Friday, January 11, 2013

பொங்கல் ரிலீஸ் படங்கள் - வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 11.1.2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMWyBedvdZNQBZXPD_2Lt3yeIKH4Jt3iBfVtnzgV0NNJpUOm8BG23xdG2R_b9bjfu4rzo8lb1XM2n53n6uCM9JXyTePO8h5S-Kst9RDbcoICqDW6Uad_Zj3U3hEtxQiqq5VWOjlBpBuzM/s1600/Karthi's+Alex+Pandian+Audio+Release+Wallpapers,+Posters+-+www.TodaysWorld.in+(3).jpg 

1. அலெக்ஸ் பாண்டியன் -வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படங்களில் அதிகபட்ச நம்பிக்கையுடன், எந்தவித சச்சரவுமில்லாமல் வெளியாகும் ஒரே படம் கார்த்தி-அனுஷ்கா நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ படம்தான்.

கமல் நடித்து, இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படம் டி.டி.எச். பிரச்சினையில் தியேட்டர் கிடைக்காததால் பொங்கலுக்கு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சந்தானம் நடித்துள்ள ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதால் அந்த படமும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த பொங்கல் ரேஸில் தனித்து களமிறங்கும் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தை ஒருநாளைக்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். வியாபார ரீதியாக வசூலை பெருக்கிக் கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளனர். அதன்படி, ஜனவரி 11-ந் தேதியன்றே இந்தப் படத்தை வெளியிடவிருக்கின்றனர். முன்னதாக இந்த படம் ஜனவரி 12-ந் தேதி வெளியிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகின்றன. குறிப்பாக ‘பேட்பாய்’ என்ற பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது.

தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆந்திராவிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.  


கார்த்திக்கின் அடுத்த படம் அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை, சகுனியில் ஒர்க் அவுட் ஆன கார்த்தி-சந்தானம் ஜோடி இதிலும் உண்டு, கார்த்திக்கை கட்டிப்பிடித்து ஆடப்போகிறவர் அனுஷ்கா. படம் பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் இவை....

*கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம். அவரது உறவினர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்,

*கிராமத்திலிருந்து ஒரு வேலையாக சென்னை வரும் கார்த்திக் தனது தூரத்து உறவினரான சந்தானம் வீட்டில் தங்குகிறார். கார்த்திக்கை சுத்தமாக பிடிக்காத சந்தானம் அவரை வீட்டை விட்டு விரட்ட பல பிளான்களை போடுகிறார். அதில் மொக்கை வாங்குகிறார். இதுதான் காமெடி ஏரியா. வந்த இடத்தில் ஒரு நியாத்தை கேட்கப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளும் கார்த்தி அதிலிருந்து எப்படி மீண்டு தான் வந்த காரியத்தை முடிக்கிறார் என்பது ஆக்ஷன் பிளாக். இதற்கிடையில் அனுஷ்காவுடன் காதல் வெளிநாட்டு டூயட் எல்லாம் உண்டு.

*கார்த்திக் ஓடும் ரயிலின் கூறை மீது நின்று கொண்டு உயிரை பணயம் வைத்து சண்டை போட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 7 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ரயிலை வாங்கி அதனை மைசூர் டூ பெங்களூர் ரூட்டில் ஓடவிட்டு ஹெலிகாப்டரில் துரத்தி படம் எடுத்திருக்கிறார்கள்,

*அனுஷ்கா முதன் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். எதிரிகளோடு பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுகிறார்.

*அனுஷ்கா கேரவன் வேண்டும் என்று கேட்காமல் செட்டிலேயே திரைகட்டி உடை மாற்றி நடித்தாராம்.

*மிலிந்த்சோமன், சுமன், மகாதேவன் ஆகியோர் வில்லன் கூடாரத்தை சேர்ந்தவர்கள்.

*சென்னை, பாண்டிச்சேரி, சாலக்குடி, ஐதராபாத், விசாகபட்டினம், மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

*ஒரு பாடலுக்காக 12 செட் போட்டிருக்கிறார் கலை இயக்குனர் பிரபாகர்.

* படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். வாலி, பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.  


ஈரோடு  அபிராமி , ஆனூர் , சங்கீதா , அன்னபூரணியில் ரிலீஸ் ( 11 1 2013)

அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2013/01/blog-post_3065.html
 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg


2. கண்ணா லட்டு தின்ன ஆசையா? கோடம்பாக்கம் வேங்கீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் சினிமா உதவி இயக்குனர் நவீன்சுந்தர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி சினிமா இயக்குனர்களிடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். ‘அன்புள்ள சிம்பு’ என்ற கதையை நான் எழுதி வைத்திருந்தேன். அதை படமாக்குவதற்காக எனது நண்பர் நடிகர் ஸ்ரீநாத்திடம் கூறினேன். அவர் நடிகர் சந்தானத்திடம் இந்த கதையை கூறி சினிமாவாக எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறினார்.

அதன்படி மேற்கு மாம்பலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படப்பிடிப்பின் போது சந்தானத்தை சந்தித்து எனது கதையை கூறினேன். நடிகர் சிம்புவை அந்த படத்தில் நடிக்க வைப்பதற்கும் நான் விரும்பினேன். இதற்கு சந்தானம் உதவி செய்வதாக கூறி எனது கதையை வாங்கி படித்தார்.

இந்நிலையில் நான் கூறிய கதையை வைத்து எனது அனுமதி இல்லாமல் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை தயாரித்து அதில் சந்தானம் நடித்துள்ளார். சிம்புவும் அந்த படத்தில் நடித்திருக்கிறார். எனது சிந்தனையில் உருவான ‘அன்புள்ள சிம்பு’ கதையை திருடி இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதுபற்றி சந்தானத்திடம் தொடர்பு கொள்ள முயன்றபோது என்னை சந்திப்பதை அவர் தவிர்த்தார். அவருடைய செயல் ஒரு திருட்டு குற்றமாகும். எனவே சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 


http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kanna%20Laddu%20Thinna%20Aasaiya%20Movie%20Stills/87877497kanna_laddu_thinna_aasaiya_Movie-(4).JPG

-காமெடி நடிகர் சந்தானம் கதாநாயகராவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கும் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு வீழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் வெகு விமரிசையாக நடந்தது. படத்திலும் இவ்விழாவிலும் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஒரு நாயராக நடித்து இருக்கும் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கினார் சந்தானம். 


விழாவில் பேசிய சந்தானம், இப்படத்தை பற்றி சந்தானத்துடன் கூறியபோது அவர் கேட்ட முதல்கேள்வியே எப்போது படத்துக்கான விழா நடைபெறும் என்று தான். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக அவர் என்னிடம், எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள், குறைந்தது 5000 இன்விடேஷனாவது வேண்டும் என்று கேட்டார். உடனே நான் மொத்தமே 500 இன்விடேஷன் தான் அடித்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு ஒரு 50 இன்விடேஷன்களை கொடுத்தேன். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று இப்போது தான் புரிந்தது. இங்கு விழாவுக்கு பவர் ஸ்டார் தன்னுடைய ரசிகர்களை லாரியில் வரவழைத்து அழைத்து வந்துள்ளார். அவருக்காக விழாவுக்கு வந்த அவரது ரசிகர்களுக்கு எனது நன்‌றியை தெரிவித்து கொள்கிறேன் என்று போட்டு தாக்கினார்.

இவ்விழாவில் பேசிய பவர்ஸ்டாரும், சந்தானத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லாவதர் மாதிரி சந்தானம் முதல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வரை தனது ரசிகர்கள் என்று சொல்லி கலாய்த்தது அரங்கத்தையே அதிர செய்தது. ஆனால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஷங்கர், பவர்ஸ்டாரின் ‌பேச்சால் அப்செட்டாகி இருப்பார் போலும்...


தனது ஐ படத்தில் பவர்ஸ்டாருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து, தன்னையும் பவரின் ரசிகர் என்று சொல்லி பவர்ஸ்டாரின் புகைப்படமும் எடுத்துக் கொண்ட ஷங்கர் (தகவல் உபயம் பவர்ஸ்டார்) பவரின் இதுமாதிரி பேச்சால் அவரைப்பற்றி மேடையில் மறந்தும் மூச்சுவிடவில்லை ஷங்கர். இதில் வருத்தத்திற்குள்ளான பவரின் இரண்டு லாரி ரசிகர்கள் கூட்டம், பவர்ஸ்டாரை பற்றி பவர்ஸ்டாரை பற்றி பேசு... என்று கூச்சலிட்டும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தார் ஷங்கர்.


ஈரோடு ராயலில் ரிலீஸ்( 13 1 2013)

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/70/Samar_2012.jpg/220px-Samar_2012.jpg

3.  சமர் - "தீராத விளையாட்டு பிள்ளை க்கு பின், விஷாலும், இயக்குனர் திருவும், மீண்டும் இணையும், அதிரடி ஆக்ஷன் படம் சமர். இந்த படத்தில், விஷாலுடன் ஜோடி சேர்ந்திருப்பது, கோலிவுட்டின் "எவர்டைம் பேவரைட்டான, த்ரிஷா. மலையேறும் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு, வழிகாட்டும் "பாரஸ்ட் கைடு வேடத்தில் நடிக்கிறாரார், விஷால். சொந்த வேலையாக பாங்காக் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக, சில பிரச்னைகளில் சிக்குகிறார். அதிலிருந்து, அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை, பரபரப்பும், திருப்பமும் நிறைந்த காட்சிகளாக விவரிக்க காத்திருக்கிறதாம், சமர். இந்த படத்தில், சுனைனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு இசையமைத்துள்ள, யுவன் சங்கர் ராஜா, படம் நன்றாக வந்திருப்பதாக, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். விஷாலின் ஆக்ஷனும், த்ரிஷாவின் ரொமான்சும், நிறைந்திருக்கும் இந்த படம், இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

 http://i2.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/01/Vijayanagaram-New-Poster-Releasing-on-Pongal.jpg?fit=300%2C300

4.  விஜய நகரம் - இந்தப்படத்தைப்பற்றி எந்தத்தகவலும் கூகுள்ல இல்லை, ஒரு வேளை சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்றாங்களோ என்னவோ? 

http://moviegalleri.net/wp-content/gallery/puthagam-movie-audio-release-wallpapers/puthagam_movie_audio_release_wallpapers_posters_3520d17.jpg


5. புத்தகம் - சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் விஜய் ஆதிராஜ், தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் , புத்தகம் என்ற  தலைப்பில், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாகவும், புதுமுகம் மிஸ் இந்தியாவுக்கு தேர்ந்து எடுக்கப் பட்ட ராகுல் ப்ரீத் சிங் ஹீரேயினாகவும் நடிக்கின்றனர். படத்தில் ஏகப்பட்ட சின்னதிரை பிரபலங்கள் உள்ளனர், இசை ஜேம்ஸ் வசந்தன், மேஜர் கெளதம் டான்ஸ் மாஸ்டராகவும், உமா பத்மநாபன் ஹீரோயின் அம்மாவாகவும் , சந்தான பாரதி ஒரு முக்கிய ரோலிலும்.

http://www.teluguportals.com/wp-content/uploads/2013/01/review.jpg


6. NAYAK -Director: V V Vinayak

Cast: Ram Charan Teja, Kajal Agarwal, Amala Paul, Brahmanandam, Jayaprakash Reddy, Rahul Dev, Raghubabu, MS Narayana, Ashish Vidyarthi

The story of Ram Charan Teja's much anticipated movie Nayak is an old wine in new bottle, yet the mix of V V Vinayak's good direction and Ram Charan Teja's star power makes it a complete mass entertainer.

The plot revolves around the protagonist Cherry (Ram Charan) who in order to save his uncle Jilebi (Brahmanandam) falls into trouble with local don Gandipeta Babji (Rahul Dev). He accidently meets Gandipeta's sister (Kajal Agarwal) and falls in love. In the meantime, Cherry gets involved in a murder and the CBI goes after the actor. Therefore the rest of the story revolves around this cat and mouse game with a surprising twist in the second half.

Ram Charan Teja has matured as an actor and there is considerable improvement in his body language, histrionics and dialogue modulation. The actor already has established himself as a good dancer and this movie is no different. Especially in the songs Laila O Laila and Hey Nayak, his moves are matchless.

Out of the two female leads, Kajal Agarwal has a little scope of acting and she delivers her role well. Though her character played a key role, Amala Pal majorly adds to the glamour quotient of the film.

MS Narayana and Posani Krishna Murali 's comic timing is commendable.

Director V V Vinayak takes almost all the cinematic liberties in choreographing the action scenes and presents them on screen elaborately. Chota K Naidu's brilliant photography and Gautham Raju's taut editting keeps the audience glued to the movie.

Overall, Nayak is a good entertainer and will appeal to the mass audience.

 http://www.gulte.com/content/2012/12/news/Seethamma-Vakitlo-Sirimalle-Chettu-New-Posters-1591.jpg

7.  seethamma vakitlo sirimalle chettu - Rumors rife that the story of Venkatesh and Mahesh Babu starer 'Seethamma Vakitlo Sirimalle Chettu' has been leaked. Directed by Srikanth Addala, 'SVSC' is based on brother sentiment. It seems Venkatesh (Siri Mallikharjuna Rao) is a soft spoken man who loves to lead his life happily with his wife (Anjali) and family members. On the other hand, Mahesh Babu (Seetha Rama Raju), the brother of Siri Mallikarjuna Rao is a daring and dashing youth who pursues MBA in Visakhapatnam. One day, he falls for Samantha, the daughter of a rich businessman (Rao Ramesh) and marrys her with their family's consent. Eventually, their marriage broke up due to some minor disputes between the couple and this leads to the death of Seetha's father which results into a split between the brothers. 


Seethamma Vakitlo Sirimalle Chettu New Posters


 Siri Mallikharjuna Rao, with his pregnant wife leaves home following a ploy from Ahuti Prasad. Then, Seetha Rama Raju comes to know the fact that he is the adopted son of his parents and he comes into the rescue of his brother and family with the help of Brahmanandam. How he solves the issues and unites with the family forms the crux of the story.

How is the story of SVSC? And is this story enough for Venkatesh and Mahesh Babu to score a blockbuster? Only 'SVSC' release will answer these questions!


0 comments: