Friday, January 18, 2013

27 நட்சத்திரத்துக்கான ஒரு வருட பலன்கள்- 2013 -part 1 p

அஸ்வினி: உங்கள் நட்சத்திர நாயகன் கேது. இவர் ஞான காரகர். புத்தாண்டு பிறப்பு உங்கள் நட்சத்திரத்துக்குப் பரம மைத்ர நட்சத்திரத்தில் உதயமாவதால், இந்த ஆண்டு உங்கள் இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். புதிய தொழில் முனைவு வெற்றி தரும். கடன் கணிசமாகக் குறையும். மாமன் - மைத்துனர் உறவில் சந்தோஷம் நிலவும். சிலர் தாயகத்தை விட்டு வெளியூரில் () வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க நேரும். பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ இடமுண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும். படித்தவர்களின் நட்புக் கிட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9 / அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு /வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர், சரஸ்வதி / அதிர்ஷ்ட நிறம்: மல்டி கலர்ஸ்.

பரணி: உங்கள் நட்சத்திர நாயகன் சுக்ரன். இவர் போக காரகர். ஆம்! நீங்கள் அனுபவிக்கும் எல்லா சுகபோக சுக சௌக்யங்களுக்கும் அதிபதி ஆவார். அவரே உமது ராசிக்கு 2ம் இடம் தனம், 7ம் இடம் வாழ்க்கைத் துணை, தொழில் ஆகியவற்றுக்கும் உரியவர் ஆகிறார்.
புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் இந்த ஆண்டு சுபங்கள் நிகழும் என்பது விதி. இது தாராபலன் ஆகும். வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். குடும்பத்தில் சௌபாக்கியங்கள் பெருகும். விருந்து விசேஷம் என குதுகலமாகத் திகழும். சிலர் காதல் திருமணம் புரிவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி / அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் அனைத்து வெளிர் நிறங்களும்.

கார்த்திகை பாதம் 1: உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன். இவர் ஆத்ம காரகர். சூரியன்தான் உலக அறிவு அனைத்துக்கும் அதிபதி. உமது ராசிப்படி பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு அதிபதி ஆவார். உமது ராசியில் உச்ச பலம் பெறுபவர். புத்தாண்டு பிறப்பன்று வதை தாரை உதயமாகிறது. இது உகந்தது அன்று. இதனால் அரசு அலுவல்களில் சுணக்கம் உண்டாகும். எனினும் வருமுன் அறிந்து கவனமாக இருப்பதே நன்று. அரசு பணியிலிருப்போர் அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வருவது நலம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய பகவான் மற்றும் சுப்ரமண்யர் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கார்த்திகை 2,3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாதன் சூரியன். இவர் பிதுர்காரகர், ஆத்ம காரகர். உமது ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தான அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பின்போது ஆயில்ய நட்சத்திரத்தில் ப்ரத்யக்கு தாரையில் உதயம். இதனால் உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக இதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். தாய் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. இஷ்ட தெய்வ, குல தெய்வ நேர்த்திக் கடன்களை மறவாமல் நிறைவேற்றுவீர்கள். பிரதோஷ தினத்தில் சிவாலய தரிசனம் செய்க. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. ஓம் ஆதித்யாய நமஎன தினசரி காலையும் மாலையும் 16 முறை ஜெபிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரோகிணி: உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன், உங்கள் ராசியில் உச்ச பலம் பெறுபவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சாதகத்தாரையில் வருவதால் இந்த ஆண்டு தெய்வபலம் நிறைந்த ஆண்டாகத் திகழும். நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறும். இளைய சகோதர வழியில் ஏற்றம் கிட்டும். பெயரும் புகழும் சேரும். பெண்களின் ஆதரவு கிட்டும். சிலர் ஊர் விட்டுப் போய் வெளியூரில் ஜீவனம் புரியும் வாய்ப்புண்டு. சரளமான பணப்புழக்கம் கிட்டும். திரவிய லாபம் பெருகும். லலிதா சகஸ்ரநாமம் படிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6 / அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: அம்பிகை / அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை

மிருகசீரிடம் 1,2 பாதங்கள்: உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய். இவர் ரத்தகாரகர், சகோதர காரகர். உமது ராசிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீட்டுக்கும் அயன சயன போக ஸ்தானம் என்னும் 12ம் வீட்டுக்கும் உடையவர் ஆவார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். சகோதர வழியில் ஏற்றம் கிட்டும். நிலபுலன்களின் சேர்க்கை உண்டு. பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழ இடமுண்டு.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்குத் தீபம் ஏற்றி வழிபடவும். சக்திக்கவசம்’, ‘சஷ்டிக் கவசம்’, ‘மங்களச்சண்டிகை ஸ்லோகம்’, ‘ப்ரத்யங்கிரா ப்ரபாவம்போன்றவை படிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீதேவி கருமாரியம்மன் / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மிருகசீரிடம் 3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாதன் செவ்வாய். அவர் உமது ராசிக்கு 6 என்னும் சத்ரு ஸ்தானத்துக்கும் 11 என்னும் லாப ஸ்தானத்துக்கும் உரியவர். அவர் சகோதர காரகர், நில, புலன் என்னும் பூமி காரகர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் ப்ரத்யக்கு தாரையில் உதயமாவதால் எடுக்கும் முயற்சிகள் எதுவாயினும் அதில் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபடவும். சகோதர வழியில் சங்கடம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிட்டும். சத்ரு சம்ஹார வேல் பதிகம்படிக்க நன்று. இயலாதவர்கள், ‘வெற்றிவேல் உற்ற துணைஎன்று மனதுக்குள் ஜெபித்து வர வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9 / அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென் கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: யோக நரசிம்மர் மற்றும் தேவி கருமாரியம்மன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
திருவாதிரை: உங்கள் நட்சத்திர நாயகன் ராகு. இவர் யோக காரகர். திடீர் பதவி உயர்வு, திடீர் தனவரவு, எதிர் பாராத வெற்றி, வேறு மொழி பேசுவோரால் அனுகூலம் என தருபவர் ராகுவே ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் வருவதால் சுக சௌக்கியங்கள் பெருகும். மாமன் மைத்துனர் மூலம் நன்மை கிட்டும். சிலருக்குத் திடீர் திருமணம் ஆக இடமுண்டு. புதிய வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும். துர்க்கையம் மனைத் துதித்தால் துன்பம் பறந்தோடும். துக்க நிவாரண அஷ்டகம்படிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9 / அதிர்ஷ்ட திசை: வடமேற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: அய்யனார் () ஐயப்பன் / அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

புனர்பூசம் 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாதன் குரு பகவான். அவர் தனம் மற்றும் புத்திர காரகர். அவர் உமது ராசிக்கு 7 எனும் களத்திர ஸ்தானம் 10 எனும் உத்யோகம் மற்றும் கர்ம ஸ்தானம் எனும் இரு வீட்டுக்கும் அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் விபத்து தாரையில் வருவதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. திருமண வாழ்வில் எதிர்பாராத இன்னல் உண்டாகும். காதல் கை கூடுவதில் காலதாமதம் ஆகும். இன்னலிலிருந்து மீள்வதற்கு வியாழன் தோறும் மௌன விரதம் இருப்பது நலம். இயலாதவர்கள் குரு பகவானை நினைத்து ஏதாவது ஒருநாள் ஒரு மணி நேரமாவது மௌன விரதம் இருக்கவும். தட்சிணாமூர்த்தி அஷ்டகம்பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,4,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மேதா தட்சிணாமூர்த்தி () செந்தில் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் () மஞ்சள்
புனர்பூசம் 4ம் பாதம்: உமது நட்சத்திர அதிபதி குரு பகவான். அவர் தன புத்திர காரகர் ஆவார். அவர் உமது ராசிக்கு 6ஆம் இடமான ப்ராப்த ஸ்தானம் மற்றும் 9ஆம் இடமான பாக்ய ஸ்தானத்துக்கும் உடையர். புத்தாண்டுப் பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் வருவதால் நன்மையும் தீமையும் கலந்தே நிகழும். பூர்விக சொத்தில் வில்லங்கம் தீர இடமுண்டு. மாமன் - மைத்துனர் உறவில் சிறு சிறுப் பிரச்னைகள் வந்து அகலும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தம், ஏஜென்ஸி என வரும்போது அதில் உள்ள சட்டதிட்டங்களைக் கவனமுடன் படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுவது நன்று. கந்தசஷ்டி கவசம்’, ‘சண்முகக் கவசம்’, ‘சத்துரு சம்ஹார வேற்பதிகம்’, ‘கந்த குரு கவசம்’, ‘கந்தர் சரண பத்துபோன்ற நூல்களில் ஏதேனும் ஒன்றினை தினசரி பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு மற்றும் வடகிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம் - திருசெந்தூர் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

பூசம்: உமது நட்சத்திர நாயகன் சனி பகவான். அவர் உமது ராசிக்கு 7 என்னும் களத்திர ஸ்தானத்துக்கும், 8 என்னும் ஆயுள் ஸ்தானத்துக்கும் உடையவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சம்பத் தாரையில் வருவதால் சரளமான பணப்புழக்கம் உண்டு. கூட்டுத் தொழிலில் லாபம் மிகும். சீட்டு நடத்துவோர் மிகவும் கவனமுடன் கையாளவும். தேர்வுகள் சாதகமாகவே அமையும். வங்கிகளில் பணிபுரிவோர் பெயரும் புகழும் பெறுவர். தினசரி வெங்கடேச சுப்ரபாதம் படிக்கவும். () கேட்கவும். சுதர்ஸன காயத்ரி மந்திரம்தக்க குருமுகமாக உபதேசம் பெற்று ஜெபிப்பது நன்று. இயலாதவர்கள் ஓம் நமோ நாராயணாய நமஎன்று காலையும், மாலையும் 16 முறை ஜெபிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள் 3,4,6 / அதிர்ஷ்ட திசை: மேற்கு மற்றும் வடமேற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருப்பதி வேங்கடாஜலபதி / அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ஆயில்யம்: உமது நட்சத்திர நாதன் புதன். இவர் வித்யாகாரகர் மற்றும் தொழில் காரகர் ஆவார். உமது ராசிக்கு 3 ஆம் இடமான வீரிய விக்ரம் பாராக்ரமான ஸ்தானம், 12ம் இடம் எனும் அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் வருவதால் உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சியிலும் பிரயாணத்தின் போதும் பண பரிவர்த்தனையிலும் எச்சரிக்கை தேவை. பஜ கோவிந்தம், சுதர்ஸனாஷ்டகம் போன்ற ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 5,3,4 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு மற்றும் தென்கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாவிஷ்ணு / அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை
மகம்: உமது நட்சத்திர நாயகன் கேது. இவர் ஞான காரகர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் பரம மைத்ர தாரையில் உதயமாவதால் சகல சௌபாக்யம் உண்டாகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும். திருத்தல யாத்திரை செல்வீர்கள். நீண்ட கால நோய்க்கு செய்து வந்த மருத்துவம் பலன் தரும். இந்த ஆண்டு முழுவதும் உமது நட்சத்திர அதிபதி கேது பகவான் உமது ராசிக்கு 10ல் நட்புடன் சஞ்சரிப்பதால் செய் தொழிலில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒருமுறை கீழ்ப்பெரும்பள்ளம், காஞ்சிபுரம் சித்திர குப்த சுவாமி கோயில் சென்று வாருங்கள். விநாயகரை மன ஒருமையுடன் வழிபடுவது நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர், சித்ரகுப்தர் / அதிர்ஷ்ட நிறம்: மல்ட்டி கலர்ஸ்

பூரம்: உமது நட்சத்திர நாயகன் சுக்ரன். இவரை அசுரகுரு என்பர். இவருக்கு போக காரகர் என்ற அடைமொழியும் உண்டு. உமது ராசிக்கு 3 ஆம் இடமான வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானம் 10ஆம் இடமான காரிய () தர்ம ஸ்தானம் ஆகியவற்றுக்கு சுக்ரனே அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதல் சுபங்கள் உண்டாகும். கடன் கணிசமாகக் குறையும். உத்யோக வழியில் செய்து கொண்ட மேல்முறையீடுகளில் சாதகமானத் தீர்ப்பு கிட்டும். சிலர் வெளிநாடு செல்வர். வீடு, மனை, வாங்க இடமுண்டு. இளைய சகோதர வழியில் ஏற்றம் கிட்டும்.
ஒருமுறை கஞ்சனூர் சுக்ர ஸ்தலம், ஸ்ரீரங்கம், அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சென்று வரவும். வீட்டில் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ஒரு தட்டில் பச்சரிசி பரப்பி அதில் மகா லட்சுமி ஆவாஹயாமிஎன்று உச்சரித்தபடி ஓம்’ - என்ற பிரணவத்தை எழுதி அதன்மீது மஞ்சள் இட்டு அதன் மீது குத்து விளக்கு அலங்கரித்து வைத்து ஐந்துத் திரி போட்டு மகாலட்சுமி பூஜை செய்க. சந்தோஷமும் சாந்தியும் நிலவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி / அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
உத்திரம் 1ம் பாதம்: உமது நட்சத்திரநாதன் சூரியன். அவர் ஆத்ம காரகர். அவர் உமது ராசிநாதனும் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் வதை தாரையில் உதயமாவதால் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு இடமுண்டு. அரசுப் பணியிலிருப்போர், உயர் அதிகாரிகளிடம் சற்று பக்குவமாக நடந்து கொள்ளவும். பணம் கையாளும் பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடனிருப்பது நலம். ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வரவும். ஆதித்ய ஹிருதயம்பாராயணம் செய்யவும். பிரதோஷ வழிபாடு செய்க.
அதிர்ஷ்ட எண்: 1,3,5,9 / அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன் / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன். அவர் உமது ராசிக்கு விரையாதிபதி ஆவார். அவர் ஆத்மகாரகரும் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் வதை தாரையில் வருவதால் உடல் நலனில் கவனம் தேவை. அரசு வழியில் அல்லலுக்கு இடமுண்டு என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை சூரியனார் கோயில் சென்று வழிபட்டு வரவும். ஆதித்ய ஹிருதயம் () சிவபுராணம் பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ஹஸ்தம்: உமது நட்சத்திர நாதன் சந்திரன். இவர் மனம் காரகர், மாத்ரு காரகர் ஆவார். உமது ராசிக்கு 11 எனும் லாபஸ்தானத்துக்கு உரியவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாகிறது. மேலும் 11ம் ராசியில் உதயம். எல்லாம் நலமாக நடக்கும். இறையருள் கூடும். உமது மகன் () மகள் திருமணம் இனிதே நிகழும்.
லலிதா ஸகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, சக்திக் கவசம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நித்ய பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென் கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: அம்பாள் / அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
சித்திரை: 1,2 பாதங்கள்: உங்கள் நட்சத்திர நாயகன் செவ்வாய். அவர் ரத்த காரகர் மற்றும் சகோதர காரகர். உமது ராசிக்கு 3,8 ஆம் வீட்டுக்கு உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில் உதயமாவதால் புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. பிரயாணங்களின்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நலம். பெண்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். சகோதர உறவுகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். அரசியலில் ஈடுபட்டோர் தமது தோழமைக் கட்சியினருடன் உரசல் போக்கைத் தவிர்க்கவும். மேல் மட்டத்தினருடன், சுமுக உறவை கடைபிடிக்கவும்.
நரசிம்மரை வழிபட துன்பம் எதுவானாலும் தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போயிற்று என்று ஆகும். ஹரி ஹரி நரசிம்மா ஸ்ரீஹரி நரசிம்மா’- என்று தினசரி காலை மாலை இயன்ற அளவு ஜெபிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம் : யோக நரசிம்மர் மற்றும் மகாவிஷ்ணு / அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சித்திரை 3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். அவர் இரத்த காரகர், சகோதர காரகர், தைரிய காரகர் ஆவார். உமது ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் 2ஆம் வீட்டுக்கும் களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் வீட்டுக்கு உடையவர் செவ்வாய். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில் வருவதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். பண பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கூட்டாளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். தம்பதியர் கருத்தொற்றுமையுடன் நடந்து கொண்டால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். சகோதர உறவுகளிடம் விரும்பத்தகாத சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. சக்தி கவசம்’, ‘கந்த சஷ்டி கசவம்’, ‘சத்ரு சம்ஹார வேற்பதிகம்’, ‘தேவி கருமாரியம்மன் கவசம்போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நித்ய பாராயணம் செய்யவும் இன்னல் தீரும். சாந்தி நிலவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாலக்ஷ்மி, தேவி கருமாரியம்மன் / அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, ரோஸ், ஆரஞ்சு
சுவாதி: உமது நட்சத்திர நாயகன் ராகு. இவர் யோக காரகர். எதிர்பாராத தன வரவு, எதிர்பாராத சந்திப்பு, அட்வான்ஸ் டெக்னாலஜி சாதனங்கள் போன்றவற்றுக்குக் காரணமாவது ராகு. புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் எதிர்பாராத தனவரவுக்கு இடமுண்டு எனினும் பணம் கையாளும்போது கவனம் தேவை. வங்கிகளில் பணம் பரிவர்த்தனை பொறுப்பில் பணிபுரிவோர் மிக்க எச்சரிக்கையுடன் பணிபுரிதல் அவசியம்.
துர்க்கைச் சித்தர் அருளிய துர்க்காஷ்டகம், துக்க நிவாரண அஷ்டகம் மற்றும் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நித்ய பாராயணம் செய்க. இயலாதவர்கள், ‘ஜெய ஜெய துர்க்காஎன்றோ, ‘ஓம் சக்திஎன்றோ தினசரி 108முறை எழுதவும். துர்க்கை வழிபாடு துன்பத்தை விரட்டும். மகிழ்ச்சியைத் தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6 / அதிர்ஷ்ட திசை: வடமேற்கு / அதிர்ஷ்ட நிறம்: புகை வண்ணம் மற்றும் சாம்பல் நிறம் / அதிர்ஷ்ட தெய்வம்: துர்க்கை

-  continue 


prt 2- http://www.adrasaka.com/2013/01/27-2013-part-2.html

0 comments: