Thursday, June 09, 2016

டாக்டர்! தேங்காய் சட்னியை விட கடலை சட்னி ஏன் பாப்புலர் ஆகலை?

தலைவரே! ஒல்லியா இருப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவின்னு ஏன் சொல்றீங்க?

 குண்டர்கள் கொண்ட கட்சின்னு யாரும் சொல்லிடக்கூடாதில்ல?


===================

டியர்! சந்தோஷோட இருக்கியா?

 வாட்?

 சாரி. சந்தோஷமா இருக்கியா?


==================

3 மேடைல எல்லாரும் 10 அடி தள்ளி இருக்காங்களே என்ன மேட்டர்?

 தலைவரே! உங்களூக்கு எப்போ கோபம் வரும்? எப்போ கை நீட்டுவீங்கனு யாருக்கும் தெரியறதில்ல==================


4  டாக்டர். என் காதலிக்கு தூக்கம் தான் லவ்வராம், எப்போ பாரு தூங்கிட்டே இருக்கா.

 சிம்ப்பிள் மேட்டர் , அவரு தூங்கிட்டு இருக்கும்பொதே நைசா லவ் பண்ணிக்குங்க

==================

5   நம்ம கம்பெனியோட முதலீடு 100 கோடி.ஒரு வருட வட்டி 2% வீதம் மாசம் 2 லட்சம் வட்டி ஒரு வருசத்துக்கு 24 லட்சம், நட்ட ஈடு 10 கோடி. அப்போ நிகர நட்டம் 10 கோடியே 24 லட்சம்

 அதெப்பிடி சார்? 100 கோடி லாபம் தான் வரும்


===================

எங்கள் கட்சிப்பிரச்சாரக்கூட்டத்தில் யாரும் சாவதே இல்லை. நாங்கள் புத்திசாலித்தனமாக 60 வயதுக்கு அதிகமானோரை அனுமதிப்பதே இல்லை

=================

7 டியர்,எனக்கு propose எல்லாம் பண்ண தெரியாது முன்ன பின்ன இருந்த adjust பண்ணிக்க..

சமையல், மையல் 2 மே தெரியாதா? சரி அட்ஜஸ் பண்ணி தொலைக்கறேன்


=====================

8

சார், சமூக ஊடகங்களை தமிழர்கள்  தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தறாங்களா?


 எங்கே? பூராப்பயலும் கிளர்ச்சிக்குதான் பயன்படுத்தறாக

=================ஒரு டிஸ்ட்ரிபியூட்டரான நீங்க ஏன் தற்கொலை முயற்சில ஈடுபட்டீங்க? நட்டம் ஆகிடுச்சா?


கேரளா விஜய் பாபு = அதுகூட தேவலை. படத்தை பார்த்துட்டேன்

===========

10 டாக்டர்! ஃபேஸ்புக் போகாம இருந்தா என் லைஃப் நல்லாருக்குமா?


போனா லைக்ஸ், போகலைன்னா லைஃப்=============

11 தலைவரே! சத்தியத்துக்குக்கட்டுப்பட்ட ஒரே கட்சி நம்ம கட்சி தான்

எப்படி?

ஓட்டுக்குப்பணம் தரும்போதே வாக்காளன் கிட்டே சத்தியம் வாங்கிக்கறமே?


==================

12 தலைவரே! மதுவிலக்கு ன்னு எல்லாரும் சொல்லிட்டமே.குடிகாரர்கள் யாருக்கு ஓட்டு போடுவாங்க?


நமக்குதான்.நம்மைப்பத்தி நாட்டுக்கே தெரியுமில்ல?


==============

13 தலைவரே! தனது தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தவனே சந்தோஷமாக இருக்க முடியும்.

அதனால தான் என் சின்னவீடுகளின் எண்ணிக்கையை 10 லிருந்து 3 ஆகக்குறைச்சுக்கிட்டேன்


==================

14 இயக்குநர் விஜய் = இன்ஸ்பெக்டர், அமலாபாலை காணோம்

பதட்டப்படாதீங்க. கண்டுபிடிச்சடலாம். உங்க வீட்டுக்குப்பக்கம் விஜய் ரசிகர்கள் இருக்காங்களா?


====================

15 தலைவரே! நாம 30 மது ஆலைகள் நடத்துனது யாருக்கும் தெரியாம இருந்தது, இப்டி உளறி மாட்டிக்கிட்டமே?

சொன்னது கடுகளவு, சொல்லாதது கடல் அளவு

===================

16 1974 ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்போ  எங்க கட்சியே உதயம் ஆகலை

 அது சரி தான்,ஆனா கூட்டணி வைக்கும்போது ஏன் கண்டனம் தெரிவிக்கலை?


======================

17 

மிஸ்! நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க?
எட்டாங்கிளாஸ் பெயில் ஆகும் வரை.ஏன்?
நல்லவேளை.நாம 2 பேருமே லாஸ்ட் பெஞ்ச்.கார்னர் சீட்
============18 சார்.6 நாளில் 100 கோடி வசூல் ங்கறதை நம்பமாட்டேன் கறீங்களே?கலெக்சன் ரிப்போர்ட் பற்றி தெரியுமா?இல்லை.எனக்கு தாணு,விஜய் பற்றி தெரியும்

==============

19 டாக்டர்! தேங்காய் சட்னியை விட கடலை சட்னி ஏன் பாப்புலர் ஆகலை?

பொண்ணுங்க கிட்ட கடலை போடலாம்.ஆனா கடலை சாப்பிடுவது பித்தம்,அதான்

==============

20 நான் பயங்கர பணக்காரன்,வீட்டுக்குள்ள ஒரு செருப்பு, வெளியில ஒரு செருப்பு, கக்கூஸ் போறதுக்கு ஒரு செருப்புனு போட்டுக்குவேன்

ஓஹோ, நான் ஏழை தான்,ஆனா எங்கே போனாலும் 2 செருப்பையும் போடுவேன்

======================

0 comments: