Thursday, January 03, 2013

பூலோகம் - ஜெயம்’ ரவி, த்ரிஷா -இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர். பேட்டி

 http://kollycafe.com/wp-content/uploads/2012/09/boologam-movie-onlocation05.jpg
 
 
வடசென்னையின் ரிங் கிங்!

கி.கார்த்திகேயன்
 
நான் பக்கா மெட்ராஸ்காரன். நான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும். வடசென்னையோட விருப்பமான விளையாட்டு என்னன்னு சொல்லுங்க?'' - எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவர், பதிலுக்குக் காத்திருக்காமல் அவரே சஸ்பென்ஸ் உடைத்தார். ''ஃபுட்பால், கபடி, கில்லி... இப்படித்தானே யோசிப்பீங்க. அதெல்லாம் இல்லை... பாக்ஸிங்தான் அவங்களோட நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலேயும் ஊறின விளையாட்டு. இதை நான் சும்மா என் அனுபவத்தை மட்டும்வெச்சுச் சொல்லலை. அரை நூற்றாண்டு வரலாற்று
 
 
 
ஆதாரங்களோட சொல்றேன்'' என்று குறுந்தாடி தடவிப் புன்னகைக்கிறார் கல்யாண கிருஷ்ணன். 'பூலோகம்’ படத்தின் இயக்குநர். அறிமுக வாய்ப்பிலேயே 'ஜெயம்’ ரவி, த்ரிஷா எனக் கவனிக்கவைக்கும் காம்பினே ஷனுடன் களம் இறங்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர்.  
 
  ''ஆச்சர்யமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் வட சென்னையின் முகம். நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை... இப்படி வட சென்னையில ஏகப்பட்ட குத்துச் சண்டைப் பரம்பரைங்க இருக்கும். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணி, பொழுதுபோக்கு, தொழில், காதல் எல்லாமே பாக்ஸிங்தான். வருஷம் முழுக்க புஷ்டியான சாப்பாடு சாப்பிட்டுட்டு குஸ்தி போட்டுட்டே இருப்பாங்க.



நிறைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்ல, 'வட சென்னையில் மாபெரும் குஸ்திப் போட்டி’னு போஸ்டர்கள் பாஸிங்ல போகும். எந்தப் பரம்பரை வீரர் சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு ஏரியாவுல மவுசு. அப்படி ஒரு பரம்பரையைச் சேர்ந்த 'ஜெயம்’ ரவி, ஏரியாவுக்குள்ள அவருக்கு இருக்கிற பிரச்னைகள், த்ரிஷாவுடனான காதல், சர்வதேச சவால்கள்னு... ஒரு வாழ்க்கையையே சினிமா ஆக்கியிருக்கேன்!''




''ஜனநாதன் ரொம்ப சின்சியரான சினிமா பண்ணுவார். அவர்கிட்ட இருந்து வந்த உங்ககிட்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே?''



''சினிமாவில் என் குரு, ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஜனா சார்தான். நான் 20 வருஷமா சினிமாவுல இருக்கேன். என் அப்பா, அம்மா எல்லாருமே சினிமாவில் இருந்தவங்கதான். அதனால ஒரு தொழிலா சினிமாவைப் பார்த்துட்டு இருந்தவனுக்கு, 'அது ஒரு கலைடா... அது ஒரு வாழ்க்கைடா’னு புரியவெச்சவர் ஜனா சார்தான்.



அப்புறம் சினிமாவை நான் பார்த்த பார்வையே வேற. 'இயற்கை’, 'ஈ’, 'பேராண்மை’ படங்களின் திரைக்கதையில் என் உழைப்பும் இருக்கு. அதுக்கு மதிப்புக் கொடுத்தோ என்னவோ, 'பூலோகம்’ படத்தின் கதைக்கு ஜனா சாரே வசனம் எழுதுறார். அந்த வகையில் ஜனா சாரோட தாக்கம் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனா, அவர் எடுத்ததைவிட சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனா, ஒரு முதல் பட இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு இது எல்லாத்தையும் கணிக்கிறப்போ, 'பூலோகம்’ தான் எனக்கு பெஸ்ட் ஓப்பனிங்!''

 http://redcapsica.com/gallery_images/original/image_3174.jpg


'' 'உனக்கும் எனக்கும்’ படத்துல 'ஜெயம்’ ரவி - த்ரிஷா ஜோடி ஜாலி கேலியாக் குறும்பு பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரெண்டு பேருமே வேற மோல்டுல இருக்காங்க. அவங்களுக்கேத்த ஹோம் வொர்க் கொடுத் தீங்களா?''



''நிச்சயமா! ஒரு பாக்ஸர் இன்டர்நேஷனல் கேம்ல ஜெயிக்கணும்னா, 20 வருஷம் போரா டணும். அந்த 20 வருஷப் போராட்டம் ஒரு பாக்ஸரை எப்படி மாத்தியிருக்கும்? அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு.
 
 
 
 
 சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு!'' 


நன்றி - விகடன்


http://www.southdreamz.com/wp-content/uploads/2012/05/Trisha-Hot-in-Dammu-Stills-1.jpg

0 comments: