Wednesday, June 22, 2016

இது பல “மாமா”ங்கங்களாக தமிழகத்தில் நடப்பதுதானே?

கணவர் போட்டியிடும் பென்னாகரத்தில் சவுமியா அன்புமணி தீவிர பிரச்சாரம் # நல்லா சத்தமா பேசுங்க. சவு”மியாவ்”னு கிண்டல் பண்ணி மீம்ஸ் போட ஆளுங்க ரெடியஅ இருப்பாங்க=======================
தமிழகம் தேசவிரோத சக்திகளின் இருப்பிடம்: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு #  வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு  எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு=================
ஜெ நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது: கனிமொழி # ஆனா நம்ம தானைத்தலைவர் மட்டும் ஓய்வெடுக்கவே மாட்டாரு?================


 

தேர்தல் அறிக்கைதான் எங்களது பிரம்மாஸ்திரம்: -வைகோ # பொறுங்க. ஒரு பிரம்மாண்ட அஸ்திரம் வந்துக்கிட்டிருக்கு ஆன் த வே


=============

மே 16க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்... முரளிதர ராவ் # ஆமா, ஆட்சி மாறுது, ஆனா ஆள்பவர் மாறுவாரா? தெரில


====================


6 திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள்: பிரேமலதா # பணம்னா பிணமும் வாயைப்பிளக்குமே,அதை செக் பண்ணாங்களோ?


==============


7 திருவாரூர் திமுக ஆபீஸில் இருந்து தடி, ஆயுதங்களுடன் என்னை தாக்க வந்தனர்: வைகோ # நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம்னாரே , இது பற்றி ஏன் சொல்லலை?


================


8 திராவிட கட்சிகளால் தொழில்துறையில் தமிழகம் மிகவும் பின்தங்கிவிட்டது: நிர்மலா சீதாராமன் # ஆனா மோடி போல் கலைஞரோ , ஜெ வோ வெளிநாடு டூர் போகலை


=============

9 அதிகாரிகள் துணையுடன் அதிமுக. பணம் கொடுத்து வெற்றிபெற முயற்சிக்கிறது- இந்திய கம்யூனிஸ்டு # இது தான் கைல காசு வாய்ல தோசை அம்மா ஃபார்முலா

==========

10 தி.மு.க.வில்சேர திட்டமா?:யாரும் என்னை விலைக்கு வாங்க முடியாது- கணேசமூர்த்தி # ரொம்ப காஸ்ட்லியான பிரமுகர் போல


===================


11 அ.தி.மு.க.– தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புங்கள்:-அன்புமணி # பங்களாவுக்கு அனுப்புங்கள்னு சொல்லுங்க

==================

12 தேர்தலில் மக்கள் எங்களை வெற்றி பெற செய்ய முடிவு செய்துவிட்டனர்: விஜயகாந்த் # முடிவு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.


=======

13 அதிகம் சிரமப்படக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் சுற்றுப் பயணத்தில் திருத்தம்:- கருணாநிதி # மகன் சொல்வதை கேட்கறீங்க,ஆனா அவருக்கு வழி மட்டும் விட மாட்டேங்கறீங்க

=============

14 தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது: பொன்.ராதா # காஸ்ட்லியாத்தானே இருக்கு?


=================

15 அதிமுகவிற்கு எதிராக அன்புமணி அலை வீசுகிறது - ராமதாஸ் #   அனல் காற்று தான்  சூடா வீசுது அய்யா


===========================


16  டாஸ்மாக் கடைகளை மூட மாட்டார்கள் -பிரேமலதா  # நைட் 10 மணி ஆனா தினமும் மூடிடறாங்க மேடம்


===================

17  எனக்குப்பிடித்த வில்லன் கருணாநிதி , வில்லி - ஜெ , பிடித்த ஹீரோ வைகோ - விஜயகாந்த் #  எங்களுக்குப்பிடித்த காமெடியன் நீங்க தான்================18   எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது - விஜய்காந்த் # அப்ப மவன் சண்முகப்பாண்டி க்கு ஒரு வாய்ப்பு உண்டு போல==================

19   2024 வரை மோடியே பிரதமராகனும் "- 70 % பேர் விருப்பம்: சர்வே தகவல் # அடேங்கப்பா, 10 வருசமும் உலக டூர் அடிச்ட்டே இருந்தா போர் அடிக்காது?


=================


20 அரசு அதிகாரிகள் புரோக்கர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்: இளங்கோவன் # இது பல “மாமா”ங்கங்களாக தமிழகத்தில் நடப்பதுதானே?

===============

0 comments: