Tuesday, June 28, 2016

சார், நேத்து நைட்டே படம் பார்த்துட்டீங்களே? ஏன் இன்னும் விமர்சனம் வர்லை?\

தலைவரே! நம்ம ஆட்சில வெள்ளபாதிப்பே இருக்காதுனு எப்டி சொல்றீங்க?
நம்ம ராசி அப்டி.மழையே பெய்யாது.வெள்ளம் எப்டி வரும்?\==============
2 எல்லார் க்கும்் கன்றுக்குட்டிதானே அழகா தெரியும்?என் கண்ணுக்கு பசு அழகாத்தெரியுது.
அடப்பாவி.த்ரிஷா வை விட அவங்க அம்மா.செம னு சொல்வே போல?
=============3 தலைவரே! உங்க ஆட்சில பணப்புழக்காட்டம் பிரமாதமா இருந்ததுன்னீங்க.எங்க கைல 10 பைசா இல்லையே?யோவ்.எங்க குடும்பத்துல சொன்னேன்===============

4 யார் எனக்கு லவ் லெட்டர் தந்தாலும் அதை வாங்கி பேப்பர் கப்பல் செய்வேன்

ஓஹோ, அப்போ நான் உங்களுக்கு பேப்பர் கப்பல் தந்தா எனக்கு லவ் லெட்டர் தருவீங்களா?================\


5   ஏழைகள் இருக்கும் ஏரியாவில் எங்க கால் படுவதே இல்லைனு ஒரு புகார் வந்தது.அதான் அப்டி.

சார்,அதுக்காக ஐஏஎஸ் ஆஃபீசர் நீங்க பேஷண்ட்டோட பெட்ல கால் வைக்கலாமா?


===============

6  தலைவரே! அமாவாசை யைக்கண்டா உங்களுக்கு பயமாமே?

அதெல்லாம் இல்லை.நாகராஜசோழன் வந்தாலும் பயம் இல்லை. தேர்தல் அறிக்கை ரிலீஸ் ஆகுதே அதான்


==================


7

சார், நம்ம சினிமா விளம்பரத்தில் வெற்றி சிம்மாசனத்தில்-னு போட்டிருக்கீங்களே?


\\ சோ வாட்?\\\


சிம்ம ராசிக்கு பிடிக்காது. பார்த்துக்குங்க


====================

8 டாக்டர், டெய்லி உண்வில் கொள்ளு சேர்த்துக்கிட்டா குதிரை மாதிரி சக்தி கிடைக்குமா?

 பதில் சொன்னா நர்சைக்கூட்டிட்டு வேகமா ஓடிடுவியோனு பயமா இருக்கு==================


9  

வாக்காளப்பெருமக்களே! இலவச திட்டங்கள் பார்த்து வேறு யாரிடமும் ஏமாந்துவிடாதீர்கள், பாரம்பரியப்பெருமை, பரம்பரைப்பெருமை மிக்க எங்களிடமே ஏமாறுவீர்=================10  

நான் ஜெயிச்சா தொகுதியை சிங்கப்பூர் ஆக்குவேன்


 எப்டி?

 யாராவது தூ-ன்னு துப்பினா ஸ்பாட் ஃபைன் 2000 ரூபா


=================

11  

 மிஸ்! திருமணம் என்பது ஒரு கொலை போலன்னு எப்படி சொல்றீங்க?


வரப்போற துணை அன்பானவளா, அடக்கமானவளா இருப்பா எனும் மாப்ளையின் நம்பிக்கையை கொலை ப\ன்னிடறமே?


==================


12   

 தலைவரே! கணக்கு கேட்டா உங்களுக்குப்பிடிக்காதாமே?


 ஆமா, சொத்துக்கணக்கை கேட்டா எப்டி?===============

13 தலைவரே! நம்ம தேர்தல் அறிக்கை தான் ஹீரோன்னீங்களே?


என்னய்யா பன்னச்சொல்றே?நாம போட்ட கோட்டுக்கு பக்கத்துல பெரிய கோடு போட்டுட்டாங்க

=============


14 டியர்.நம்ம வீட்ல நீ தனி நான் தனி


வாட்?
லூசு.தனித்தனி மீட்டர் போட்டுட்டா 100 யூனிட் தான் வரும்.அரசை ஏமாத்திடலாம் இல்ல?=========


15 கடலை போடறது விவசாயம் தானே?


ஆமா.
நான் டெய்லி நெட் ல பல பொண்ணுங்களோட கடலை போட்டதுல போன் பில் 2000 ரூபா கடன்.இதை அரசு கட்டிடுமா?==

16 தலைவரே! நம்ம கட்சியோட  செல்வாக்கு குறைஞ்சிருச்சு போல 

 ஆமா. “ செல்” வாக்கு உண்மைனு நம்பறாங்க ஜனங்க


================


17  42 வயசு ஆகுது மாப்ளைக்கு.ஏன் 24 ன்னு பொய் சொன்னீங்க?

பொண்ணு சூர்யா ரசிகையாம்

===========

18 சூர்யா ரசிகையைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு மாப்ளை ஏன் அடமா இருக்காரு?

அப்போதான் 24 மணி நேரமும் மாப்ளையையே நினைச்ட்டு இருக்குமாம்


==============

19 சார், நேத்து நைட்டே படம் பார்த்துட்டீங்களே? ஏன் இன்னும் விமர்சனம் வர்லை?\

 நான் ஒரு டாக்டர் இல்லையா? “24” மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும்.


======


20   தலைவரே! தீவுத்திடல்ல மீட்டிங்காமே?எதுனா குறியீடா?


4 பக்கமும் தண்ணீரால் சூழ்ந்ததுதான் தீவு.எங்களுக்கு வாக்களித்தால் கண்ணிர்தான் தீர்வு==================

0 comments: