Sunday, June 26, 2016

தலைவரே! கருத்துக்கணிப்புகளை நம்புவீங்களா? மாட்டீங்களா?

1  நாங்கள்.ஆட்சிக்கு வந்தால் வள்ளுவருக்கு வைத்தது போல்.வாசுகிக்கும் கன்யா குமரியில் சிலை வைப்போம். அவருக்கு.133,அடி.இவருக்கு 143 அடி


==============

2 தலைவரே! ஹெலிகாப்டர் ஊழல் பற்றி சோனியா காந்தி ட்ட கேட்டீங்களா?

ம்ம் கேட்டோம்.பங்கு கேட்டோம்.தரவில்லை.பெருந்தன்மையாய் விட்டுவிட்டோம்

=============

3 தலைவரே! பெருந்தன்மை மிக்கவர் நீங்கனு சொல்றாங்க?

ஒரு திருத்தம்.யார் எது கொடுத்தாலும் பெறும் தன்மை மிக்கவர்


================

4 தலைவரே!பகுத்தறிவுவாதிக்கு கோயில் ,சாமி டச் இருக்கக்கூடாதில்ல?

ஆமா.
அப்போ அறிவாலயம் ல ஆலயம் இருக்கே?ஆலயம்னா கோயில் தானே?


================


5 தலைவரே! மீத்தேன் திட்டத்தில் தெரியாம கையெழுத்துப்போட்டீங்களா?எப்டி?

அது ஏதோ தேன் மீட்பு தொழில் னு நினைச்சுட்டேன்


==============


6 எனக்கு குடிகாரர்கள் ஓட்டு தேவை இல்லை என ஒரு தலைவரும் தில்லாக சொல்ல முன் வராரது ஏனோ?

குடிமக்களை நம்பித்தானே குடியாட்சி?


==============


7 ஹெலிகாப்டரில் வந்து மக்களை சந்திப்பவருக்கா உங்கள் வாக்கு?

ஹெலிகாப்டர் ல பயணம் செய்வது தப்பில்லை.ஊழல் செய்வதுதான் தப்பு.250 கோடி.சோனியா


=============


8 சார்.இறப்புக்குப்பின் உங்களை எரிக்கனுமா?புதைக்கனுமா?

புதைத்து விடுங்கள்.எரிப்பதாக இருந்தால் விறகுக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டி இருக்கும்

============


9 மிஸ் ! எப்டி இருக்கீங்க?

பிசியா இருக்கேன்.
ட்விட்டர்ல ஃபேஸ்புக்ல எந்நேரமும் இருக்கீங்களே?அதான் கேட்டேன்


===============


10 தலைவரே! பணம் கொடுத்து நமக்கு சாதகமா ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை.வெளியிடறமே.இதனால் லாபம் உண்டா?

டைலம்மாவில் இருக்கும் 5%,வாக்கு விழும்


============


11 24 படம் ஹிட் ஆகிட்டா ஒரு நெட் பைட் உறுதின்னு எப்டி சொல்றே?

விஜய் ரசிகர்கள் கடுப்பாகி சூர்யா ரசிக்ர்களை வம்புச்சண்டைக்கு இழுப்பாங்க பாரு

==========

12 தலைவரே!இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி இருக்கீங்களா?

இல்லை.்
ஓ.அப்போ எந்த முகத்தை வெச்சுக்கிட்டு இந்து வீட்டு படி ஏறி வாக்கு கேப்பீங்க?

=============


13 தலைவரே! கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்க கூச்சமே இல்லாம முஸ்லீம் கிட்டே நோன்புக்கஞ்சி குடிப்பது எப்டி?

சிறுபான்மையினர் ஓட்டு வருதில்ல?


==============

14 தலைவரே! நாம முதல்ல எல்லாம் திருட்டு ரயில்ல தானே வருவோம்?

இப்போ தான் ஏகப்பட்ட விமானமே.வாங்கிப்போட்டுட்டமே?சொத்து சேர்ப்பது நம் கெத்து


===============

15 தலைவரே! அப்துல்கலாம் க்கு அஞ்சலி செலுத்த வயது மூப்பு காரணமாத்தானே போகமுடில?

ஆமா.
இப்ப பிர்ச்சாரத்துக்கு மட்டும் எப்டி போறீங்க?

=============

16 தலைவரே! மாசம் 2 டைம் சம்பளம் தர்றீங்களா?

ஆமா, ஆங்கில மாசம் 1 , தமிழ் மாசம் 1 அப்டி பிரிச்சு கொடுப்போம். 

ஒரே சம்பளத்தை ஒன் பை டூ போட்டா? டபுள் சம்பளமா?

 ஆ!


================

17   நமது ஆட்சியில் இனிமேல் தவறுகள் நிகழாதுன்னு சொன்னீங்க, சந்தோசம்

 ஆங்

 அப்போ ஃநம்ம ஆட்சியில் நீங்க செஞ்ச தவறுகள் என்னென்னெ?லிஸ்ட் போடுங்க 


==================


18  தலைவரே! கருத்துக்கணிப்புகளை நம்புவீங்களா? மாட்டீங்களா?

 நமக்கு சாதகமா இருந்தா நம்புவேன், பாதகமா இருந்தா கண்டபடி திட்டி விட்ருவேன்==================


19    மிஸ்! உங்க அழகுக்கு 80 மார்க்ஸ் , உங்க தங்கச்சி அழகுக்கு 85 மார்க்ஸ்

 யோவ்! இப்போ எதுக்கு இது?

 இன்னைக்கு காரல் மார்க்ஸ் பர்த்டே. கண்ணில் தட்டுப்படும் ஃபிகர்களுக்கு மார்க்ஸ்


================


20 உண்மையான ஃபாலோயர்ஸ்னா எழுத்தைப்பார்த்து  ஃபாலோ பண்ணனும்

 மிஸ்! கையெழுத்து அழகு பார்க்க இது கை எழுத்துப்பிரதியா? எல்லா லெட்டர்சும் ஒரே மாதிரி தானே இருகு?


=================

0 comments: