Tuesday, June 21, 2016

நாம மட்டும் அன்னைக்கு குஷ்பூ வை கட்சில சேர்த்தோமே?

காஷ்மீரில் மோடி அலை அடிக்கும் போது தமிழகத்தில் ஏன் மோடி அலை அடிக்கக் கூடாது ?- தமிழிசை # தமிழகத்தில் வெய்யில் இந்தப்போடு போடுது, காஷ்மீரில் ஏன் வெயில் அடிக்கக்கூடாது?ன்னு கேட்கமுடியுமா?


===============திமுகவினர் மது ஆலைகள் வைத்திருப்பதாகக் கூறுவது கற்பனையே;- கருணாநிதி # அப்போ கவிதாயினி கனிமொழிக்கு கற்பனாசக்தி அதிகம்கறீங்க?=============

சென்னை தீவுத்திடலில் மே5ல் சோனியா கருணாநிதி ஒரே மேடையில் பிரச்சாரம் # மேடையில் கூடா நட்பு அதிகாரத்தில் இருந்து 10 குறளுக்கு விளக்கம் சொல்வாரா?


=================


4 நான் நன்றாகத்தானே தமிழில்தானே பேசுறேன் . இது கூடவா புரியவில்லை?-விகாந்த்:# தெளிவா பேசலை. பேச்சுமப்பும் மந்தாரமுமா இருக்குனு மக்கள் சொல்றாங்க

===============

5 மக்களிடம் செல்வாக்கு இழந்ததால், சினிமா நட்சத்திரங்களை வைத்து, அ.தி.மு.க., பிரசாரம் செய்து வருகிறது.-ஸ்டாலின்: # நாம மட்டும் அன்னைக்கு குஷ்பூ வை கட்சில சேர்த்தோமே?

========================

6  ஆலந்துார் தொகுதி மக்களுக்கு இனிவரும் காலம் முழுவதும் பணியாற்றுவதற்கு முழு உத்தரவாதமும், உறுதியும் தருகிறேன்.-பண்ருட்டி ராமச்சந்திரன்: # அரசியலில் இருந்து முழு ஓய்வுன்னு சொன்னீங்க?அது வாபசா?


====================

 மதுவிலக்கை அமல்படுத்திய காமராஜர் பெயரால் நான் கேட்டுக் கொள்வது  மதுவை நாம் பயன்படுத்தக் கூடாது.-கருணாநிதி # இந்திய அளவில் காமராஜரையே சந்தேகப்பட்ட ஒரே அரசியல்வாதி நாம தான்.இப்போ ஓட்டுக்காக இப்டி பல்டி


===================


பேரிடர் காலங்களில் முதல்வர் , அனைவரையும் நேரில் சந்திப்பது இயலாதது. -பண்ருட்டி ராமச்சந்திரன் # துக்க வீட்டுக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் போ என்பது தமிழர் மரபு

===================

வை.கோ தேர்தலில் போட்டியிடாதது, ஜி.கே.வாசனுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது-பொன்.ராதா # இப்டி நீங்க சொல்வது குழப்பத்தை தந்துள்ளது


====================


10 ஒரு பெண்மணி, இவ்வளவு துன்பங்கள், வழக்குகள், இடையூறுகளைச் சந்திக்கிறார்-மதுரை ஆதீனம் # உப்பு தின்னா தண்ணி குடிக்கனும், தப்பு செஞ்சா கோர்ட், ஜெயில் போகனும்


======================


11   


வாரிசு அரசியல் திமுக வில் மட்டும் இல்லை. பாமகவில் கூட அன்புமணி தான் சிஎம் வேட்பாளர் - கனிமொழி # அப்போ அப்பா ஏன் அதே போல் மகனுக்கு வாய்ப்பு அளிக்கலை?


===============

12 தமிழகத்துக்கு மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதி; அந்த மதுவால் மாநிலத்தையே பாழ்படுத்தியவர் ஜெ - வை கோ #  தமிழ்க்”குடி” மக்கள் நன்றி மறக்காம மாற்றி மாற்றி ஓட்டு போடுவது இதனால்தானோ?


======================

13  அ.தி.மு.க., - தி.மு.க.,வை புரட்டிப் போடும் மாஸ்டர் தான் இந்த விஜயகாந்த்-விஜய காந்த் # உங்க மாஸ்டர் பிளானும் தெளிவில்லை, மாஸ்டரும் ஸ்டெடி இல்லை

====================


14  கூட்டணி இல்லை என்ற ஜெ  தலைமைச் செய லர், டி.ஜி.பி., மாநில உளவுத்துறையுடன் கூட்டணி அமைத்துள்ளார்.-மு.க.ஸ்டாலின் # மக்களின் காவலர் என்பதால் காவலருடன் கூட்டணியா?

====================

15  ம ந கூ வெற்றி பெறவில்லை எனில் தமிழகத்தின் தலையெழுத்தை ஆண்டவன் வந்தால் கூட காப்பாற்ற முடியாது -ஜி.கே.வாசன்# ஏற்கனவே ஆண்டவர்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது?


=====================16  தி.மு.க., - அ.தி.மு.க., 2  கட்சிகளும் ஊழலின் அடையாளங்களாக இருக்கின்றன-வைகோ  # 50 வருட பாரம்பரியம் மிக்க அடையாளங்கள்


====================

17  100 % ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் கமிஷன் இலக்கு:பாதிப்பு வருமோ என அரசியல் கட்சிகள் கலக்கம் # 75% க்கு மேல வாக்குப்பதிவு நடந்தா ஆளும் கட்சிக்கு ஆபத்து


====================

18 தொங்கு சட்டசபை அமையாது: கருணாநிதி உறுதி -செய்தி  #  தமிழன் எப்பவும் குழம்பாம சிந்தாம சிதறாம தன் வாக்கை ஏதோ ஒரு கட்சிக்கு அளிப்பான்

===================

19  தொலைக்காட்சிகளில் வெளியாவது கருத்துக் கணிப்பு இல்லை; கருத்துத்திணிப்பு - விஜயகாந்த்..# கேப்டன் டி வி ல  அடுத்த  சி எம் நீங்க தான்னு சொன்னாங்க,அப்போ அது?


==================


20 
  • தமிழகத்தை பெரும் துயரிலிருந்து மீட்டவர் முதல்வர்: நடிகர் சிங்கமுத்து # சென்னை,கடலூர்ல வெள்ளம் வந்தப்போ தாய் உள்ளம் வந்தாரா?
============================

0 comments: