Tuesday, January 01, 2013

2012 - டாப் 10 அழகிகள்

உலக நாயகிகள்!

ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலிகளை ஓரங்கட்டிவிட்டது அழகிகள் படை. உலகின் டாப் செக்ஸி லிஸ்ட், பியூட்டி லிஸ்ட், காஸ்ட்லி லிஸ்ட் என அனைத்துப் பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும் டாப் 10 பட்டாம்பூச்சிகளின் இனிய இன்ட்ரோ இங்கே... 


செலினா கோம்ஸ்

'ஸ்பை கிட்ஸ்’ படம் மூலம் சின்னதாக அறிமுகமாகி, பரபர வளர்ச்சி அடைந்து 20 வயதுக்குள்ளாகவே 'வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம் வென்ற ஏஞ்சல். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்தவருக்கு 'விசார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸ்’ படம் பெரிய பிரேக்.  இடையில் பாப் பாடகர் ஜஸ்டின் பைபருடனான இரண்டு வருட டேட்டிங், பிரிவு, மீண்டும் காதல் எனக் காதல் பஞ்சாயத்துக்கும் பஞ்சம் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இயக்கத்தில் ஈடுபாடு காட்டும் செலினா, 'ப்யூர் லவ் வெயிட்ஸ்’ என்ற எழுத்துக்கள் பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். யார் எங்கே காத்திருக்கிறார்களோ!
வெனஸா ஹட்ஜென்ஸ்

ட்டு வயதிலேயே மேக்கப் போட்டு போஸ் கொடுக்க ஆரம்பித்த வெனஸா, 'பலானா பலான’ விஷயங்களில் பிரபலம். படுக்கையறையில் அவரை அவரே எடுத்துக்கொண்ட செம செக்ஸி படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்த, அதுவரை அவர் நடிப்பதற்கென கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து கழட்டிவிடப்படும் நிலை உண்டானது. ''அது என் அனுமதி இல்லாமல் வெளியான படங்கள். எக்ஸ்கியூஸ்மீ!'' என்று சமாளித்தார் ஐஸ்க்ரீம் அழகி. படங்களை லீக் செய்தது யார் என்பதை அறிய எஃப்.பி.ஐ. ஆட்கள் விசாரிக்க வந்ததெல்லாம் டாப்பிக்கல் தகராறு. ஹாலிவுட்டின் பிரபலப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரித்திருக்கும் வெனஸா, 22 வயதுக்குள் வாழ்க்கையின் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்துவிட்டதாக அலுத்துக்கொள்கிறார். ''வாழ்க்கை போரடிக்கிறது!'' என்று அடிக்கடி சொல்பவர், அப்படி உணரும் தருணங்களில் தனது காமாசோமா வீடியோக்களை இணையத்தில் அப்லோடுவார். அதை முழுக்கப் பார்த்து ரசித்துவிட்டு, மறக்காமல் திட்டிக் குவித்துவிடுவார்கள் இணைய தலைமுறையினர்!
விக்டோரியா ஜஸ்டிஸ்

கிறங்கடிக்கும் அழகையும் தாண்டி உருகவைக்கும் கேரக்டர், விக்டோரியா ஜஸ்டிஸ். நடிப்பு மீது இவருக்கு இருந்த தீராக் காதலால், இவரது குடும்பமே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தது. குடும்பத்தின் நம்பிக்கையைப் பொய்க்காமல் நடிக்கத் துவங்கி, இப்போது வருடம் மும்மாரி விருது மழை பொழிகிறது. பன்னிரண்டாவது வயதிலேயே 'சிறந்த நடிகை’ விருது தட்டியிருக்கிறார். ''என் 17 வயதில் எனக்கு இருந்த சுதந்திரமான சூழல் இப்போது பல பெண்களுக்குக் கிடைப்பது இல்லை. அதை அவர்களுக்கு உருவாக்குவதற்காகப் பாடுபடுவேன்!'' என்று சொல்லி பெண்கள் முன்னேற்றத்துக்காக அமெரிக்கா முழுக்கச் சுற்றுகிறார். ''உங்கள் கனவைச் சிதைக்க யாருக்கும் அனுமதி அளிக்காதீர்கள்!'' - இதுதான் விக்டோரியாவின் வேதம்.
எம்மா ஸ்டோன்

ச்சைக் கண் பளிங்குப் பொண்ணு. 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ படத்தில் நடித்ததன் மூலம் அதீத லைம்லைட் பெற்றவர். சினிமாவுக்கு வரவில்லை என்றால், பத்திரிகையாளர் ஆகியிருப்பேன் என்று சொல்பவர், கடந்த ஒரு வருடமாக 'ஸ்பைடர் மேன்’ பட ஹீரோவுடன் கோயிங் ஸ்டெடி. கூந்தலை பிரவுன், சிவப்பு என விதவிதமாக நிறம் மாற்றிக்கொள்வது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு.
ஜெனிஃபர் லாரன்ஸ்

'மிகவும் திறமையான இளம் நடிகை’ என்று ஜெனிஃபரை அமெரிக்கா கொண்டாடுகிறது. 'எக்ஸ் மேன்’, 'தி ஹங்கர் கேம்ஸ்’ படங்களில் அதிரடி செய்ததன் மூலம், 'எப்போதைக்குமான ஆக்ஷன் ஹீரோயின்’ என ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸுடன் தேவதைக்குக் காதல். 'உலகிலேயே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தக்கூடிய மனிதர் நிக்கோலஸ்தான்!’ என 'உருகுதே மருகுதே’கிறார்!
க்ரிஸ்டன் ஸ்டூவர்ட்

க்ரிஸ்டன் ஸ்டூவர்ட் என்பதைவிட 'பெல்லா’ என்றால் உலகமே பாசப் பார்வை பார்க்கும். டிராகுலா கதையான ட்வைலைட் படங்கள் மூலமாக உலகப் பிரபலம் அடைந்த ஹோம்லி ஏஞ்சல். தனது 19-வது வயதில்தான் ஹைஸ்கூல் படிப்பையே முடித்தார். ட்வைலட் பட நாயகன் ராபர்ட்டுடன் இவருக்கு நிஜத்திலும் வளர்ந்த காதல் உலகம் அதிகம் விவாதிக்கும் அந்தஸ்து பெற்ற செய்தி. இப்போது க்ரிஸ்டன் பிற ஆண்களுடனும் கெமிஸ்ட்ரி பாராட்டுவதால், இருவருக்கும் இடையே லடாய்... கடாய்!
மேகன் ஃபாக்ஸ்

ந்து வயதில் மேடை நாடகத்தில் தொடங்கிய கலைச் சேவை, பதின்பருவ வயதுகளில் பல மில்லியன்கள் சம்பளம் வாங்கும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஜெனிஃபர்ஸ் பாடி படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேசக் கவனம் ஈர்த்தவர். உடல் முழுக்க விதவிதமாக டாட்டூ குத்திக்கொள்பவர், காதலன் பிரையன் க்ரீனின் பெயரை இடுப்பில் பதித்திருக்கிறார். வால் மார்ட் கடை ஒன்றில் ஷாப்பிங் செய்யும்போது சில மேக்கப் அயிட்டங்களைத் திருடி, மாட்டிக்கொண்டு முழித்தது மேகனின் சாதனைகளுள் ஒன்று!
டக்கோடா ஃபேன்னிங்

'தெய்வத் திருமகள்’ படத்தின் ஒரிஜினல் 'ஐ யாம் சாம்’ படத்தில் குட்டி நிலாவாக நடித்த பியூட்டி. ''இயக்குநர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்'' என்று சொல்லும் டக்கோடா, இப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் பொம்மைகளை வாங்கிக் குவிக்கிறார். 'இவ்வளவு கலாட்டா செய்கிறீர்கள். ஆனால், 'ஐ யாம் சாம்’ படத்தில் எப்படி அவ்வளவு சீரியஸாக நடித்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, 'நான் வளர்க்கும் தங்க மீன் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வேன். கண்ணீர் பொலபொலவென வந்துவிடும்!'' என்றார் சமத்தாக!
அன்னா சோபியா ராப்  

டிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, 'சினிமா... சினிமா’ என அழுது அடம்பிடித்து நடிக்க வந்தாலும், 42 ஆடிஷன்களுக்குப் பிறகும் சினிமா கதவு திறக்கவே இல்லை அன்னாவுக்கு. இப்போது அன்னாவின் கால்ஷீட் 2015 வரை ஃபுல். 'சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’ இவரது லேட்டஸ்ட் ஹிட். இவர் அணியும் எந்த ஆடையையும் சிலாகித்து வர்ணித்துப் போற்றிப் பாராட்ட பெரும் கும்பல் உண்டு இணையத்தில். குழந்தைத்தனம் மாறாத முகத்தாலேயே பலரைக் கவர்ந்த அன்னாவை டூ-பீஸ் ஆடையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதனாலேயே இப்போதெல்லாம் டவுசர் சட்டை தாண்டி, கவர்ச்சி எல்லை தாண்டுவதே இல்லை.
எல்லி ஃபேன்னிங்

'ஐ யாம் சாம்’ புகழ் டக்கோடா ஃபேன்னிங்கின் அன்புத் தங்கை எல்லி. ஹாலிவுட்டின் மிக மிகக் குட்டிப் பாப்பா ஹீரோயின். ஹாலிவுட் சினிமா வரலாற்றில் முதல் முறையாக மூன்றரை வயதிலேயே பிரீமியர் ஷோவில் கலந்துகொண்ட ஹீரோயினான இவருக்கு இப்போது வயது 14. தனது ஏழாவது பிறந்த நாளுக்கெல்லாம் தனது மொத்தக்  குடும்பத்தையும் தனது செலவில் ஆஸ்திரேலியா டூர் அழைத்துச் சென்றவர். சினிமாவில் ஒன்றாகப் பயணம் துவக்கி இப்போது வெவ்வேறு பாதையில் அக்காவும் தங்கையும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும், இப்போதும் எனக்குப் பிடித்த நடிகை என எல்லி சொல்வது அவரது அக்காவைத்தான்!நன்றி - விக்டன் 

1 comments:

Unknown said...

பாஸ் யாரு வந்தாலும் மோனிக்கா பெல்லுசி angelina ஜோலி ஷெரொன் ஸ்டோன் நிகோல் கிட்மன் கேட் வின்ஸ்லெட் போல வருமா