக்கும் நேரம் விரைவில் வரும்.-கலைஞர் # இப்படி ஆசை காட்டி ஆசை காட்டி அவரை மோசம் பண்றீங்க=====================


15 அ.தி.மு.க., ஆட்சி அமையப் பெற்றால், ஐந்தே ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் வளர்ச்சியை கொடுப்போம்-ஜெ #  இது பாமக டயலாக் ஆச்சே? அம்மா ஜெராக்ஸ் கடை?


====================


1 6   வைகோ திடீரென, போட்டியிட விருப்பம் இல்லை என்றது, தோல்வி பயம் காரணமாக, நடத்தும் நாடகம்.-அன்புமணி # மணியான கற்பனைன்னு  வை,கோ சொல்வாரோ?


==================

17  கருணாநிதி இதுவரை ஒரு சட்டசபை தேர்தலிலும் தோற்றது கிடையாது- ஸ்டாலின் # இப்போ தோக்கனும்னு சொல்றீங்களா?


================

18  காங்கிரசில் முன்பு சில காலம் தொய்வு இருந்தது. இப்போது, நாம் மீண்டும் முழு பலத்துடன் எழுந்து நிற்கிறோம்.-EVKS # நல்லவேளை, குஷ்பூவால்தான் கட்சிக்கு எழுச்சின்ன்னு சொல்லலை. சோனியா, ராகுல் எல்லாம் கடுப்பாகி இருப்பாங்க


====================

19  இந்த தேர்தல் தேவையற்றது. ஏன் என்றால் மீண்டும் ஜெ  தான் ஆட்சிக்கு வருவார். -ஆர்.சுந்தர்ராஜன்: # அடடா, இந்த உண்மை தெரியாம எலக்சன் எல்லாம் வெச்சு கோடிக்கணகான ரூபாயை வேஸ்ட் பண்றாங்களே


====================20  அதிமுக உடன் கூட்டணி அமைத்து செயல்படும்போது, மரியாதை இல்லாமல் நடத்துகின்றனர்.-அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கதிரவன்: # பேர் ராசி அப்டி.இரட்டை இலையவன்னு மாத்திக்குங்க


============================

0 comments: