Tuesday, January 08, 2013

ரேப் செய்ய வந்தால் கொலை செய்யலாம் -டி ஜி பி பர பரப்புப்பேட்டி

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் பயணிகளிடம் நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஏ.கே.கான் உத்தரவின் பேரில் கடப்பா மாவட்டத்தில் முதன்முதலாக விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.

பஸ் நிலையத்தில் பெண் கண்டக்டர்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து துண்டு பிரசுரங்களை விநி யோகித்தார்கள். அதில், தனியார் பஸ்சில் பயணம் செய்ததால்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு அந்த கொடூரம் நடந்துள்ளது.

அரசு பஸ்சில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எனவே நீங்கள் அரசு பஸ்சில் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுக்க இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்க இருக்கிறது.

இதற்கிடையே ஐதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள ஐ.டி. பார்க்கில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கலந்து கொண்டார்.

ஆண்களின் கற்பழிப்பு கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி பதில் கூறும்போது, பாலியல் செய்யும் ஆண் களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது.

கொலை ஒரு குற்றமாக இருந்தாலும் எந்த பின்னணியில் கொலை நடந்தது என்பதை ஆராய்ந்துதான் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறினார்.

ஈவ்டீசிங் சட்டத்தை கடுமையாக்க திட்டமிட்டு இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் மின்னிமாத்யூ கூறினார்.

குண்டூரில் உள்ள மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நகர போலீஸ் சூப்பிரண்டு ரவிகிருஷ்ணா கூறும்போது, உங்களுக்கு எதிராக கொடுமை செய்யும் ஆண்களை தைரியமாக எதிர்க்க வேண்டும். அவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். தகவல் வந்த அடுத்த நிமிடத்தில் போலீசார் அங்கு நிற்பார்கள். பெண்களை நாம் சக்தியாக வணங்குகிறோம். அப்படிப்பட்ட உங்களுக்கு கொடுமை வரும்போது தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மிளகாய் பொடி பொட்டலம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
 
 
மாணவியை கற்பழித்தவர்கள் தற்கொலைக்கு முயற்சி?: திகார் ஜெயிலில் கண்காணிப்பு தீவிரம்
 
 
 
புதுடெல்லி, ஜன. 5-
 
டெல்லி மாணவியை ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களில் மைனர் மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். மற்ற 5 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கற்பழிப்பு குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகள் தாக்கி விட கூடாது என்பதற்காக திகார் ஜெயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான ராம்சிங் மூன்றாம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
 
பவன், அக்ஷய் இருவரும் 4-ம் எண் ஜெயிலிலும், வினய், முகேஷ் இருவரும் 7-ம் நம்பர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் மற்ற கைதிகள் யாருடனும் பேசுவதில்லை.
 
சாப்பிடும்போது இவர்கள் 5 பேரும் தங்களுக்குள்ளே பேசி கொள்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் திகார் ஜெயிலுக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளும் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.
 
இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகள் 5 பேர் மீதும் இரவு பகல் பாராமல் போலீசார் பார்வை திரும்பி உள்ளது. அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுகுற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு
 
 
டெல்லி, ஜன.4-
 
டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் ஆகிய 5 பேர் மீது போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
மிக கொடூரமான குற்றம் செய்துள்ளதால் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் வலியுறுத்தியுள்ளனர். எனவே 5 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
6-வது குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அவனது உண்மையான வயதை கண்டுபிடிக்க அவனுக்கு எலும்பு  மஜ்ஜை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
 
அவன் 18 வயதை பூர்த்தி செய்து மேஜர் ஆக இன்னும் 5 மாதம் இருப்பதாக தெரிகிறது. இது அந்த மைனருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை மாற்றியுள்ளது.
 
தற்போதைய நிலையில் சிறுவர் குற்ற சட்டப்படி மாணவியை கற்பழித்த 17 வயது மாணவருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் ஜெயில் தண்டனை கொடுக்க முடியுமாம். இந்த காலக்கட்டத்தில் அவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டால், அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவான்.
 
18 வயதுக்கு பிறகு அவனை சீர்திருத்த பள்ளியில் வைத்திருக்க இயலாது. மேலும் மேஜர் என்று சுட்டி காட்டி தண்டனை அளிக்கவும் இயலாது என்கிறார்கள். சட்டத்தில் உள்ள இந்த சில பிரிவுகளினால் மைனர் சிறுவன் உயிர் தப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மாணவியை கற்பழித்த 6 பேரில் இந்த மைனர்தான் மிக, மிக கொடூரமாக நடந்து கொண்டவன். மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்த அவன் அவர் வயிற்றில் கம்பியால் குத்தி மரணத்துக்கும் காரணமாக உள்ளான்.
 
இத்தகைய கொடூர மைனர் சில மாதங்களில் சுதந்திரமாக வெளியில் வந்து விடுவான் என்பதை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் அவனது உண்மையான வயதை உறுதி செய்ய டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
THANX - MALAIMALAR

1 comments:

Siva said...
This comment has been removed by the author.